13/11/17
=================================================
14 into10அளவுள்ள அறையில் கீச்சு சப்தத்துடன் சுழலும் மின் விசிறி ???
______________________________________________________________________________________
Here is an interesting anecdote about" Asu kavi " ( a poet who sings on any topic given) Kalamegam :
He was asked to make a poem about an useless thing viz an inflexible ,stone- like bow tied with a worn out chord. he was given the first line below and asked to complete:
நாண் என்றால் நைந்திருக்கும், நற் சாபம் கற்சாபம் ( சாபம் =வில், bow)
here we can see the output of his ingenious mind:
நாண் என்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்
பாணம்தான் மண் தின்ற பாணமே- தாணுவே
சீர் ஆரூர் வாழும் சிவனே! அ(௦ஹ்)௦து எப்படி
நேர் ஆரூர் செற்ற நிலை ?
பாணம் = arrow
மண் தின்ற பாணமே eaten by earth=one who has eaten earth referring to krishna's childhood deed same expression for active and passive voice in tamil- Lord Vishnu was the arrow of Sivan, meru parvatham was his bow and the snake venemous vasuki his chord.ஆரூர் செற்ற= won over the enemies( ref to திரிபுரம் எரித்தது
rajagopalan.
.
__________________________________________________________________________________________________
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு- இது
ஆற்றங்கரை மரத்து புள்ளினங்கள் கோஷ்டி கானம --
பாடி முடித்துவிட்டு ஓடிடும் வித்வான்கள் திசை நோக்கி.
_____________________________________________________________________________
காதல் லீலைகளை ஸ்ருங்கார காவியமாய்
கவி வடித்தான் ஜெயதேவன் -800 ஆண்டுகள் முன்
பால லீலைகளில் மனதை பறிகொடுத்து
குதித்து கூத்தாடினான் வேங்கடகவி 300௦௦ ஆண்டுகள் முன்
இவை வெறும் விளையாட்டு- முருகனுக்கோ
ஆற்று படைகண்டான் நக்கீரன் 2000ஆண்டுகள் முன்
ஈடில்லா சந்த கவிதையில் பல்லாயிரம் பாட்டில்
திருப்புகழ் பா டிவிட்டான் அருணகிரி 400 ஆண்டுகள்முன்
இவன் வேங்கட கவிக்கும் ஆசான்
கச்சியப்பன் கந்தனுக்கு பெரும் புராணத்தை அற்பணித் தான்
இன்றும் கவி தேவராஜன் அணிவித்த கவசம்
நம் அனைவரையும் காத்து நிற்க
குறை ஒன்றும் இல்லை கோமானே
கைலாசத்து உறை வேங்கடவா
காற்றும் கடலும் சீறு மென்று
நேற்று வந்த செய்தி கேட்டு
பீதி கொண்ட மாந்தர் கூட்டம்
வீதி வந்து வெதும்பி நிற்க
வாசல் வரை வந்தும் உள்ளே
வாராமலே சென்ற உந்தன்
பாரா முகம் போற்றுகின்றோம்
பாராமுகம் :1-indifference
2- the face that we did not (fortunately)see
பாரா முகம் வேண்டி
ஜோராய் கவி எழுதி
பூர்வி கல்யாணியில்
கார்வை தனை சேர்த்து
நெஞ்சுருக பாடிவிட்டால்
பஞ்சாய் பறந்து போம்
வேண்டாத விபரீதம்
கண்டங்கள் த ண்டி எங்கோ
தாண்ட நெடில் கால்( வாங்க) வேண்டும் என இப்போது புரிந்துகொண்டேன்
சீறு சினத்துடன் ஆறு முகதினன குன்றேகினன் என்றதுமே
ஆறு மனத்தோடு ஆனை முகத்தினன் தானும் கிளம்பினனே
ஆறு குளக்கரை அரச மரத்தடி அருகம்புல் எருக்கு அன்றி
வேறுஎதும் வேண்டிலா தயை மனத் தமையன் தாளடி போற்றுவொமே
வந்தனையோ நந்தனமே?
நந்தனுக் குவந்தவன் அந்தமில் சோதியன் செந்தழல் ஏந்தும் கூத்தன்
மைந்தருள்மூத்தவன் தந்தம் சுகந்தம்கமழ் ஐந்துகரத் தானைமுகத்தோன
சிந்தை மகிழ் செந்திலுறை மயிலேறிவேலேந்தும் சந்த தமிழ்கந்தனுக்கும்
வந்தனைகள்அனந்தமாய் ஆர்வமுடன் செய்திடவந்த இந்நந்தனம் வாழ்க
நயமோ நயம !
