ருத்ராட்ச தீட்சை நிகழ்ச்சி - இலவசமாக

நேரலையில் தமிழில் இணையுங்கள்

நவம்பர் 23 - மாலை 7:00 மணிக்கு

ருத்ராட்சம் தோன்றிய கதை

ருத்ரா என்றால் சிவன், அக்ஷா என்றால் கண்ணீர் துளிகள். ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்ணீர் துளிகள். புராணக் கதைகள் சொல்வது, சிவன் நீண்டகாலம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் பரவசநிலையில் முற்றிலும் அசைவின்றி நிச்சலனமாக அமர்ந்திருந்தார். அவர் சுவாசிப்பதாகக்கூட தெரியவில்லை, அனைவரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்தனர். அவர் உயிரோடு இருந்ததற்கு ஒரே ஒரு அரிகுறிதான் தெரிந்தது - அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய பரவசக் கண்ணீர் துளிகள். அவருடைய கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்சமாக, "சிவனின் கண்ணீராக" மாறியது.

சத்குரு

"ஆதியோகியின் அருளுக்குத் திறந்தவராவதற்கு, ருத்ராட்ச தீட்சை ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்."

ருத்ராட்ச தீட்சை அர்ப்பணிப்புகள்

ருத்ராட்சம்

அணிபவர்களுக்கு உடல், மனம் மற்றும் ஆன்மீக அளவிலாக பல பலன்களை வழங்கும்


ஈஷா விபூதி

தியானலிங்கத்தின் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படும் புனிதமான விபூதி


அபய சூத்ரா

ஒருவரது குறிக்கோளை நிறைவேற்றி பயத்தை அகற்றுவதற்கு உதவியாக விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நூல்


ஆதியோகி புகைப்படம்

"உள்முகமாகத் திரும்புவதே விடுதலைக்கான ஒரே வழி" என்பதற்கு மனிதகுலத்திற்கு இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டல்.


பொதுவான கேள்விகள்

யாரெல்லாம் தீட்சையில் யார் கலந்து கொள்ளலாம்?

ருத்ராட்ச தீட்சையில் பதிவு செய்த அனைவரும் பங்கேற்கலாம்.


தீட்சைக்கான முன்நிபந்தனைகள் என்ன?

நேரலையில் பங்குபெறும் பட்சத்தில்,தொந்தரவு எதுவும் இல்லாத இடத்தில் தனியாக அமரவும். ஓரு விளக்கு ஏற்றி வைப்பது மற்றும் சிறிது காலி வயிறு நிலையில் இருப்பது தீட்சை பெறுவதற்கு உகந்ததாக இருக்கும்.


எனக்கு ருத்திராட்சம் கிடைத்தது. ஆனால் அபயசூத்திரம்/விபூதி/புகைப்படம் இப்போது என்னிடம் இல்லை. நான் தீட்சையில் கலந்து கொள்ளலாமா?

ஆம். நீங்கள் தீட்சைக்கான அமர்வில் பங்கேற்று சதகுரு வழங்கும் வழிமுறைகைளை பின்பற்றலாம்


நான் ருத்திராட்சம கிடைக்கப் பெற்று அதை அணிந்து . கொண்டுள்ளேன். ஆனால் அபயசூத்திரம் இப்போது என்னிடம் இல்லை. நான் இப்போது என்ன செய்வது?

தீட்சையில் பங்கேற்று, சத்குரு வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.


எனது குடும்பத்தினர்/உறவினர்கள் ருத்ராட்சம் அணியவில்லை என்றாலும், அவர்களும் கலந்து கொள்ளலாமா?

ஆம், அவர்களும் கலந்து கொள்ளலாம்.

நான் இது வரை எந்த ஈஷா வகுப்பிகளிலும் கலந்து கொண்டதில்லை. நான் இந்த தீட்சையில் பங்கேற்கலாமா?

ஆம். நீங்கள் ஏற்கனவே ருத்ராட்ச தீட்ச்சைக்கு பதிவு செய்திருந்தால், தீட்சையில் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஈஷா வகுப்பிகளி ல் கலந்து கொண்டிருக்கவேண்டும் என்ற முன் நிபந்தனை எதுவும் இல்லை.

அனைவருக்கும் ஒரு துளி ஆன்மீகத்தை வழங்குவதே சத்குருவின் நோக்கம்.

விருப்பம் உள்ள ஒவ்வொருவருக்கும் ருத்ராட்ச தீட்சை கிடைக்கப் பெறும்.

இந்த பயிற்சியை நான் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாமா?

இந்தப் பயிற்சியின் தனமையைக் கருத்தில் கொண்டு, தயவுசெய்து மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டாம். இது ஒரு குறிப்பிட்ட தீட்சை செயல்முறை. சரியான இடத்திலிருந்து இந்த பயிற்சியைக் கற்றுக்கொள்வது மிக அவசியம்.


இந்த தீட்சையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமா ?

தீட்சையில் கலந்து கொள்ள மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.


பயணம் செய்யும்போது இந்த பயிற்சியை செய்யலாமா?

செய்யலாம். உடல் ரீதியாக தொந்தரவு இல்லாத இடத்தில அமர்ந்து கொள்ளவும்.


காலி வயிற்றில் இருக்க வேண்டுமா?

தீட்சை வகுப்பிற்கு ஓரளவு காலி வயிற்றுடன் வருவது சிறந்ததாக இருக்கும் [ஒரு முழு உணவு பிறகு 2.5 மணி இடைவெளி] .


