இந்த ஊருக்கு புதுசு நான்
வந்தேன் கண்டேன் வியந்தேன்
"ஹை" என்ற ஓலி கேட்டுத் திரும்பிய நான்
நம்கும்பகோணத்து குதிரைச் சாரதி
யாரையும் என்பின்னே காண்கிலேன்
வாத்ஸல்யம்ததும்ப ஒருவரை ஒருவர்
விளிக்கும் வார்த்தையிது என்றறிந்தேன்
இங்கு எல்லாமே greatஉம் grand உம் தான்
ஏரிகள் ஆகட்டும் பள்ளத்தாக்குகள் ஆகட்டும்
நாட்டின் பரப்பளவு, காபி கப் கொள்ளளவு
அதை விற்கும் பெண்கள் சுற்றளவு
எல்லாமே பிரும்மாண்டம் தான்
கடைகளில் விற்கும் சோளப்பொறி பைகள்
நம்ம ஊர் யானைப்பசிக்கும் போதுமே
கஜேந்திரன் கால்பிடித்த முதலையின் வாய்கூட
Burger Sandwichஐக் கவ்வவும் முடியுமோ ?
அணில்கள் எல்லாம் கூட பூனைகள் size
நல்ல வேலை இங்கு கொசுக்கள் கிடையாது,
இருந்தால் அவற்றின் size? ஐயஹோ!
புகை பிடித்தால் cancer வரும்
எனும் பயம் நியாயம்தான். ஆனால்
புகைவண்டி trainகளுக்கு கூடவா அப்படி!
சாலைகளில் வாகனங்கள் வலம்வர வலப்புறமே
Right ஒன்றே Right என்பார் இதற்கு,
Left இன் மேல் கொண்ட allergy தான் காரணமோ?
இவர்களுக்கென்றே தனியான ஒரு gallon
வீடுதோறும் shock தரும் சம்சாரம் எப்படியோ!
ஆயினும் மின்சாரம் 110 volts மட்டிலுமே
Switchகளை மேலே தள்ளினால் தான் விளக்கெரியும்
இங்கு பேசுமொழி ஆங்கிலம் என நினைத்ததென் தவறு
சொற்களில் முத்துக்கள் பலவற்றை காணவில்லை
தெரிந்த வார்த்தைகள் என நினைத்த பலவற்றின்
அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறு தான்
ஊருக்குள் நுழைவதற்கு exit வழி வரவேண்டும்
Do not pass என்ற எச்சரிக்கை பலகைக்கு
செல்லாதே நில் என்று பொருளில்லை
Restroomகள் ஓய்வெடுத்து இளைப்பாறும் இடமல்ல
Half என்றும் Fast என்றும் வாயாற இம்மக்கள்
சொல்லக்கேளாத செவி என்ன செவியே!
Pizzaவைச்சுவையாத நாவென்ன நாவே!
வீட்டுச்சுவர்கூட இவர் மனம் போல் மிக மிருது
ஆணியடிக்க சுத்தியலே தேவையில்லை
மெய்சிலிர்க்கும் மிருகாபிமானம் மிக்க மக்களிவர்
பூனைக்கும் கட்டில் புகழ்மிகு இந்நாட்டில்
நாய்குட்டியாய் பிறக்க நம் முன்னேழு
பிறவியில் மாதவம் செய்திட வேண்டுமம்மா!
T.V. நிகழ்ச்சி தனி; நாய்கள் தாமே சென்று
மோப்பம் பிடித்து வாங்க தனிக்கடைகள்!
மேலும் நாய்க்கென்றே மனநோய் மருத்துவர்கள்
தாழ்வு மனப்பான்மையில் தலை குனிந்தேன்
ஆயினும் ஓர் ஆறுதல்
மேலக்காசாக்குடி வெங்கட்டராமன் ராஜகோபால கிருஷ்ணய்யர்
என்ற முழுப்பெயரை சிதைக்காமல் ஒரு முறையேனும்
திருவாய் மலர்ந்தருள முடியாதே இவர்களால்!
புத்தாடை சரசரப்பு, கரவொலியில் கைவளையல் கலகலப்பு!
கொத்து மலர்க் கோதையர்தம் மென்முகத்தில் புன் சிரிப்பு!
கூட வரும் அப்பாக்கள் ஜிப்பாக்கள் காட்டும் அரைமுறுவல்!
பல்சுவை பணியாரம் பலவுண்ட நிறைமுகங்கள்
கம்பி மத்தாப்பிசையில் அவை சிவக்கும்! - மறுநொடியே
வயலின் கம்பி வளம் அதைப் பச்சையாய் மாற்றிவிடும்!
கலசம்போல் வண்ணவண்ணப் பூச்சொரியும் ராகங்கள்
ராக்கெட்டாய் மேல் எழும்பி ஒளிவீசும் பிருகாக்கள்!
விஷ்ணு சக்கரமாய் பொறி சுழற்றும் ஸ்வரக் கோர்வை!
வினாடிக்கொரு வண்ணங்காட்டி ஒளிரும் ராக மாலிகை!
சாட்டையெனச் சுண்டிச் சொக்கவைக்கும் மோராக்கள்!
'தனி'யாக ஆர்ப்பரிக்கும் நீள் சரவெடிப் பேரொலிக்குள்
கட முழக்கம் ஊசி வெடிச்சரம்போல் உள் ஒலிக்கும்!
காதைப் பொத்திடச் செய்திடும் இன்ப வேதனையோ?
மழையில் நனைந்தாலும் பிசுபிசுக்கா புஸ்வாணங்கள்!
அருங்கலை! ஐயமில்லை! சீனாவின் பங்கிதில் சிறிதுமில்லை!