அன்னத்தின் வண்ணத்தில்
ஆடு மயில் வரக்கண்டு
கன்னத்தில் கை வைத்து
கலங்கினார் CML.
அமெரிக்க வெண் பனி
அன்னத்தை மூடவில்லை
அஞ்சேல்
anemia சோகை இது
தோகையில் பழுதில்லை
நாளை வரும் கோல மயில்.
அரசியார் தேற்றினார்
CML அரசியார் சீலர்V K ஆகியோர்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் !
E-mail போல் விரைவாய்
வண்ணகோலமாய்
வந்த அம் மயில் மீது
இலவச இணைப்பாய் போனஸ் போல்
வந்தனர் பெண் மயிலிருவர்
04/06/12
கோடை வெயில் கொளுத்துகிறது
ஆற்றில் தண்ணீர் இல்லை
வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்களை
ஆள்பவர்கள் மனத்தில்
காரம் உண்டு வீரம் உண்டு
ஈரம் இல்லை
நீர் இல்லா ஆற்றில் மணல் தடம்
இப்போது அதுவும் கொள்ளை
எங்கெங்கும் flat
சிற்றறைகள் கொண்ட சிறைகள்
வாடகை பத்தாயிரம்
தண்ணீர் வாங்க ஐயாயிரம்
அருணா ஜலம் கருணா முர்த்தி !!
மக்கள் சேவையே மகேசன் சேவை
தவித்த வாய்க்கு தண்ணீர் –பணத்துக்கு
100 லாரிகளுக்கு முதலாளி
100 flat காம்ப்ளெக்ஸ்
இனி business மாற்றப் போகிறார்
மூலப்பொருள் தேடி 100 மைலா போவது !
சமூகப் பணி என்னாவது?
T.V. தொடர்கள் தயாரிக்க போகிறாராம்
தண்ணீர் மணல் வியாபாரம் விட்டு
கண்ணீர் வியாபாரம்
அது வற்றாதல்லவா ??.. p36
==============================
25/06/12
வீட்டிலே எல்லோரும் ஒரே நிறை
ஒருவருக்குத் திருமணம் ஆகும்வரை
__________________________________________________________________________________________________________________
தலையாலே தான் தருதலால் ...
இளநீரில் இளநீரில்லை
சாத்துகுடியில் சாறில்லை
நிலத்தடியில் நீரில்லை
பூமித்தாயே !!
ஆசாமிலும் மும்பையிலும்
உன் தாளுண்ட நீர்தான்
ஆறாய் பெருக்கெடுத்தோடி
இங்கு வரத்தான் ஆறில்லை
மேகமெனும் உன் தலையாலே
கொண்டுவந்து தான்
தரக்கூடாதா தமிழ்நாட்டுக்கு ?
ஆறு =வழி ,பாதை
ஆற்றாமை புலம்பலுக்கு ஆறுதல் என வந்த
கூற்றின் ஒளி உண்மை நயத்துக்கு என் நன்றி
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எனும் பெயரில்
யாரார் இருக்கின்றார் என்பதையொட்டி சட்டம்வரும்
பாரதி சொன்னான் :
பேய்கள்ஆட்சிசெய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்-சோனி
நாய்களும் சொங்கி சிங்கமும் சொக்கட்டான் ஆடையிலே
சாத்திரங்கள் மட்டுமன்றி சட்டங்களும் பணம் தின்னும்
பத்திரமாய் வைத்திட சுவிஸ் வங்கி போல் பலவிருக்க
பாய்ந்தது அந்நாட்டில் நம் பணம் பெருவெள்ளமாய்
காய்ந்தது இந்நாட்டில் நம் பழம் பெருமாண்பெலாம்
நெறிஞ்சி முட் செடிகள் நாடெலாம் படர்ந்துவிட
குறிஞ்சி மலர்க் கொத்தை பறிக்க ப்பகற்கனவா?
நன்கறிவேன். ஆகையால் தான் நான் வேண்டியது
தாகம் தீர இத்தரை வழியை நீக்கிவிட்டு
மேகமெனுமுன் தலையாலே கொண்டுவந்து தா வென
நிலையாத செல்வத்திற்கு அலையாத சில நல்லோர்க்கு
தலையாலே தான் தரும் திருவண்ணா மலையானை . P41
கவிதைக்குள் ஒளிந்திருப்பது....