எப்போதுமே ருத்திராட்சம் அணிந்திருக்க வேண்டுமா அல்லது விரும்பும்போதெல்லாம் கழற்றிக் கொள்ளலாமா?

எப்போதும் ருத்ராட்சத்தை அணிவது அதிகபட்ச நன்மை தரும். ஆனால் நீங்கள் விரும்பினால் சில சந்தர்ப்பங்களில் கழற்றிக் கொள்ளலாம். குளிப்பதற்கு வெந்நீர் அல்லது இரசாயன சோப்பு / ஷாம்பு பயன்படுத்தினால், அதை அணிய வேண்டாம். ஏனென்றால், ருத்ராட்சம் எளிதில் உடையக்கூடிய தன்மையுடையது. மற்றபடி எந்த கட்டுப்பாடும் இல்லை.


என் ருத்திராட்சம் உடைந்திருந்தாலும் நான் பயிற்சி செய்யலாமா?

நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யலாம். இருப்பினும், சேதமடைந்த ருத்திராட்சம் பயன்படுத்த உகந்ததல்ல என்பதால் அதை ஒரு நதி / நீரோடையில் வைக்கவும். அல்லது ஈரமான மண்ணில் புதைக்கவும்.

__________________________________________________________________________________________________

இந்தப் பயிற்சியை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் செய்ய வேண்டுமா?

உடல் ரீதியாக தொந்தரவு இல்லாத எந்த இடத்திலும் பயிற்சி செய்யலாம்.


நான் ருத்ராட்சத்தை அணிய விரும்பவில்லை, அதை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.

அப்படியிருந்தும் நான் தீட்சையில் கலந்து கொள்ள வேண்டுமா / பயிற்சி செய்ய வேண்டுமா?

ருத்ராட்சம் பல பலன்களைக் கொண்டிருப்பதால், அதை எப்போதும் அணிவது மிகவும் நன்மை தரும். முடியாவிட்டால் பூஜை அறையில் வைக்கலாம். தீட்சையில் கலந்து கொண்டு சத்குருவால் வழி நடத்தப்படும் சாதனாவை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.


நான் ருத்ராட்சத்தை வேறு ஒருவருக்கு பரிசாக கொடுத்தேன், அவர்கள் சாதனா செய்ய விரும்பவில்லை. இது ஏதேனும் பாதகமான விளைவை ஏற்படுத்துமா? (அல்லது சாதனா செய்யாவிட்டால் ருத்ராட்சம் சக்தி இழக்குமா?)

எந்த பாதகமான விளைவும் ஏற்படாது. இருப்பினும், சாதனா செய்வது ஒருவரின் நல்வாழ்வு மற்றும் ஆன்மீக பயணத்திற்கு பெரும் துணையாக உள்ளது.


ஒருவர் இன்னொருவருக்காக சாதனா செய்ய முடியுமா?( பெற்றோர் தம் குழந்தைக்காக செய்வது போல்?)

சாதனா என்பது ஒரு உள் செயல்முறை. அது பிறர் செய்ய வேண்டிய சடங்கு அல்ல. சாதனா எப்போதும் சுயமாகச் செய்வது. யார் சாதனா செய்கிறார்களோ அவர்களே அதன் பலனை அடைவார்கள்.


நான் இன்று அசைவம் சாப்பிட்டேன் (அல்லது, நான் அசைவ உணவு உண்பவன்). நான் தீட்சையில் கலந்து கொள்ளலாமா?

ஆம். தீட்சையில் கலந்துகொள்வதற்கும்/அல்லது சாதனா செய்வதற்கும் உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் லேசான காலி வயிறு நிலையில் இருப்பது மிகவும் உகந்ததாக இருக்கும்.


நான் அசைவம் சாப்பிடுபவன். நான் ருத்ராட்சம் அணியலாமா?

அணியலாம்.


நான் ஏற்கனவே இன்னர் இன்ஜினியரிங்ல் (அல்லது மற்ற ஈஷா வகுப்பிகளில்) பங்கேற்றுள்ளேன். நானும் தீட்சையில் கலந்து கொள்ள வேண்டுமா மற்றும்/அல்லது சாதனா செய்ய வேண்டுமா?

ஆம், தீட்சையில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது நம் சாதனாவை தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.


மாதவிடாய் சமயத்தில் பெண்கள் இந்த பயிற்சிகளை செய்யலாமா?

செய்யலாம்.

இந்த ருத்ராட்சத்தை நான் அணியத் தொடங்குவதற்கு உகந்த நாள் ஏதேனும் உள்ளதா?

இல்லை, ருத்ராட்சத்தை உடனடியாக அணியலாம். இது ஏற்கனவே ஆசிரமத்தில் செறிவூட்டப்பட்டிருக்கிறது.


நான் இன்னொரு ருத்ராட்சத்தை அணிந்திருக்கிறேன். இந்த ருத்ராட்சத்தையும் அணியலாமா?

ஆம், நீங்கள் மற்ற ருத்ராட்சங்களுடன் இந்த ருத்ராட்சத்தையும் அணியலாம்

என்னிடம் முந்தைய வருடத்துடைய ஆதியோகி ருத்ராட்சம் உள்ளது அதை அணிந்து கொண்டு தீட்சையில் கலந்து கொள்ளலாமா?

ஆம், தீட்சையின் போது முந்தைய ஆண்டு ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.