அனைத்துமே சிவகாசி உள்ளடக்கிய தமிழ்மண்தான் - ஆம்
திங்கள் தோறும் ஞாயிறில் தீபாவளி நம் பைரவியில்!
மாதங்களில் நான் மார்கழி என்றார் கிருஷ்ணர்
பேதம் இன்றி சென்னை சந்து பொந்தெல்லாம் நல்
கீதம் ஒலிக்குதடா நந்தலாலா .உன் திறனில்
பாதி கூட இல்லாதவர்களுக்கும் பத்துக்கும் மேல் கச்சேரி
காதில் பஞ்சை கெட்டியாய் அடைத்துக்கொண்டு
கதவையும் சாத்திக்கொண்டு பொய் தூக்கம் (துக்கம் ) ஏன் ?
இசை வீசை என்ன விலை என கேட்கும் கட்சிகள்
நாசத்துக்கே வழி சொல்லும் நம்பிவிடாதே அவர்கள்
நேசம் உன் மூளையை சலவை செயதுவிடும் உஷார்
மோசடி விருதுகள் கடத்தப்படும் குழந்தைக்கு தரும் சாக்லேட்
தேச அடுத்த ஜனாதிபதி நம்ம ஆள் தான் அப்போ இப்போ
லேசாக கை நழுவிய பாரத ரத்னா உனக்குத்தான் - எம் எஸ் க்கு இணை- என்று
ஆசை காட்டி பேசி மயக்குவார்கள் வேசிகள் போல்
சாசுவதத்தை உனக்கு தரக்கூடியது உன் வசம் உள்ள
இசை செல்வம் மட்டும் தான் ;இதையே நம்பு .
குளியல் அறைமேல் கோபித்துக்கொண்டு பொறம்போக்கு குப்பம் வயல்
வெளி என்று போவதால் குளியல் அறைக்கு நஷ்டமில்லை
எல் ஜி பெருங்காய டப்பா வெகு நாள் திறந்து கிடந்தால் வாசம் பறந்துவிடும்
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் ஏறி வதுண்டோ ?
பிள்ளாய் எழுந்திராய் இன்னும் என்ன பேர் உறக்கம் ?
உள்ளம் மகிழ கூடி இசை பாடேலோ ரெம்பாவாய் .
============================================================================
விளம்ப கால ராகம் பாடி விஸ்தாரமாய் ஸ்வரமும் பாடி
நாளுக்கொரு புரட்சி செய்யும் நந்த கோபாலன்---அவன்
பக்கத்து தெரு பெண்ணை அழைப்பான்
தலை கீழாக பாட்டு ஒன்று பாட ச்சொல்லுவான்
எனக்கது தெரியாதென்றால் தன்
கைகள் ரெண்டை கீழே ஊன்றி காலை மேலே தூக்கி நின்று
சிரசாசன வித்தை காட்டி மூச்சும் பாட்டும் இழுத்து பாடும் ---(-வி )
பாடும் போது பேசக்கூடாது -பேசிவிட்டால்
அட்டகாசம் தாங்க வொண்ணாது
இது முறையோ என்று யாரும் கேட்கக்கூடாது
சும்மா ஒரு பேச்சுக்காக சம்பிரதாயம் இல்லை என்றால்
அரியக்குடி செம்மங்குடி அத்தனை பேரும் பார்ப்பான் என்பான் -
குயிலின் பாட்டை புகழக்கூடாது ---புகழ்ந்துவிட்டால்
பொங்கும் சீற்றம் தாங்க வொண்ணாது
அதன் பிறப்பை சுட்டிக்காட்டி பேசி
ஜாதி சேற்றை வாரி தூற்றி
சிவப்புகொடி பஜனைக்கு ஜால்ரா போட செல்லும் அந்த --
பேத்தல் காடு சங்கட கவி .
ஒரு பத்திரிகை செய்தி :
மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்கு சிந்தனை யாளர்களும்உச்ச நீதி மன்றத்தின் (ஓரினச்சேர்க்கை பற்றிய) தீர்ப்புக்கு கடும் கண்டனம் !
ஒரு கவிதை
வருங்காலத் தலைமுறை யினரின் பரத நாட்டியத்திற்கு ஒரு பதம் (ஏதோ என்னாலானது !)
நான் கம்ப்யுட்டர் காட்சியிலே அன்று என்னை மறந்திருந்தேன்
நாற்காலி பின் வந்தவன் எந்தன் கண்களைப் பொத்திவிட்டான்.
மாறன் அவன் செய்த ஜால கள்ளதனமெல்லாம்
நாலு பேர் கேட்க சொல்ல எதுவும் நாணம் எனக்கில்லை
கன்னத்தில் என்ன காயம் என்று கேட்ட மனைவிக்கு நீ
கவ்வியதாகச் சொல்லி பழியை உன் மேல் போட்டுவிட்டேன்
தூது நீ செல்லாயோ, டாம் மியே தூது போய் சொல்லாயோ
நாலு கால் பாய்ச்சலிலே போய் மாறனை அழைத்தோடி வா.
சீ சீ போடி போ டாம்மியே நீ யோ ஒரு பேதை மிருகம் !
ஓரினச் சேர்கை இன்பம் பற்றி என்னைத்தை நீ அறிவாய் ?
மாற்றினத்தின் மேலே உனக்கேன் அப்படி ஓர் ஆசை ?
நானோ ஆணழகன் எனக்கு மாறன் உறவுதான் வேண்டும்
மானுடச் சுதந்திரம் தந்த மாட்சியை இழப்பேனோ ?
உச்ச நீதி மன்றமும் எனக்குத் துச்சமாய் தோன்றிடுதே !
ML wrote: ஏன் மேல் நாட்டு கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள்?