22/01/12
கவிதை சொல்லுக்குள் ஒளிந்திருப்பது
விதை .விதைக்குள் ஒளிந்திருக்கும் இதை
தை பட்டம் விதைக்கயிலே தெரியாது
ஐ[/i ந்து ஆண்டுகள் சென்றபின் தான்
பவழ வண்ணக் காம்பு விண்ணோக்க
மல்லிகையை விஞ்சும் மணம் மனங்கவர
பவழமல்லி பூத்துக் குலுங்குவதைக்
காண் ! விதை தாய் மண்ணுக்கு மலர்ப்
பாய் விரித்து மணம் பரப்பக்
காண்பாய் கண் கொள்ளா காட்சி
கவிதையை விதையுடன் சேர்த்துக் கவி
தைத்த பொதுக் கதை இத்தனையும் கவிதைக்குள்
====================================
31/07/12
விண்ணின்று பொழிமழை நீர் தூய்மையின் இலக்கணம்(H2O)
மண்ணுலகடைந்த பின் தான் புகுந்த இடத்திற்கேற்ப
வண்ணம் ஏற்று தன்னை மாற்றி ப் பெருக்கெடுத்து
தண் ஆறாய் ஓடி வழி மாசெலாம் தான் சுமந்தும்
நுண் கலைகள்எனும் அமுதூட்டி மண்ணின் வளம் கூட்டி
மாண்புடன் ஆழி சேர்ந்து தன்னைப் புதுப்பித்து
மீண்டும் விண் அடைகிறது ஆவியாகி-ஆதவன் உதவியால்
பெண்மையே நீயும் அவ்வாறே-உன்ஆதவன் மா தவத்தோன்
====================================================
25/08/12
இறந்தும் உலகெழில் காண வேண்டின்
விரைந்து செய்திடுக கண்தானம்
கண்ணினைத் தானமாய் செய்திட்ட சீர்மிகு
பெண்ணிற் பெருந்தக்க யா வுள?
காணாதார் காட்டுவான் தான் கண்ட கண்களைத்
தானமாய் த் தந்த தயாளன்.
காண கண் கோ டி வேண்டும்
-அதற்கு நாம் கண்தானம் செய்திட வேண்டும்
=========================================
26/08/12
இம்மண்ணை விட்டு விண் செல்லும்போது
உம் கண்ணை விட்டுச் செல்லவும்
ஒளியிழந்த கண்ணினார் நீங்கள் கண்ட
வெளி உலகை காண அவை உதவும்
கண்ணா என்றாள்
கண்ணே என்றான்
விண் ணேகி இருவரும் சென்றபின்
இன்றும் என்றென்றும்
காதலன் கண்ணன்தான்
காதலி கண்ணே தான்
கண் தானம் இப்புவிகாண
என்றும் ஒரு தொடர்கதை .
P49
_____________________________________________________________________________________-
Thanks Arasi. as suggested by you, I have added two more and sent It to Aravind Eye Hospitals.
இம்மண்ணை விட்டு விண் செல்லும்போது
உம் கண்ணை விட்டுச் செல்லவும்
ஒளியிழந்த கண்ணினார் நீங்கள் கண்ட
வெளி உலகை காண அவை உதவும்
கண்ணா என்றாள்
கண்ணே என்றான்
விண் ணேகி இருவரும் சென்றபின்
இன்றும் என்றென்றும்
காதலன் கண்ணன்தான்
காதலி கண்ணே தான்
கண் தானம் இப்புவிகாண
என்றும் ஒரு தொடர்கதை .
P49
===============================
07/09/12
திருட்டே திறமையென துதி பாடும் திருநாட்டில்
முறைமை யையும் நேர்மை யையும் எதிர் பார்த்துகொண்டிருத்தல்
பாலை வனத்தின் பொரியும் மணல் நடுவே ஓர்
கோலப் பங்கயம்மலரக் காத்திருப்ப தற்றே
பெண்ணிற் பெருந்தக்க யாவுள -குறள்!
கண்ணிற் பாவையன்றோ -பாரதி !!
"பால" தாத்தாவிற்கு பேத்தி பேரரசி!!
சீல மிகு வாழ்த்துக்கள் –சிறக்கட்டும்
P50
__________________________________________________________________________________________________
P Bala wrote:
ரசிகர்கள் ?
இத்தனைக்கும் காரணமே ஓயாமல் பெசிக்கொண்டிருநத அவர்கள் தானோ என்னவோ?
