நகரத்தார்கள் என்னும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்று தமிழகத்தின் மிகப் பெரிய பிஸினஸ் சமூகமாக விளங்குகின்றனர். தமிழ்நாட்டில் இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் சோழமண்டலத்தை நடத்தி வருபவர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
செட்டி நாடு குழுமமும் ஸ்பிக் நிறுவனமும் நகரத்தாரின் பிஸினஸ் திறமைக்குப் பெருமை சேர்க்கும் வேறு சில உதாரணங்கள். இவை தவிர, இன்னும் பல நிறுவனங்கள் தமிழகம் முழுக்க லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த வளர்ச்சியானது ஏதோ ஐம்பது, நூறு ஆண்டுகளில் வந்துவிடவில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாகவே பிஸினஸ் துறையில் நகரத்தார் சமூகத்தினர் தொடர்ந்து இருந்து வருவதாலேயேதான் இன்றைக்கு தலைசிறந்த பிஸினஸ் சமூகமாக இருக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்த சமூகம் கண்ட மிகப் பெரிய மாற்றமே இன்றைய நவீன பிஸினஸ் உலகில் முன்னணியில் இருக்கத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் தந்திருக்கிறது. அந்த வரலாற்றுப் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம்.
பதினாறாம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்தது விஜய நகரப் பேரரசு. நாயக்க மன்னர்களின் நேரடி ஆட்சியில் இருந்த மதுரையை முகலாய மன்னர்கள் பிடித்தனர். ஆனால், தஞ்சாவூர் மட்டும் மராட்டிய மன்னர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இதற்கிடையே டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.
ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், பிஸினஸ் உலகிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, ஏற்றுமதி என்கிற புதிய விஷயம் வேகமாக நடக்க ஆரம்பித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கிரேக்கத்திற்குச் சென்று பொருட்களை விற்றுவிட்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் சொன்னாலும் பெரிய அளவில் இது வளரவில்லை. ஆனால், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு இங்கிருந்து பெருமளவிலான பொருட்களை கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக பல பொருட்களுக்கு புதிய தேவை பிறந்தது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது உப்பு. கடலை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உப்பளங்கள் இருந்தன என்றாலும், ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கும் பிஸினஸ் சூடு பிடித்தது. இந்தத் தொழிலில் இறங்கி, ஒரு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் நகரத்தார்கள்.
இதற்கடுத்து அரிசி வியாபாரம். நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தியான அரிசியை தென் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கும், இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கிற பிஸினஸிலும் நகரத்தார்கள் பெரும்பங்கு வகித்தனர்.
ஆனால், இங்கிலாந்து நாட்டுக்காரர்களுக்கு இந்த பொருட்கள் மீதெல்லாம் அதிக நாட்டமில்லை. இங்கிருந்து அவர்கள் அதிகம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது பருத்தியைத்தான். தமிழகத்தில் கோவை உள்பட பல பகுதிகளில் பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு நிறைய பருத்தி தேவையாக இருந்தது. பருத்தியை துணிகளாக நெய்யும் இயந்திரங்களையும் அவர்கள் உருவாக்கி இருந்தனர். இங்கிருந்து பருத்தியைக் கொண்டு சென்று, அதை துணியாக்கி மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விற்பதன் மூலம் பெரும் லாபம் சம்பாதித்தனர் ஆங்கிலேயர்கள். இந்த பருத்தி வியாபாரத்திலும் நகரத்தார்கள் முன்னணியில் இருந்தனர்.
1815-ல் மதுரையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கம்பட்டியில் அர்ஜுன பெருமாள் அம்பலக்காரர் என்பவரின் வீடு இருந்தது. பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்கள் இந்த வீட்டில் கூடினார்கள். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, பருத்திகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஆர்டர்களை பெற்று வந்தார்கள். இப்படி செய்து வந்த வியாபாரத்தில் 743 வராகன்கள் லாபம் கிடைத்ததாக இங்கிருந்து கிடைத்த பனையோலைகள் சொல்கின்றன. இந்த லாப பணத்தை வைத்து நரசிங்கம்பட்டியில் பொதுக்கிணறு ஒன்றும் வெட்டப்பட்டது. இந்த கிணறானது 'நகரத்தார் ஊரணி’ என அழைக்கப்பட்டது.