என் கருத்தும் அதுவே தான். சுய நிலை விளக்கம் .
மாக்களும் நாணும் உடல் உறவு எங்கள் மனித உரிமை எனக்கோரி ஆயிரக் கணக்கானோர் தில்லி உச்ச நீதி மன்றத்தின்
முன் வந்து கோஷமிட்டு இதற்காக இன்னாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என குரல் எழுப்புவதை
ஊடகங்கள் தினமும் உலகறிய காட்டுகின்றன இசை நாட்டியம் என நுண் கலைகளில் உலகில் உயர்ந்து நிற்கும் இந்நாட்டிற்கு
இந்த கலாச்சார சிரழிவா என்ற என் உள்ள புலம்பலை கொட்டி திர்த்தேன். என் கவிதை அடுத்த தலைமுறைக்கு என்றும் எழுதியிருந்தேன்.படிப்போருக்கு புரியும்படி எனக்கு சொல்லதெரியவில்லயே அது தான் குறை
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் சயனித்திருக்கும் மலர் மார்ப னை புனித இம்மார்கழியில் போற்றும்
பக்தர்களில் நானும் ஒருவன் . ஆபாசம் என் நோக்கமன்று
பார் புகழ் நம் இசைக்கு வான் உலகில் இசை குழு !
ஊர் சுற்றும் நாரதர் தும்புரு மீட்டி நிற்க
மாசில் வீணைக்கு ஓர் வெண் அணி வாணியவள்
தேசு குழல் ஊதும் தேரோட்டி கண்ணன் உடன்
நந்தியின் மிருதங்கதிற்கு நடராசன் ஆடுகிறார்
விந்தை ! அக்குழுவிலும் குறை இரண்டு கண்டனையோ ?
ஆல்அன்ன லால் குடியும் வில் ஏந்தி சென்ற பின்னே
கோல் ஓச்சி இவ்வுலகை ஆண்டது போதுமென்று
மாண்டலினைக் கொண்டு ஆங்கு மற்றதினை நிறை செய்ய
மாண்டாயோ அவசரமாய் மானுடனே ஸ்ரீனிவாசா !
பதியோடு போர் களமேகிய திரு மாதர்கள் இருவர்
ததி சோரனின் *பிரியாள் சத்ய பாமா எனும் பெயராள்
எழிலாய் சமர் புரிந்தாள் அந நரகாசுரன் அழிந்தான்
அழியாப் புகழ் கொண்டாள் அது தீபாவளி திருநாள்
மட மயிலாள் **துணை புரிந்தாள் என்பதனால் வரம் பெற்றாள்
திட மைந்தனை மனையாளோடு நெடுங் கானகம் போக்கி
சீர் இலங்கா நகர் ***கொடுங் காவலன் முடி பத்தும் சிந்துவித்தாள்
பார் நல மேவிய செயலாகினும் பதி இழந்தாள் பழி சுமந்தாள்
பின் **** யுகமே போற்றிடுமே செயல் ஒன்றே தான் எனினும்
முன் யுகம் வாழ்ந்த ஓர் பெண்மைக்கு பழி யானது விதி வழியோ
* தயிர் திருடியவன் ** மயிலை சின்னமாக கொண்ட கேகய நாட்டு பெண் கைகேயி
***ஒரே சொற்றொடர் நேர் விரோதமான இரு பொருளில் : பெருமை துலங்காத நகர் - செல்வமிகு இலங்கை
****பின் யுகம் கிருஷ்ணாவதாரம் முன் யுகம். ராமாவதாரம் l
Sent from my iPad
Top
Ponbhairavi
Posts: 898
Joined: 13 Feb 2007, 08:05
Location: Pondicherry
Re: KavithaigaL by Rasikas
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
. ரி. க. ம. க. ரி. ச
மே வு. ஸ். வ ர. மே ழு. ( எனினும்)
ந. ல். லி. சை இ ல் லை. ( அதனால்)
வா,வே க. மா. க. வே,வா
நீ ரா க. மா க ரா* நீ
*தெலுங்கில். வா
முதலடியும் ஈற்றடி. இரண்டும் மாலைமாற்று
Top
Ponbhairavi
Posts: 898
Joined: 13 Feb 2007, 08:05
Location: Pondicherry
Re: KavithaigaL by Rasikas
• Quote
Post by Ponbhairavi » 16 Dec 2014, 16:29
தெரு ப் பாவை
நாளொரு teasing உம் தினம் ஒரு பந்தும் நடக்கும் சென்னைமா நகரின் தெருக்களில் அன்றாடம் பணிக்கு சென்று திரும்பும் எளிய தெரு பாவைகளுக்கு சங்கீத சீசன் ஒரு வரம் . இதை அவர்களுக்கே அற்பணிப்போம்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
இசை கேட்க போதுவீர் ,நேரிழையீர் கோணல் வகுடீர்
தெருவில் வெறி நாய் ஓடும் சென்னைச் செல்வர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பேர் கொண்ட வித்துவான்கள் பல இடத்தில பாடுகின்றார்
நாராயணனே நமக்கே free pass தருவான்
பாரோர் பலர் வருவார் கிளம்பேலோ ரெம்பாவாய்
Top
Post Reply
வையத்து வாழ்வீர்காள் நாளும் நம் பாவைபடும்
துயர் கோடி பல கேளீரோ- வேர்கடலை வாங்
கையிலே பை பறிக்கும் பாவிகளுடன் போராடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் cholesterol வேண்டாண்டி
மை தொட்டு எழுதோம் ballpoint , கை பேசி மறந்திடோம்
செய்யாதன செய்யோம் போலீசில் பிடிபடோம் கோயில்முன்
ஐயமும் பிச்சையும் போட்டு மாளாது வெறும் கை காட்டி அவர்
உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
____________________________________________________________________________--
ஓங்கி உ லகளந்த இக் கட்டிடத்தின் மாடியில்
வங்கியில் நம் பாவைக்கு வேலை கிடைத்துவிட்டால்
தீங்கின்றி நாளெல்லாம் நிம்மதியாய் கழித்து
ஓங்கு பெருஞ்செல்வம் ஒரு பயல் அறியாமல்
கண்ணன் வண்ண பணத்தை சுவிஸ் வங்கியில் தேக்கி
இங்கிதமாய் பேசுவது சங்கீத கலை பற்றி
பதுங்கிய குடம் நிறைய வெள்ளியும் தங்கமுமாய்
நீங்காத செல்வமும் நிறைந்தேலோ ரெம்பாவாய்
இது திருப்பாவை ( 4 )
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைய பத்மநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
இது தெரு பாவை (4)
ஆழி மழை கண்ணா, ஒன்று நீ கணம் மறவேல்,
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
பார்லரில் “ dye “ அடித்த கேசம் போல் கறுத்து
பார்டர் ஜரிகை அசல் தங்கம் பட்டு பாடகியின்
தோடு போல் மின்னி தனி தவில் போல் அதிர்ந்து
சர மழையாய் நாட்டின் அணைகளில் பெய்திடுவாய்
இங்கு வேண்டாம் , நாறும் சாக்கடையாய் மாறும் வீதிகள் - நாங்களும்
மார்கழி இசை நீராடி மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
இது திருப்பாவை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் .
