கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு முதன்முறையாக வெளியாகும் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது அஜித்தின் என்னை அறிந்தால் படம்.
சத்யதேவ் IPS என்ற பெயரில் தயாராகி இருக்கும் இப்படம் மார்ச் 3ம் தேதி வெளியாகிறது, அதுவும் 60 திரையரங்குகளில்.
இந்த தகவல் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியுள்ளது. கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். அதிலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் அருண் விஜய்யின் சினிமா பயணம் வளர்ந்தது என்று கூறலாம்.
தமிழில் மாஸ் கலெக்ஷனை பெற்ற இப்படம் கன்னடத்தில் நல்ல வசூல் குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.