இப்படி பல்வேறு பிஸினஸ்களை நகரத்தார்கள் வெற்றிகரமாகச் செய்துவர, அவர்களிடம் நிறைய பணம் சேர ஆரம்பித்தது. பிஸினஸுக்குப் போக மேலதிகமாக உள்ள இந்த பணத்தை வேண்டும் என்பவர்களுக்கு கடனாக தரும் வழக்கமும் நகரத்தார்கள் செய்ய ஆரம்பித்தனர். குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் பாதுகாப்புப் படைகளுக்கான செலவு செய்யவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் கடன் வாங்கினார்கள். இந்த கடனை திரும்பத் தரமுடியாதவர்கள், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட சில கிராமங்களையே கொடுத்தனர். ராமநாதபுர மன்னர் சேதுபதி வாங்கிய கடனை திரும்பத் தரமுடியாததால் சில மாகாணங்களை தந்ததாகச் சொல்கிறது வரலாறு.
இந்த காலகட்டத்தில் பர்மாவை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். பர்மாவுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொல்கத்தா வழியாக செல்ல ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து பர்மாவிலும் காலடி எடுத்து வைத்தனர் நகரத்தார்கள். 1870 முதல் 1930 வரையிலான 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நகரத்தார் பெரும் பணம் சேர்த்தனர். எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?
thanks vikatan + muthaiah singapore
உலகில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உருவான, வளர்ந்த ,தேய்ந்த வரலாறுகள் இருக்கும்.ஒவ்வொரு சமூகத்திலும் குறைகள்,நிறைகள் இருக்கும். குறைகளை எண்ணி வெட்கப்படுதலோ அன்றி நிறைகளை எண்ணி கர்வப்படுதலோ மனித அறியாமை.குறைகளும்,நிறைகளும் கொண்டவன் தானே மனிதன்.ஒரு தனிமனிதனுக்குள்ளேயே நூறு குறை,நிறை எனும் போது ஒரு சமூகத்தின் குறைகளுக்கு வெட்கப்படுவது அர்த்தமற்றது. அதனால் ஒரு சமூகம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது என் வரையில் ஒரு அறிவுத்தேடல். தமிழ் நாட்டின் ஒவ்வொரு சமூக மக்களும் ஒரு குறு நில மன்னனின் வம்சாவளிகளாக, அவர்கள் வழி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்று என் ஐயா (தாத்தா) கூறுவார்கள்.உலக வரலாற்றைப் பாடம் படிக்கும் ஒவ்வொரு சமூக மக்களும் தங்களது வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழ்நாட்டின் வரலாறு கிடைத்துவிடும்..தமது பழம்பெருமைகளை அறிந்து கொண்டால் குறைகளை அகற்றி,நமது முன்னோர்களின் ராஜபாட்டையில் வழிதவறாது நாம் நடையிட இயலும். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை நான் வலைப்பூவில் இடுகையிடுவதன் காரணம் -- நகரத்தார் மக்களின் வரலாறின்றி எங்கள் சமூக வரலாற்றை எழுத முடியாதது ஒன்று.ஒரு சமூகத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு வரலாறா? என்ற திகைப்பும்,பிரமிப்பும் ஒரு காரணம்.
கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.
"நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்"
என்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள். சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.
