Rejiya

Tamil Audio Books

Ponniyin Selvan tamil audiobook

பொன்னியின் செல்வன் ஒலி வடிவில்:

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புதினம்,

  1. புது வெள்ளம்,

  2. சுழல்காற்று,

  3. கொலைவாள்,

  4. மணிமகுடம்,

  5. தியாக சிகரம்

என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

இந்த புதினத்தை என்னுடைய குரலில் ஒலி வடிவில் கேட்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.

ஆயிரத்தொரு இரவுகள்

ஆயிரத்தொரு இரவுகள் (1001 Night) என்பது அரேபியா மற்றும் இந்தியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும்.

இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள், பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டவை.

இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் போன்றவகையாகும்.

இந்த கதைகளை என்னுடைய குரலில் ஒலி வடிவில் கேட்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.

Tamil Storys by rejiya

கடையெழு வள்ளல்கள் கதைகள், சிறுவர் கதைகள், பஞ்சதந்திர கதைகள் (Panchatantra stories) மேலும் பல கதைகள் இந்த பகுதியில் கேட்டு ரசிக்கலாம்.

இந்த கதைகளை என்னுடைய குரலில் கேட்டு ரசிக்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.

விக்ரமாதித்தன் கதைகள்

இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை.

ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.

இந்த கதைகளை என்னுடைய குரலில் கேட்டு ரசிக்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.

contact

Rejiya...