இது தெரு பாவை ;
மாயனை மசால் வடை கொணரும் பையனை
தூய வெறு நீர் பாட்டில் ஒன்றும் கேட்க உள்ளே
மறைந்தானை காணவில்லை மணி ஆகிறது
முறையாக தீயில் வேகவில்லை பரவாயில்லை
பய்யவே வந்து அதில் சட்னியை த்தூவி
கையினால் எடுத்து வாயினால் சாப்பிட்டு உள்ளே
போய் நுழைந்து நல்லிசையில் லயித்துவிட்டால்
தீயினில் தூசாகும் பட்ட துயர் ஏலோ ரெம்பாவாய்
திருப்பாவை 6
புள்ளும் சிலம்பின காண்,புள்ளரையன் கோயில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் .
தெரு பாவை. 6
புள்ளு ம் சிலம்பின காண். அகாடெமி வாயிலில்
வெள்ளை நிற கார்கள் பேரரவம் கேட்டிலையோ ?
பிள்ளாய் எழுந்திராய் கையில் அசல் டிக்கெட் உண்டு
கள்ளத்தனம் நமக்கெதற்கு ?கால் வீசி நெஞ்சை
அள்ளும் பைரவியை வாயினால் முணுமுணுத்து
உள்ளம் மகிழும் மாமிகளும் என் ஆர் ஐ களும்
மெள்ள எழுந்து அங்கே வரும் முன்னே நாம்
உள்ளே சென்று A/C யில் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
திருப்பாவை
கீசு கீசுஇது என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயக பெண் பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் .
இது தெரு பாவை
கீசு கீசு என்று இரண்டு குட்டிச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய் குரலில்
காசும் பிறப்பும் கலந்தமைந்த திமிர் போலும் !
மோச மான அம்மையார் முழங்கால் முட்டியால் மொத்தி
ஓசை படுத்தல் நம் நாற்காலி முதுகுப்புறம்
ஓயவில்லை . நான் திரும்பி ராம கிருஷ்ணன் முர்த்தி
கேசவனை பாடுவதை நீ கேட்க விட்டிலையோ
தேச முடையாய் சும்மா இருப்பேலோ ரெம்பாவாய்.
இது திருப்பாவை ;
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
அவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
P63
8இது - தெரு பாவை
கிழ நாய் ஒன்று” லொள்” என்று , எருமையின் கால் உதை பட்டு ,
பாய்ந்தது நடு வீதியில் காண். அரண்ட பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் தடுத்து உன்னை
கூவத்தில் தள்ளி விட முழங்கையில் ரத்தம்சொட்டும்
பாவாய் எழுந்திராய்.ஜோராய் பல்லவி பாட
மாவாய் பிளந்தானை பிறகு கேட்போம் டாக்டர் -
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்து
மாவு கட்டின்றி வீடேக அருளேலோ ரெம்பாவாய்.
சற்றே வறண்டிருந்த காலம் ( hibernation ) முடித்து பாலா வின் கவிதை பொழி காலம் வந்தது களிப்பே வாழ்க புத்தாண்டு !
திருப்பாவை (29) ஈற்றடி -பல ஸ்ருதிக்கு முன்
“மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் “
இத்தை திருநாளே ! என்
அத்தை திருமகள் தான்
தத்தை விழி யழகாள்
மெத்தப் படித்துவிட்டு
கத்தையாய் பொருள் ஈட்டும்
வித்தகி ! பொய் மொழியாள் என்
சித்தம் தனைக் கவ ர்ந்தாள்
நித்தமும் நான் கேட்கும்
முத்த மும் தந்திடாள்
மத்தளமாய் இருபுறமும்
மொத்துக்களே கிட்டியது என்
பித் த ம் தெளிந்தொழிய
உத்தி ஒன்று ரைப்பாயா?
P66 No poems
வீரத்தால் உலகை அடிமைகொண்ட வேந்தர்கள்
பேரழகால் அவர்களை அடிமைகொண்ட மைவிழியர்
அறிவால் வாழ்க்கைக்கு வளம் சேர்த்த விஞ்ஞானிகள்
நெறியால் வாழ்கையின் பொருள் தேடிய மெய்ஞானிகள்
காலஞ சென்றபின் அவர் சென்ற விடம் யார் அறிவார் ?