1400 வருடங்களுக்குப்பிறகு சோழ வம்சத்திலும் ஒரு புல்லுருவி நகரத்தார்களுக்கு எதிராகத் தோன்றினான். பூவந்திச்சோழன் என்னும் அந்த அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி செய்துகொண்டார்கள் என்று 'நாட்டுக்கோட்ட நகரத்தார் சரித்திரம்' கூறுகிறது.ஆனால் ஆச்சிமார்கள் கூறுகையில் பல தேசங்களுக்கும் கொண்டுவிற்கப்போன ஆண்மக்கள் திரும்பும் முன் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டான கடற்கோள் அழிவால் நகரத்தார் மக்களை கடல் கொண்டதாகக் கூறுவார்கள். ஒரு வேளை சிறியவர்களிடம் இந்தக் கொடுமைகளைக் கூற மனம் விழையாது மாற்றிக் கூறியிருக்கலாம்.
ஒரு புத்தகத்தில் படித்த மனதை விட்டு நீங்காத ஒரு கருத்து. பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி குடும்பத்தினர்,பட்டினத்தார் ஆகியோர் நகரத்தார் சமூகத்தினரே!
கலியுகம் 3808ம் ஆண்டில் பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.
இளையாற்றங்குடியில் வாழ்ந்த நகரத்தார் மக்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமைக்குறைவால் 9 பிரிவுகள் ஏற்பட்டு ஒரு பிரிவிற்கு இளையாற்றங்குடிக்கோவிலும் மற்ற 8 பிரிவினர் தமக்குத் தனியாக கோவில் வேண்டி பாண்டிய மன்னனிடம் வேண்ட மன்னனும் அதற்கிணங்கி 8 பிரிவினருக்கும் மாற்றூர்,வைரவன்பட்டி,இரணியூர்,பிள்ளையார்பட்டி,நேமம்,இலுப்பைக்குடி,
சூரைக்குடி,வேலங்குடி ஆகிய 8 ஊர்க்கோவில்களையும் அதற்குரிய க்ஷேத்திர சுவாத்தியங்களையும் விட்டுக்கொடுத்ததாக கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த 9 கோவில்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சிவ க்ஷேத்திரங்கள்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்புரிவதில் உலகப் புகழ்பெற்ற கீர்த்தியாளர்.
திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பர்மா,ரங்கூன்,செய்கோன், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மரக்கலங்களில் 'கொண்டுவிக்க'ச்சென்று, அங்கிருந்து பொன்,நவரத்தின மணிகள்,தேக்கு,அழகிய வேலைப்பாடுடைய கலைப்பொருடகள்,மங்குச்சாமான்கள்,இன்னும் எத்தனையோ பொருட்களை கப்பல்,கப்பலாகக் கொண்டு வந்து இறக்கியவர்கள் இந்த நகரத்தார் சமூகத்தினர். இந்த மக்களால் நாட்டுப் பொருளாதாரம் சிறந்தது மட்டுமன்றி இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள்.சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை,பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நகரத்தார்கள். தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் வரலாறு நாட்டவர் அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.
நன்றி http://gandhiyagramangal.blogspot.in
இணையத்தளங்களில் நகரத்தார்
மும்பை சேதுராமன் சாத்தப்பன் (நெற்குப்பை)=========================================
இணையத்தளங்கள் மக்களை இணைப்பதற்கு அரிய செயலாற்றுகின்றன. இணையத்தளங்களில் நம்மைப் பற்றி பதிவு செய்வதால் நம்மவர்களை பற்றி நாம் அறியவும், உலகத்தின் மற்ற பாகங்களில் உள்ளவர்கள் நம்மைப் பற்றி அறியவும் மிகவும் உதவுகின்றன. அந்த வகையில் நகரத்தார்களைப் பற்றி பல இணையத்தளங்கள் உள்ளன. பலவற்றையும் இணையத்தில் இருந்து சேகரித்து தரமுயன்றிக்கிறேன். சிலருக்கு சந்தேகம் வரலாம்.. என்ன நகரத்தார்களைப் பற்றி கூறிவிட்டு நகரத்தார்களுக்கே உரிய உணவு வகைகளின் இணையத்தளங்களைப் பற்றிக் கூறாமல் விட்டுவிட்டரே என்று. அதைப் பற்றி எழுதப் போனால் அது இன்னும் பக்கங்களை அதிகமாக்கும் என்ற எண்ணத்தினால் தனியாக வரும் மாதங்களில் ஒரு இதழில் இணையத்தளங்களில் நகரத்தார் உணவு வகைகள் என்று எழுதுவேன்.
