U. Ve. Sri. Gopal Iyengar - Upanyasams
Thirupavai Upanyasam
U. Ve. Sri. Gopal Iyengar - Upanyasams
Thirupavai Upanyasam
மார்கழி மாதம் என்றாலே அது வைணவர்களுக்கு திருப்பாவை மாதம் தான். எங்கும் ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை உபன்யாசங்கள் நேராகவும், இணையதளத்திலும் கேட்டு மகிழ்ந்து அனுபவிக்க வாய்ப்பு. ப்ரதி வருஷமும் கேட்டாலும் அலுப்பதில்லை, புதிய விஷயங்கள், நாம் இதுவரை கேட்காத விஷயங்கள் கேட்க முடிகிறது. நம் ஆச்சார்யர் ஸ்வாமிகள் உபன்யாசம் எப்போதுமே வித்தியாசமானதுதான். இதுவரை நாம் ஸ்வாமியின் திருப்பாவை உபன்யாசம் திருமலகிரி திருவேங்கடவன் சன்னிதியில் பல வருடங்களாகக் கேட்டு அனுபவித்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக தலைப்பை மையமாகக்கொண்டு உபன் ய ஸித்து வருகிறார் ஸ்வாமி. இந்த வருடம் திருப்பாவை உபன்யாசம் ஆன் லைனில் நடைபெறுகிறது. நம் ஆச்சார்யர் இந்த முறையும் வித்தியாசமான விதத்தில், அர்த்த பஞ்சகம், திருவாராதனம் என்ற இரண்டு விஷயங்களை
( Focus ) நோக்காகக் கொண்டு திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்க உரை அளித்து வருகிறார். அடியேன் முதல் இரண்டு பாசுரங்களைக் கேட்டு அனுபவிக்கப் பெற்றேன். அருமையான,சுருக்கமான அதே சமயம் எளிமையான நடையில், வார்த்தைகளைக் கொண்டு அடியேன் போன்ற சிறிய ஞானம் உடையவனுக்கும் புரியும் படி விளக்கி அருளுகிறார்.
நம் ஸ்வாமிக்கு அடியேனுடைய க்ருதக்ஞைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
Thirupavai - Pasuram 1 (17/12/2023) Margalzhi 1
Thirupavai - Pasuram 2 (18/12/2023) Margalzhi 2
Thirupavai - Pasuram 3 (19/12/2023) Margalzhi 3
Thirupavai - Pasuram 4 (20/12/2023) Margalzhi 4
Thirupavai - Pasuram 5 (21/12/2023) Margalzhi 5
Thirupavai - Pasuram 6 (22/12/2023) Margalzhi 6
Thirupavai - Pasuram 7 (23/12/2023) Margalzhi 7
Thirupavai - Pasuram 8 (24/12/2023) Margalzhi 8
Thirupavai - Pasuram 9 (25/12/2023) Margalzhi 9
Thirupavai - Pasuram 10 (26/12/2023) Margalzhi 10
Thirupavai - Pasuram 11 (27/12/2023) Margalzhi 11
Thirupavai - Pasuram 12 (28/12/2023) Margalzhi 12