திறந்திடு சீசேம்
திறந்திடு சீசேம்
ஒரு விஞ்ஞானி விரோதிகளால் கடத்தப்படுகிறார். அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. ஒரு அதிகாரி தனது குழுவுடன் சேர்ந்து, விஞ்ஞானியையும் அவரது கண்டுபிடிப்பையும் எப்படி எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பது தான் கதை சுருக்கம்.
அவரை ஏன் எதிரிகள் சூழ்ந்துள்ளனர்?
அவரது கண்டுபிடிப்பு என்ன?
அந்த கண்டுபிடிப்பை எதிரிகள் என்ன செய்ய போகிறார்கள்?
விஞ்ஞானி இல்லாமல், விஞ்ஞானியுடன் பணிபுரிந்தவர்களின் உதவியுடன், ஒவ்வொரு முடிச்சுகளையும் அந்த அதிகாரி எப்படி அகற்றுகிறார் என்று சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கும்.
இது ஒரு கற்பனை கதை என்றாலும், இயற்பியலையும் கணினி அறிவியலையும் பயன்படுத்தி அறிவியல் விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விவரித்துள்ளேன்.
படித்து பாருங்கள்! ஒரு படம் பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும்!