House Names and Colours

கடந்த 28 ஆண்டுகளாக மெல்பெர்னில் தன்னிகரற்ற தமிழ்ப்பணி ஆற்றி வரும் பாரதி பள்ளி, தனது பெயரைப்போலவே, தனது பாடசாலையின் விளையாட்டு இல்லங்களுக்கும் பார் போற்றும் தமிழ் இலக்கியங்களைப் படைத்த பெரியார்களின் பெயரை இட்டு அவர்களைப் பற்றிய அறிவை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு ஊட்டி வருகின்றது என்றால் மிகையாகாது.  


அந்த வகையில் பாரதி பள்ளியின் இல்லங்கள் ஆவன..


இளங்கோ (Ilango)

இளவரசன் பட்டத்தை துறந்து, துறவறம் மேற்கொண்ட இளங்கோ அடிகள் அகிலம் போற்றும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைப் படைத்தார்.












கம்பர்(Kambar) 

"கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற பெருமையை கொண்டவர் கம்பர். இவர் தமிழ் இலக்கியத்தில் மிகப் பெரிய இதிகாசமாக விளங்கும்  கம்பராமாயணத்தை இயற்றியவர் ஆவார்.






வள்ளுவர்(Valluvar)

"உலகப் பொதுமறை" என்று அழைக்கப்படும் திருக்குறளை படைத்தவர் திருவள்ளுவர். அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்படட பெருமையும் இந்நூலுக்கு உண்டு. "வள்ளுவனைப் பெற்றதால், பெற்றதே புகழ் வையகம்" என்று பாரதிதாசன் பாடினான்.








இப்பெருமை கொண்ட தமிழ் பெரியார்களை நாமும் எமது விளையாட்டு இல்லங்களுக்கு பெயர் சூட்டி பெருமிதம் அடைந்தோம்.


இப்படிப்பட்ட  சிறப்புகளைக்கொண்ட நம் பாரதி பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டியிலே நாம் அனைவரும் கலந்துகொண்டு நம் பிள்ளைகளின்  வினைத்திறனையும் அறிவுத்திறனையும் ஊக்குவிப்போமாக!

Athlete's Bib number Samples

Example Bib Number for Ilanko house

Example Bib Number for Kambar house

Example Bib Number for Valluvar house

Athlete's Bib's can be collected from your respective house sitting area.