காலம் நில்லாது தன் கதியில் செல்கிறதே !
காதலில் களிப்பவர் சற்றே நில் என்று சொன்னாலும்
வேதனையில் துடிப்பவர் விரைந்து செல் என்று சொன்னாலும்
ஒன்றுக்குள் இரண்டு
வடக்கே
காதலிக்குத் தான் எழிலாய் கட்டிய சமாதிக்குள்
பேதலித்து உட் புகுந்தான் ஓர் மாமன்னன்
தெற்கே
குருவின் சமாதிக்குள் குடி புகுந்த சிஷ்யை யின்
உருவம் பலபூசைஅறை உள்ளேயும் புகுந்ததேன்னே ! P67
மாறு வேஷம்
பச்சை இலைகள் கூட பல நிறங்களாய் மாறுகின்றன
இந்நாட்டு அரசியல் வாதிகளோ இவைகள்?
இது FALL பருவத்துக்கு ஏற்ற FALSE உருவம் .
வீர தாய்
நீங்களே உயிர்ப்பித்த இலைகளை உதிர்த்து
வெண்ணிற ஆடை அணிந்து விதவைக் கோலம் ஏனோ ?
பச்சையாய் இருந்த அவை தம் இச்சைக்கு நிறம் மாறியதால்..
திட நம்பிக்கை
தரையை மூடிய அரை அடி பனியில்
விண் முட்டும் மரத்துக்கு அந்திம காலமோ ?
இல்லை காத்திருப்பேன்,காலம் மாறும் , மீண்டும் பூத்து சொரிவேன் .
Top
இறவா மரம் சுட்டும் தீராபிரச்னை
மாமியார் --நாட்டு பெண
மரத்தை தாங்குவது நாங்களே என்றன வேர்கள்.
வளர்த்தது நீங்கள் இனி தாங்க போவது நாங்களே என்றன விழுதுகள்
கேட்டு சிரித்தது அனைத்துக்கும் ஆதார மண்.!
வெள்ளை குல்லா.
ஆயிரம் காலத்து அரசு. (மரம்)
உளுத்து கொட்டி அழிவதோ ?
பட்டை இடுக்கில் வெள்ளை கரையான்கள்.
ஒப்புதல் வாக்குமூலம்
விரி சடையோன் ,நீள் முடியோன் ,நெற்றி கண் உதித்த
கரி முகத்தோன் தம்பி குன்றாடும் குமரனை
திரண்டு முன் நின்று திருமலையில் மறைத்ததால்
இரண்டு உருவமும் ஒன்றாய் இசைந்து
வரப்போரம் கண்ட துண்டு flat ஆக மாறியதே
கரையோரம் கண்ட துண்டு பிளாஸ்டிக் பை தொழில்கூடம்
தெருவோரம் கண்ட துண்டு ஏதோ கட்சி அலுவலகம்
திரும்பி வருகையிலே என் மனைவி மகளைக் காணவில்லை!
தூரத்தில் கேட்குது யாரோ ஓதும் மொழி புரியா மந்திரம்.
ஓ இன்று ராம நவமி !!
=====================================
11/04/15
P71
vgovindan wrote:பேறுபெற்றால் பேரழகு குலைந்திடுமென்று,
பேற்றுக்கென்றோர் வாடகை வயிற்றினைத் தேடும் பெண்மை;
தாய்ப்பாலூட்டாது தன்னழகில் தானே மயங்கும் தாய்மை;
தாலாட்டு பாடத்தெரியாத தாய்மை;
இருந்தாலென்ன, இல்லாமலிருந்தாலென்ன?
ஐயகோ! இயற்கையின் இறுதியிதுவோ!
நல்ல கருத்து அழகான சொல்லாட்சி.
அதை தொடர்ந்து ,
தீய விடமென்று அறிந்த பின்னும் கபட
பேயென்றுநன்றே தெரிந்த பின்னும் பவள
வாய் வைத்து மோட்சம் அருளி கரிய
மாயவன் புரிந்த லீலை உலக
தாய்மைக்கே ஓர் மரி யாதை யன்றோ !
Top
14/04/15
புத்தாண்டுக்கு புது வரவேற்பு !!
மாறா ,உன் கௌசிகன் காலத்து கணைகள்
மாறாமல் இன்றும்அப்படியே வைத்திருக்கின்றாய் !!
கொசு அடிக்க பெரும் கோடாலி எதற்கு ?
முசுக்கட்டை நசுக்க ரோடு ரோலர் எதற்கு ?
இக்காலத்து யுவர்களிடம் விசுவாமித்திரன் தீரமில்லை
மிக்க அறிவாற்றலில் தலை தனியே வளர்ந்ததால்
பணி புரியும் நங்கையர்கள் மேனகை ஆக விரும்பாவிடினும்
கணினியும் கை பேசியும் அவர்களை ஆட்கொண்டு விட்டன
உன் கணைகள் வீச்சில் அவர்கள் உருக்குலைந்து போகிறார்கள்
மென் மலர் இதழ்கள் நசுங்கி கசங்கி வதங்கி ….
நாடெலாம் நிகழும் பெண் கொடுமை ஒழிக்க உன்னையே
நாடலாம் என்று எண்ணியே இவ்வேண்டுகோள்
மன்மதா,புத்தாண்டாய் இன்று மலரும் மன்மதனே
உன்னை வரவேற்பதில் எச்சரிக்கையும் உண்டு காண்
உன் மலர் அம்புகள் வீர்யத்தை குறை
தடுப்பூசி Vaccine தயாரிக்கும் அடிப்படையில் - இல்லையேல்
விடமுண்ட முக்கண்ணனை நாங்கள் வேண்டிட வேண்டி வரும்.
