நாம் மொழிக்குள் இருக்கிறோம். மொழிதான் மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது. மொழி என்பது தொல்லுயிர் எச்சத்தின் கவிதையென்று செல்லி பகர்ந்தார் மொழியால் நாம் மொழியப்படுகிறோம். தொல்காப்பியர் தொட்டு வள்ளுவப் பெருந்தகையனாருடன் சேர்ந்து இளங்கோவடிகள் கம்பர் வளர்த்த தமிழ் இன்று மொழியின் இயல்புக்கேற்றவாறு காலத்தின் கட்டாயத்தினால் மாறுபட்டு வந்து கொண்டிருக்கிறது. இலக்கண மரபை குறிக்கும் பொழுது பவணந்தி முனிவர். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழவல கால வகையினானே" என்று சொன்னது மொழிக்கும் பொருந்தும் இன்று அறிவியலும் அறிவியல் சார்ந்த தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் இலக்கியம் படிப்பதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது. மற்ற மொழியின் இலக்கியங்களில் காணமுடியாத முழுமைத்தனம் நமது தமிழ் மொழி இலக்கியத்தில்தான் உள்ளது. ஆங்கில இலக்கிய விமர்சகர் சேக்ஸ்பியரை திரும்பவும் கண்டு பிடிக்கவேண்டும் என்பார். அவ்வகையில் நமது பழைய இலக்கியங்களை சங்கஇலக்கியங்களை அகம் புறம் வகுத்தவர்களை அன்றிலிருந்து இன்று வரை நமது உள்ளத்தில் தாக்கங்கள் ஏற்படுத்திய இலக்கிய கர்த்தாக்களை மறுபடியும் கண்டுப்பிடிக்க வேண்டும். "இறைவனை வேண்டுதல் வேண்டாமை இலான் - இருமைத்தன்மை அற்றவன்". என்று எந்த மொழியிலும் புலவன் சொன்னதாகத் தெரியவில்லை. உழவனுக்கு ஏற்றம் கொடுத்து பதிவு செய்தோர்கள் எவ்வளவு மற்ற மொழிகளில் உள்ளனர் எனத் தெரியவில்லை. “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மிதிலே ஆணை செலவே நினைவர்” என்றார் தாயுமானவர் உண்மைதான் எஸ்.எஸ்.கே.வி மகளீர் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர்கள் ஏழுவருடம் கல்லூரி தொடங்கியது முதல் நன்குக்கால் ஊன்றிக்கொண்டு தமிழ்க்கடலில் ஆணை செலுத்த முடியாதென்றாலும் தமிழ்க்கடலில் பயணம் செய்யும் பொருட்டு இவ்வருடம்(2014) தமிழை முதன்மைப்பாடமாக அறிமுகப்படுத்துகிறோம்.