நம்மவர்கள் தங்கள் நேரத்தையும், பொருளையும் செலவு செய்து பல இணையத்தளங்களை உருவாக்கி உள்ளார்கள். சென்று பார்ப்பது நமது கடமை. ஆகையால் கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களை சென்று பாருங்கள், படியுங்கள், உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு கூறுங்கள். அதுவே நீங்கள் அவர்களின் உழைப்புக்கு செய்யும் நன்றியாகும்.
ஆராவயல் நகரத்தார்களின் இணையத்தளம்http://www.aaravayalnagarathar.com/
மாத்தூர் கோவிலின் இணையத்தளம்http://www.mathoorkovil.com/
கோவிலூர் இணையத்தளம்www.koviloor.com
தேவகோட்டை நகரத்தார்களின்
இணையத்தளம்http://www.devakottainagarathar.com/
லண்டன் நகரத்தார்கள் கீழ்கண்ட இணையத்தளங்களை வைத்துள்ளார்கள்.http://www.nagarathar.co.uk/http://www.londonnagaratharsangam.bravehost.com/
ஜப்பானின் டோக்கியோ உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.geocities.com/tokyo/garden/8742/
சிங்கப்பூரில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.singainagarathar.com/
குவைத்தில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.geocities.com/kuwaitnagarathar/index.html
ஆஸ்திரோலியாவில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.ausnagarathar.org/Index.htm
ஆஸ்திரோலியாவில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளத்தில் நமது நகரவிடுதிகள் பற்றி லிங்கும் உள்ளது. http://www.ausnagarathar.org/Nagaraviduthi.htm
நமது நகரவிடுதிகள் பற்றி மேலும் ஒரு லிங்க்
http://www.aec-group.com/nachi4.htm
பெங்களூரில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.bangalorenagarathar.com/
வடஅமெரிக்காவில் உள்ள உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.achi.org/dc/
பஹ்ரைனில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.bahrainnagarathars.com/
தேவகோட்டை பற்றிய இணையத்தளம்http://www.devakottai.in/
சென்னையில் உள்ள உள்ள நகரத்தார்களின்
இணையத்தளம்http://www.chennainagarathar.com/
நகரத்தார் வரலாறு
நகரத்தார்களின் வரலாறு பற்றி பல இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.http://nagarathar.tripod.com/nagarathar_history.htmhttp://en.wikipedia.org/wiki/Nagaratharwww.rootsweb.ancestry.com/~lkawgw/natchetty.html
பஜனைப் பாடல்கள்
நமது இனத்துக்கேயுரிய பாடல்கள் பலவற்றையும் மற்றும் பஜனை பாடல்கள் பலவற்றையும் தொகுத்து ஒரிடத்தில் தந்துள்ளார் நமது இனத்தைச் சேர்ந்த நண்பர்.http://www.bhajanai.com/
கோவில்கள்சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலின் இணையத்தளம்www.sttemple.com
சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலின் இணையத்தளத்தில் நமது மற்ற கோவில்களின் (உலகளவில்) விபரங்களையும் கொடுத்துள்ளார்கள்.http://www.sttemple.com/STT/english/cht_gallery.asp
திருமண இணையத்தளங்கள்
தற்போது நமது இனத்தவர்கள் பல ஊர்களிலும், பல நாடுகளிலும் இருப்பதால் முன்பு போல எளிதாக திருமணங்கள் பேசி முடிக்க முடிவதில்லை. ஆதலால், திருமணங்களுக்கு நாம் திருமண சேவை மையங்களையும், இணையத்தளங்களையும் நாட வேண்டியுள்ளது. நமது இனத்தவருக்கென சில நல்ல இணையத்தளங்கள் இருக்கின்றன, சிறப்பான சேவையும் செய்து வருகின்றன.
