தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.
முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.
பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார். முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.
சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்
பதினெண்பேரை காணும் மந்திரம்" - ஓம் சிங்ரங் அங்சிங்
தமிழர்களின் ஞான பொக்கிஷமான ஞானக்கோவையில் இருந்து பதினெட்டு சித்தர்களை தரிசிக்கும் முறையை நிஜானந்த போதம் பின்வருமாறு கூறுகிறது.
நிஜானந்த போதம் : 41
செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே சகலசித்துக் குதவியாமே...
"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி
நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து
நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக
ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு
உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே
ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம
ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம
ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம
ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம
ஓம்நங்கிலி நமவம்வசி வயநம
ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்
அங்லங்றிங் சிவய நம
ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்
சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா
நசிநசி சிவய நம ஓம்
மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்
மசிமசிவய மசிவய நமஓம்
றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்
லங்லங் ருங்றிங் சிவய நமஓம்
லாலீலூலம் சிங்சிவய நமஓம்
ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை
உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்
தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்
சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்
ஆம் சிவசிவ யோகமருளே காணும்
அட்டமாசித்து களுமாடலாகும்
ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்
ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"
இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர்
மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.
முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"
- அகத்தியர் 12000 -
இலக்குமியின் பீஜ மந்திரமான "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - "இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.
வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரிஎன்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"
- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - "அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.
இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.