நகை வாங்கிய நங்கை முகத்தில் புன்னகை
தோழிக்கு பொங்கும் மனப் பகை
பூட்டை உடைப்பவன் புன்முறுவல் பூத்தான்
தெருவில் தாலி அறுப்பவன் குதூகலித்தான்
போலீஸ்காரன்சத விகித கணக்கு போட்டான்
குடுகுடுப்பைக்கரனுக்கும் குஷி
டயபடிஸ் மருந்து தயாரிப்பாளன் மனம் மகிழ்ந்தான்
கவிஞனுக்கு சில வரிகள் எழுத ஒரு சான்ஸ்
ஆக மன்மதன் வருகை அனைவருக்கும் இன்பம்
Govindan
அருமை.
என் ஊரும் அடுத்தவனுக்கு அடுத்த ஊரே = நல்ல சொல்லாட்சி
"கணக்கு தவறாது நடக்கும் விந்தை என்ன "= கணக்கு தவறினால் தாங்காது இவ் வுலகம் இல்லை இல்லை . இவ்வுலகமே இருக்காது.சற்றே தடுமாறினாலேயே அனைத்தும் நிலை குலைந்து போகிறதே !
P73
19/05/2013
பத்தில் இரண்டு வரும் பழம் பெரும் காதையில்
பத்து ரதன் புத்திரனை பழித்து வழி மறித்தவன்
நூற்றெட்டு தலமமைத்து நாதனை போற்றியதை
சற்றே விரித்து சாற்றினால் புரிந்துகொள்வேன்
பரசுராமன் சென்று தொழுத சிவாலயம் நூற்று எட்டை
நானும் ப்ரத்யக்ஷமாக கண்டேன் வரலாறும் அறிந்தேன்
கோவிந்தனுக்கு நன்றி
பத்தில் இரண்டு வரும் பழம் பெரும் காதையில்
பத்து ரதன் புத்திரனை பழித்து வழி மறித்தவன்
நூற்றெட்டு தலமமைத்து நாதனை போற்றியதை
சற்றே விரித்து சாற்றினால் புரிந்துகொள்வேன்
வினை
12/06/15
கரியில்லை விறகில்லை ,கேஸ் நுண் அலை உண்டு ,
புகையில்லை குனிவதில்லை ஸ்மார்ட் கிட்சன் மேடையுண்டு
நடையில்லை சிரமமில்லை நாலுக்கும் ரிமோட் உண்டு
தடையில்லை ரிமோட்டில் செல்வாரோடு பேசச் செல் உண்டு
குறைவில்லை வசதிக்கு வாட்டும் நோய் பலவுண்டு
நிறைவில்லை மனதில் கை நிறையப் பணம் உண்டு
========================================
இருக்கலாம் இருப்பினும் சிறக்கலாம்.
12/06/15
எளிய இல்லில் பிறக்கலாம்
ஏழை சுற்றத்திருக்கலாம்
அரசுப்பள்ளியிலும் படிக்கலாம்
இல்லறமும் துறக்கலாம்
நேர்மையும் நற்பண்பும் உண்டாகில்
அக்கினிச்சிறகுகள் முளைக்கலாம்
விண் விசும்பப் பறக்கலாம்
பார் போற்றச்சிறக்கலாம்
காலம் வென்றமரரும் ஆகலாம்.
P76 over
மீள் பதிவு
சென்ற மார்கழியில் நான் எழுதிய பாட்டு சில update களுடன் .
தினம் தினம் அல்லலில் மிதக்கும் சென்னை வாசிகளுக்கு இசை விழா ஒரு சிறு relief. தெருக்களில் அவதிப்படும் பெண்களுக்கே இதை அற்பணிப்போம்.
தெருப்பாவை
மார்கழி திங்கள் பனி நிறைந்த நன்னாளில்
ஈர்க்கும் இசை கேட்க போதுவீர் கோணல் வகிட்டீர்
சீர் இழந்த பல கோடி சென்னை நகர் வாசிகாள் !
தார் ரோட்டில் சாக்கடையில் படகோட்டி உயிர் பிழைத்தீர் !
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பேர் கொண்ட வித்வான்கள் பல இடத்தில பாடுகின்றார்
நாராயணனே நமக்கே ஓசி பாஸ் தருவான்
பாரோர் பலர் வருவார் கிளம்பேலோ எம்பாவாய்.
Top
மீள் பதிவு
சென்ற மார்கழியில் நான் எழுதிய பாட்டு சில update களுடன் .
தினம் தினம் அல்லலில் மிதக்கும் சென்னை வாசிகளுக்கு இசை விழா ஒரு சிறு relief. தெருக்களில் அவதிப்படும் பெண்களுக்கே இதை அற்பணிப்போம்.
தெருப்பாவை
மார்கழி திங்கள் பனி நிறைந்த நன்னாளில்
ஈர்க்கும் இசை கேட்க போதுவீர் கோணல் வகிட்டீர்
சீர் இழந்த பல கோடி சென்னை நகர் வாசிகாள் !
தார் ரோட்டில் சாக்கடையில் படகோட்டி உயிர் பிழைத்தீர் !
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பேர் கொண்ட வித்வான்கள் பல இடத்தில பாடுகின்றார்
நாராயணனே நமக்கே ஓசி பாஸ் தருவான்
பாரோர் பலர் வருவார் கிளம்பேலோ எம்பாவாய்.
Top
தெருப்பாவை -2
வையத்து வாழ்வீர்காள் , யாமும் சென்னை வாசிக்குச்
செய்யும் உதவி பல கேளீரோ , வேர்க்கடலை
நெய்யுடன் பால் பொடியும் உணவு உடைகளும்
பைய ஒரு கப்பலில் பாங்காய் அனுப்பினோம்
பொய்யாய் துயிலும் பரமனை எவ்வாறு எழுப்ப ?