http://www.nagaratharkalyanam.கம/
சோஷியல் நெட்வொர்க்கிங் இணையத்தளங்கள்
சோஷியல் நெட்வொர்க்கிங் இணையத்தளங்கள் எவ்வளவு பிரபலம் என்று பலருக்கும் தெரியும். அதிலும் பலர் தங்களை இணைத்துக் கொள்வது இயல்பு தான். அதிலும் பலர் தங்கள் கம்யூனிட்டி சார்பாக பக்கங்களை துவக்குகிறார்கள். அப்படி புகழ்பெற்ற ஆர்க்குட், பேஸ்புக் போன்ற இணையத்தளத்தில் நகரத்தார்கள், நகரத்தார்கள் ஊர்கள் சார்ந்த பக்கங்கள் தற்சமயம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த குழுவில் எவ்வளவு பேர் மெம்பராக சேர்ந்திருக்கிறார்கள் என்ற விபரம் தான். நம்மவர்கள் ஒருவரை ஒருவரை தெரிந்து கொள்ளவும், வேலை வாய்ப்புக்களை தேடவும், இளைஞர்கள் ஒன்று சேரவும் இந்த குழுக்கள் வழிவகுக்கின்றன.
ஃ Chennai Chettinad - Nagarathar(1,120) ஃ Nattukottai Nagarathar (574) ஃ Devakottai Nagarathar (423) ஃ young nagarathars (467) ஃ Nagarathar Today (166) ஃ YOUNG NAGARATHARS OF TAMILNADU (148) ஃ Nagarathar job links (82) ஃ NAGARATHAR (102) ஃ Nagarathar Sangam(online) (88) ஃ Karnataka Nagarathars. (49) ஃ Mattur Nagarathar Temple (61) ஃ Karnataka-Chettinad Nagarathar (46) ஃ Coimbatore Nagarathar Chettiar (73) ஃ pillayarpatti nagarathar (53) ஃ Chettinad Nagarathar (50) ஃ Piranmalai Nagarathar Chettiar (33) ஃ Young Nagarathars of Hyderabad (31) ஃ Nagarathar (23) ஃ NAGARATHAR F-R-I-E-N-D-S : (39) ஃ devakottai nagarathars (27) ஃ NATTARASAN KOTTANAGARATHAR (19) ஃ Nagarathar matrimony (20) ஃ ILLAYATRANGUDI NAGARATHARS (16) ஃ Nagarathar UruthikottaiVatagai ஃ Nagarathar Business Community (19) ஃ Coimbatore Nagarathars (16) ஃ KOCHI NAGARATHAR ASSOCIATION (10) ஃ karaikudi nagarathars (12) ஃ salem nagarathar (8) ஃ Devakottai Nagarathar Youths (23) ஃ Nemam Kovil Nagarathar (9) ஃ Hosur-Chettinad Nagarathar (6) ஃ NAGARATHAR MANDRAM (7) ஃ PALLATHUR NAGARATHARS (17) ஃ ARIYAKUDI NAGARATHAR (7) ஃ Nagarathar World (4) ஃ mylapore nagarathars (5) ஃ VETRIYUR NAGARATHARs (3) ஃ ATTANGUDI Nagarathars (7) ஃ PAGANERI NAGARATHAR (7) ஃ Kandavirayan Patti Nagarathar (5) ஃ elayaathakudi nagarathar (3) ஃ Qatar Nagarathars (1) ஃ Young Nagarathars @ Mumbai (3) ஃ kilasivalpatti nagarathar (6) ஃ Valayapatti nagarathar sangam (17) ஃ Ariviyur Nagarathar Kazhagam (2) ஃ Koppanapatty Nagarathars (4) ஃ NUSA - Nagarathars U.S.A ஃ Nagarathar Singles (31) ஃ Australian Nagarathar (26) ஃ Singai Nagarathar (10) ஃ Kothamangalam Nagarathars (9) ஃ Nagarathar Izangnar Kutamaipu (10) ஃ Finland Nagarathar Sangam (6) ஃ Singapore Nagarathar (17) ஃ Connecticut Nagarathar (2) ஃ TEXAS NAGARATHARS (3) ஃ Nagarathars in Germany (0)ஃ LONDON NAGARATHARS (5)ஃ Nagarathar Canada ஃ Bahrain Nagarathars ஃ Chicago Nagarathars ஃ Nattukottai chettiars (37) ஃ nattukottai chettiar (18)ஃ The myth of food habits
