நான் படித்த,சுற்றுலாக்கள் மூலம் எனக்கு கிடைத்த அனுபவங்களை அவ்வப்போது கட்டுரைகளாக, கவிதைகளாக எழுதி வருகிறேன்.சிற்றிதழ்கள் ,வணிக இதழ்களில் எனது கட்டுரைகள் ,கவிதைகள் வெளிவந்துள்ளன. அதேபோல "இன்றையவானம் " என்ற வலைத்தளத்திலும் எழுதி வந்துள்ளேன். தற்போது பல்வேறு நிகழ்வுகளில் வரலாற்று தகவல்களை மேடை பேச்சாளனாக பேசிவருகிறேன். அதேபோல பத்திரிகையாளனாக பணியாற்றியபோது சமையல் துணக்குகள், அழகுகுறிப்புகள்,பொது அறிவு வினா விடைகள் சேகரித்து கொடுப்பதுண்டு அவற்றையும் நூல்களாக வெளியிட்டுள்ளேன்.
இப்படி நான் பேசியும் எழுதியும் வந்த கட்டுரைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் ஆகியவற்றை அமேசானில் மின்நூல்களாக வெளியிட்டு வருகிறேன். 12க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் படத்தை கிளிக் செய்து எனது அமேசான் நூல்கள் படிக்கலாம்,வாங்கலாம்.
புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை
– Lenin
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிடபெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!