தமிழ் எழுத்துகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
அவை உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து மற்றும் ஆய்த எழுத்து ஆகும்.
அம்மா...
அ எனும் போது உயிராகி,
ம் எனும் போது மெய்யாகி,
மா எனும் போது உயிர்மெய்யான
என் தாயே! தமிழே!
ஆய்தமாகி என்றும்
தாயையும் தமிழையும் காப்பேன்!
உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் அடிப்படை தமிழ் எழுத்துகள் ஆகும்.
அடிப்படை தமிழ் எழுத்துகள் 30 (12+18).
மெய் எழுத்து + உயிர் எழுத்து = உயிர் மெய் எழுத்து
உதாரணத்திற்கு,
அம்மா = அ + ம் + ம்+ஆ
(அ : உயிர் எழுத்து)
(ம் : மெய் எழுத்து)
(மா : ம் + ஆ, மெய் எழுத்து+ உயிர் எழுத்து)
தாயை நேசிக்கிறேன்! தாய் தந்த தமிழைச் சுவாசிக்கிறேன்!