கோவையைச் சேர்ந்த ஆராவயல் சோமசுந்தரம் அவர்கள் சில நகரத்தார் இணயத்தளங்களை நடத்தி வருகிறார்கள். www.nagaratharpulligal.com
துபாய் நகரத்தார்களின் (யூ.ஏ.ஈ.,) இணையத்தள முகவரி இணையத்தளத்தில் பல நல்ல உபயோகமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, தமிழ் மென்பொருள், தமிழ் புத்திரிக்கைகள், தமிழ் தினசரிகள், தமிழ் இணையத்தளங்கள், தமிழ் ரேடியோ, தமிழ் கற்றுக்கொள்ள உதவும் இணையத்தளங்கள் ஆகியவற்றின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது பலருக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.www.nagarathars.com
யாஹூ குரூப்புக்கள்
யாஹுவின் குரூப்புக்கள் உலகளவில் மிகவும் பிரசித்திபெற்றவை. அவற்றில் நமது நகரத்தார்கள் பல குரூப்புக்கள் நடத்தி வருகின்றனர். பல சமயங்களில் நமது செய்திகள் பலருக்கு ஒரே சமயத்தில் சென்றடைய இது மிகவும் உபயோக இருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி. செளந்திரநாயகி வைரவன் அவர்களின் இணயத்தளம். நமது இனத்துச் செய்திகள் அதிகம் இருக்கின்றது.
http://sg.geocities.com/soundaranayaki/
அண்ணாமலை சொக்கலிங்கம் அவர்களின் செட்டிநாடு சம்பந்தப்பட்ட இணையத்தளம்http://chettinad.itgo.com/
டாக்டர் அழகப்ப அழகப்பன் அவர்களின் பெருமுயற்சியால் சென்னை பெசண்ட் நகரில் உருவாகியுள்ள அறுபடை வீடு கோவிலின் இணையத்தளம்.http://www.murugan.org/temples/arupadai.htm
நகரத்தார் இலக்கிய சங்கத்தின் இணையத்தளம்http://nagaratharikkiyasangam.org/
யூ.ஏ.ஈ. நகரத்தார்களின் குரூப்
http://groups.Yahoo..com/group/UAENagaratharKootamaipu
இது தவிர பல குரூப்புக்கள் உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://groups.yahoo.com/group/bangalorenagarathar/
http://groups.yahoo.com/group/chettinad/
http://groups.yahoo.com/group/NagaratharCentral/?yguid=147456542
http://groups.yahoo.com/group/NagaratharChitChat/?yguid=216773025
http://groups.yahoo.com/group/Nagarathargal/?yguid=147456542
http://groups.yahoo.com/group/palani-jokes/?yguid=216773025
http://ponniyinselvan.in/forum/history-discussions/lost-city-believed-be-found-pompuhar-5081.html
in.dir.groups.yahoo.com/group/chettinad
நகரத்தார் உணவு சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள்
செட்டிநாடு என்றாலே நாவிற்கினிய உணவு வகைகளை யாரும் மறக்கமுடியாது. நம்மால் அதை வியாபார ரீதியாக செய்து பெரிய அளவில் வளராதது ஒரு குறை தான். அதை நிவிர்த்திக்கும் விதமாக பலர் தற்போது செய்து வருகிறார்கள். செட்டிநாட்டு உணவு வகைகளை பத்திரிக்கைகளில் எழுதி உலகறிச் செய்தவர்களில் முதன்மையானவர்கள் என்று எடுத்துக் கொண்டால அதில் சிலரில் திருமதி. ரேவதி சண்முகம் அவர்கள் பெயர் வராமல் இருக்காது. அவ்வளவு பிரபலம். பல சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார். அவரின் ப்ளாக்.revathishanmugam.sulekha.com/
அது போல நெய்வேலியில் வசிக்கும் சொலை ஆச்சியின் கிச்சன் செட்டிநாடு உணவு வகை இணயத்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆயிரக்கணக்காணோர் பார்த்து சென்றுள்ள இணையத்தளமாகும் (ப்ளாக்).