கைவசம் உள்ள டாலரில்,கச்சேரிக்கு ப் போக ,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி வேண்டிடுவோம் எம்பாவாய்.
வேர்கடலை நெய் = peanutbutter
பால்பொடி = milk powder P77
Top
நம் மீனவர்கள் பாடு மிகவும் பரிதாபம் !தென் கடற்கரையில் மீன் பிடிக்கச்சென்றால் அண்டை நாட்டு காரன் தொல்லை. வட பகுதி கடற்கரையில்
எண்ணெய் படலம் !மீனவர்கள் துன்ப வாழ்க்கையை பற்றி ஒரு கவிதை:
நடுக்கடலில், நள்ளிரவில் ...
மகிழ்ச்சி பொங்க நெடும் பயணம் மேவிச்சென்ற
எத்தனை மீனவர்கள் எத்தனை மாலுமிகள் ,அந்தோ,
துயர் மிகு அத்தொடுவானில் தொலைந்தே
போய்விட்டனரே ! சோக மிகு விதியின் கொடுமையிது!
நிலவில்லா மையிருட்டில் ஆழங்காணா அலை வெளியில்
கண்ணிலாக் கருங் கடலில் எண்ணிலா மாந்தர்கள்
நிரந்தரமாய் நீருக்குள் அழுந்திப் புதைந்து போயினரே!.
சிதைந்து போன தலைகளே
உங்களுக்கு உற்ற கதி யார் அறிவார் ?
பாதாள இருள் வெளியில் உருண்டு புரண்டு உலகறியாப்
பாறைகளை உயிரற்ற உங்கள் நெற்றியியால் முட்டி த்
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களே ! நாளொன்று தவறாமல்
கடலோரம் வந்து வராத உங்கள் வருகையை
எதிர்பார்த்து எதிர்பார்த்து தம் ஒரே கனவும் நிறைவேறா
ஏமாற்றத்தில் உயிர் நீத்த வயோதிக
பெற்றோர்கள் தாம் எத்தனை பேர். !
கண் விழித்திருக்கும் இரவுகளில் சில சமயம்
உங்களைப் பற்றிய பேச்சு வரும் .
கரை மணலில் அரை குறையாய் ப் புதைந்து கிடக்கும்
பழைய துரு ப்பிடித்த நங்கூரம் ஒன்றினைச்
சுற்றி அமர்ந்து கூடி களித்திருக்கும் சில நாளில்
பழைய பாடல்கள் ,கேலி பேச்சுக்கள் ,வீர சாகசங்கள் ,
உங்கள் காதலிக்கு கிட்டாத முத்தங்கள்
ஆகிய இவற்றுடன் இணைத்துப் பிணைத்து
நிழல் படிந்த உங்கள் பெயரும் பேசப்படும் சில காலம் வரை .
நீங்களோ ஆழ்கடல் அடியில் பச்சைப் பாசி படுக்கையில்
படுத்து உறங்கிக் கொண்டிருப்பீர்கள் !
யாரோ கேட்பார்: எங்கே அவர்கள்? ஏதேனும் தீவு ஒன்றின்
மன்னர் ஆகி விட்டனரோ ? நம்மைக் கைவிட்டு
இதனினும் செழுமை மிகு இடம்
வேறெங்கும் போய்ச் சேர்ந்து விட்டனரோ ?
காலப்போக்கில் உங்கள் நினைவும் கூட மறைந்துவிடும் .
உப்பு தண்ணீரில் உடல் கரைந்து பொயிற்று
உள்ளத்து நினைவிலிருந்து பெயர் கரைந்து போயிற்று
தொடரும் ...
பிரபல பிரெஞ்சுக் கவிதைகள் ; VICTOR HUGO
Top
நடுக்கடலில் நள்ளிரவில் ….(தொடர்ச்சி )
ஒவ்வொரு நிழலின் மீதும் அதனினும் கரியதோர்
நிழலைக் கொட்டி மெழுகி மூடிவிடும் காலனவன்
இருள் படர்ந்த கடலின் மெல் நினைவகற்றும்
மறதி எனும் போர்வையினைப் போர்த்திட்டான்
அனைவர் கண்களிலிரிந்தும் விரைவில்
உங்கள் நிழலும் மறைந்து விடும்.
அவர் அவர்க்கு அவர் அவர் பிழைப்பு இருக்கிறதே !
சிலருக்கு ஏர் கலப்பை சிலருக்கு கட்டு மரம்
ஆனாலும் புயல் காற்று பயங்கரமாய் கொக்கரிக்கும்
, இரவுகளில் நெற்றி வெளிறிய உங்கள் விதவைகள்
மாத்திரம் தனிமையின் வெறுமையில்
உங்களுக்காகவே காத்திருந்து காத்திருந்து
சலித்துப் போன பின்னும் கூட
உங்களைப் பற்றித்தான் பேசுகின்றனர் ,
கணப்பு தணல் மீது படிந்த சாம்பலையும்
தம் நினைவுகள் மீது படிந்த சாம்பலையும் கிளறியபடி.
காலப்போக்கில் கல்லறை அவர்கள் கண்களையும்
மூடியபின் உங்கள் பெயர் சொல்ல எதுவுமே இராது.
எங்கள் குரல் எதிரொலிக்கும் சிறு இடுகாட்டில்
எந்த வொரு மூலை முடு க்கிலும் சாதாரண
ஒரு நடுகல் கூட இல்லையே உங்கள் நினைவு கூர
குளிர் காலத்தில் உங்களுக்காக இலை உதிர்க்க
அழுமூஞ்சி செடி கூட இங்கில்லை !
