இது ஒரு பெண் தன்னை சுற்றியிருப்பவர்களின் வாழ்வில் தரும் பங்களிப்பை பற்றிய பயணம்.
இது ஒரு கற்பனை கதை என்றாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவள் சிந்திக்கும் விதம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும். அவள் மற்றவர்களை புரிந்துகொள்ளும் விதத்திலும், அவர்களை கையாளும் விதத்திலும் அவளது தனித்துவமான குணம், உங்களுக்கு ஒரு இனிமையான உணர்வைத் தரும்.
எல்லோரும் நல்லவர்களாக இல்லையென்றாலும், எல்லோருள்ளேயும் ஒரு நல்ல மனம் கண்டிப்பாக இருக்கும். இந்த பயணத்தில் அவள் சந்திக்கும் நபர்களின் நல்ல மனதை வெளிக்கொண்டு வர அவள் எடுக்கும் முயற்சிகளை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
பொதுவாக, கதாபாத்திரங்களை அவர்களது உடல் தோற்றத்தை வைத்து வர்ணித்திருப்பார்கள். ஆனால் இதில், அவர்களது உணர்வுகளே பிரதிபலிக்கும். சந்தோஷம், நம்பிக்கை, நகைச்சுவை, ஏமாற்றம், சோகம், துரோகம் போன்ற எல்லாவிதமான உணர்வுகளையும் இதில் நீங்கள் உணரலாம்.