solaiachiskitchen.blogspot.com/
நெற்குப்பையைச் சேர்ந்த திருமதி. அன்னம் செந்தில்குமார் அவர்களின் இணையத்தளம் நிச்சியம் செட்டிநாட்டு உணவு வகைகளை உலகிற்கு எடுத்துக் கூறும் இணயதத்தளங்களில் ஒன்றாகும். சிறப்பான முறையில் வடிவைக்கபட்டிருக்கிறது. நல்ல ஒரு சிறப்பான முயற்சி.chettinadcooking.com
இது தவிர மற்ற இணயத்தளங்கள் / ப்ளாக்குகள்:
www.indobase.com/recipes/category/chettinad-recipes.php\
chettinadrecipes.com
http://groups.yahoo.com/group/Nagarathar_Cooking
chettinadrecipes.blogspot.com
http://chettinadusamayal.blogspot.com/.www.awesomecuisine.com/recipes/.../Chettinadwww.webindia123.com/cookery/region/tamil/chet.htm
blogs.oneindia.in/chettinad+recipes/1/showtags.html
recipeland.com/recipes/recipe/search?q=Chettinad
www.blogged.com/about/chettinad-recipes/
groups.yahoo.com/phrase/chettinad-recipes
en-ulagam.blogspot.com/.../authentic-chettinad-kitchen-
chettinadrecipes.blogspot.com
நகரத்தார் திருமணச் சேவைக்கான இன்னுமொரு இணையத்தளம்Nagaratharworld.com
கனடா நகரத்தார் சங்கத்தின் இணயத்தளம்http://www.canadanagaratharsangam.com/
சென்னை நகரத்தார் இலக்கிய சங்கத்தின் இணையத்தளம்http://nagaratharikkiyasangam.org/home.htm
பழநி நகரத்தார் சங்கத்தின் இணயத்தளம்Palani Nagaratharhttp://www.palaninagarathar.com/
கோவை நகரத்தார் சங்கத்தின் இணையத்தளம்Kovai Nagaratharhttp://www.kovainagarathar.com/
நாச்சியாபுரம் நகரத்தார்களின் இணையத்தளம்Nachiapuramhttp://www.nachiapuram.com/
மலேசிய தனவைசிய சங்கத்தின் இணையத்தளம்Malaysia Thanvaisya Associationhttp://www.mta.com.my
மிதிலைப்பட்டி நகரத்தார்களின் ப்ளாக். நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.Mithilaipattingarathar.blogspot.com
நகரத்தார்களின் வரலாறு பற்றி விரிவாக கூறப்பட்டுள்ள இன்னுமொரு இணையத்தளம்http://www.scribd.com/doc/20148045/History-of-Nattukottai-Nagarathar
செட்டிநாடு கலைப்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம்.http://chettinadartefacts.com/category.html
நகரத்தார் சம்பந்தப்பட்ட பொதுவான இரண்டு இணையத்தளங்கள்www.nagarathargateway.com
தேவகோட்டையில் உள்ள நகரத்தார் பள்ளிகளைப் பற்றிய விபரங்கள் அடங்கிய இணையத்தளம்.www.nagaratharschools.org
பர்மாவில் நகரத்தார்கள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை அடங்கிய இணையத்தளம்Chettiars in Burmahttp://www.econ.mq.edu.au/research/2005/chettiar.pdf
பிள்ளையார்பட்டி கோவிலின் இணையத்தளம்.www.templenet.com/Tamilnadu/karppill.html
நன்றி - http://nagaratharwebsites.blogspot.in/