தெருக்கோடி திருப்பத்தில் பழைய தோர் பாலத்தில்
அமர்ந்து ஒரு பிச்சைக்காரன் சம தொனியில் சோகமாய்
இழுத்து முனகும் தெம்மாங்கு பாடலில் கூட
உங்கள் நினைவு கூரும் வரி ஒன்று கூட இல்லையே !
இருள் சூழ் நள்ளிரவில் நடுக்கடலில் மூழ்கி
மறைந்து போன அக் கடலோடிகள் தாம் எங்கே ?
ஆர்ப்பரிக்கும் அலை களே ! எத்தனை சோகக்
கதைகளைத்தான் நீங்கள் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்.!
ஆழ் கடலே ! தாய் மார்கள் உள்ளங்களை உலுக்கி
மண்டியிட செய்யும் பாழ் கடலே ! நீர் ஏற்ற நாள்களில்
திரண்டெழுந்து வந்து எமக்கு அச் சோக க்
கதைகளைத்தான் சொல்லி செல்கின்றீர்கள் .
ஆம் மாலை பொழுதினிலே கரை ஏறி எமை நோக்கி
வரும் போது உங்கள் குரல் தழு தழுத்து
ஓலமிட அச்சோகம் தான் காரணம் .
VICTOR HUGO(1840)
பிரபல பிரெஞ்சு கவிதைகள்
ஒன்றுக்குள் இரண்டு :-மூன்று
காதலிக்கு தான் அமைத்த கோலமிகு சமாதியில்
பேதலித்து உட் புகுந்தான் பாதுஷா , அது
பதினால்வரை மணந்தும் தலாக் இலா தனி உறவு .
கடல் கடந்து வந்த தோர் சிஷ்யை யின் பூத உடல்
கடல்கரை யோரம் புதுவையில் குருவின் சமாதிக்குள் .!
உடல் கடந்த ஆன்மிகத்தின் தொடர் பயணம் .
திரை கண்ட நாயகனைத் தன் தலைவனாய்
வரித்து ,முதல்வராகி ,உலகறியா துயிர் நீத்து ,
மெரினாவில் உடன் துஞ்சும் அரசியல் உறவிது காண்!
உயிர் பிரிந்தும் உடல் பிரியா உறவுகள்!,
அரசி ,
கிண்ணத்துக்குள் கிடந்த என் எண்ணங்களை
பண்ணின் "rasikas " தான் பரிமளிக்க செய்தது
கண் இரண்டினைப் போல இரு மொழியில் கவி பொழியும்
தண் சொல் அரசியார் எனைப் பற்றி இவண்
விண்டுரைத்த பாராட்டு க்கு என் நன்றி யாண்டும் .
ராஜகோபாலன்
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ "கொலைக்கருவி "
நாட்டின் ராணியின் தலையையும் கொய்த வரலாற்றை
அற்புதமாய் விவரிக்கும் அலெக்ஸாண்டர் துய்மாவின்
நாவலை நான் முற்றிலுமாய் தமிழாக்கம் செய்த நூல்
சிவப்பு மாளிகை வீரன் ( 500 பக்கத்தில் )
மணிவாசகர் பதிப்பகத்தால் (044 -25361039 )
இது தருணத்தில் வெளி வந்திருப்பது இனிய செய்தி P82
அகர முதல எழுத்தெல்லாம் சாற்றுவது
ஆள்பவர்தம் அயோக்கிய தனமே அந்தோ !
இது நீரோ வாசிக்கும் பிடில் அல்ல
அக்கினி குஞ்சு .
பஞ்சிலே பற்றி , பின் அஞ்சு மாடி கடந்து ,
அஞ்சிலே ஒன்றை நோக்கி விசும்பிய
அஞ்சிலே ஒன்றை அணைக்க வந்த வண்டிகளில்
அஞ்சிலே ஒன்று போதுமான அளவு இல்லை.!
பஞ்சவடி நின்று வழி செல்வோர்க்கருள்
அஞ்சனை மைந்தா வாலறிவன் நீ உன்
நெஞ்சில் கூடவா கொஞ்சம் ஈரமில்லை ? ஈர்
அஞ்சு தலையோன் தலைநகர் , எழில்
கொஞ்சும் மதுரையுடன் சென்னையையும் எண்ணி
அஞ்சி நடுங்கிட செய்தனையே , நங்கைநல்லூரா
P.B யின் முதல் கவிதையை தொடர்ந்து ஒரு அந்தாதி
……...பின் ஓட்டம் பிடிப்பார் .
ஓட்டம் பிடித்தவரை சட்டம் தேடி பிடித்தவுடன்
ஆட்டம் காட்டுவார் சமூக சேவகன் தான் என
ரோட்டில் பெரும் ரவுடிகள் கூட்டம் கூட்டுவார்
கொட்டம் அடித்து மூட்டுவார் பெரும் தீயை.
மூட்டிய தீ அடங்கும் முன்பே அவர் தோட்டத்து லீலைகள்
வீட்டுக்கு வீடு வண்ண T. V யில் காட்டப்பட
கிருட்டிணன் நான் பெண்ணை உய்வித்து விட்டேன் என்பார்.
கெட்ட கேட்டுக்கு கீதாச்சார்யன் பெயரா ? அப்
பெயரைச் சொல்லாதே அவர் பிறந்த சிறைக்கு
கயவன் நீ இருபது ஆண்டுகள் செல் எனும் நீதி கேட்டு
பயந்து பேடி அவன் விழுந்து புரண்டழுதாலும்
நயமிக்க வெறும் நடிப்பிது நாமறிவோம்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெயிது
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?
Top P83
11/04/17