அப்படியானால்
ரசிகர்கள் : தம் நடத்தையை நொந்துகொண்டனர்
அல்லது :
இத்தனையும் நிகழ்வித் த தம் ஆற்றலை எண்ணி பெருமை பட்டுகொண்டிருந்தனர்
( நவராத்திரி கொலுவில் அடுக்கி வைத் திருந்த பொம்மைகளை கலைத்து மகிழும்
மூன்று வயது குழந்தையைப் போல
_____________________________________________________________________________________________________-
வேறு ஒரு தளத்தில் ஸ்ரீதர் எழுதிய வெண்பாவை தழுவிய ஏன் பா :
நீலமென வந்தாய் நிலமெங்கும் நீ செய்த
கோலமது போதாது--என கோர சுனாமி ,தானேயில்
பணம் சுருட்டிப் பழகிய பலே அரசியல் வாதி பலர்
பிணம் தின்னிக் கழுகென பேராசையில் காத்திருக்க
அவர்களையே ஏமாற்றி அசத் தி வீழ்த்திவிட்ட
சமர்த்தன் நீ -சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
பூழுதியில் எறிந்த வீணைகள் !!
சேறும் சகதியும் நாற்றமிடும் சந்துமுனை
ஆழப் பதிந்திருந்த பல பன்றிகள் கால தடங்கள
சிதறிச் சிதைந்து பாதி புதைந்தும் கிடந்தன
ஒரு சிவப்பு ரோஜாவின் பூவிரிச் செவ்விதழ்கள்
ஆட்டை விரட்டும் உன் முள்ளை நம்பி வரலாமா ?
இன்று வீதிகளில் ஆட்டைவிட பன்றிகளே அதிகம் .
முறிந்த கழுத்திலிருந்து பெருகிய குருதியில்
ஒட்டிக் காய்ந்துபோன சில பச்சை சிறகுத் துண்டு
சிதைந்து கிடந்தது அருகே ஒரு கிளியின் சிவந்த மூக்கு
கொஞ்சு மொழி பேசி தத்திதிரிந்த தத்தையே
உன் யஜமானியின் தோளும் சிறு கூண்டுமே உன் பாதுகாப்பு
தோட்டத்தில் வீட்டைச்சுற்றி வட்டமிடும் காட்டுப்பூனை
நீண்டு மருண்ட விழிகள் நிலை குத்தி நிற்குதையோ !
தொட்டால் சிலிர்க்கும் உன் புட்டா பட்டு மேனி
மார் பிளந்து குடல் பிதுங்கி குருதியில் மிதக்குதய்யோ !
சுதந்திரம் என நம்பி துள்ளித்திரிந்த மானினமே
இரு கொம்புகளை நம்பி தோட்டத்தை விட்டகன்றனையே !
ஓநாய்க்கும் உறுபுலிக்கும்கூட இன்று ஊருக்குள் சுதந்திரந்தான்
மெல்லினத்தை காக்க வல்லினம் தவறிய நாட்டில்
ஆயுதங்கள் எழுத்தளவே ,ஆபத்தில் உதவாது
சுதந்திரம் பொருளற்ற வெற்று ஏமாற்று வேலை
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
நாமே முன்வந்து கட்டுண்டு காத்திருப்போம்
காலம் மாறிச் சற்றே நாகரிகம் மலரும்வரை
பறவைகள் விற்கும் கடைக்குச்சென்றேன்
பறவைகள் வாங்கி வந்தேன்
உனக்காகத்தான் என் அன்பே
மலர்கள் விற்கும் கடைக்குச் சென்றேன்
மலர்கள் வாங்கி வந்தேன்
உனக்காகத்தான் என் அன்பே
குஜிலி* கடைக்குச் சென்றேன்
சங்கிலிகள் வாங்கி வந்தேன்
கனமான தடி சங்கிலிகள்
உனக்காகத்தான் என் அன்பே
பின் அடிமைகள் விற்கும் கடைக்குச் சென்றேன்
உன்னைத் தேடிப்பார்த்தேன்
உன்னை அங்கு காணவில்லையே
என் அன்பே .
குஜிலி =பழைய இரும்பு சாமான்கள் விற்கும் கடை
What would be her reply if reads that poem?
My imagination goes like this:
பறவைகள் விற்கும் கடைக்குசென்றேன்
நீ வந்து வாங்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்
பூக்கள் விற்கும் கடைக் குசென்றேன்
நீ வந்து வாங்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்
பூங்கா விற்கு சென்று உனக்காக காத்திருந்தேன்
நீ நேராகச் செல்வதைக்கண்டேன்
அடிமைகள் விற்கும் கடைகள் நோக்கி
கையில் ஒரு இரும்பு சங்கிலியுடன் .
ஏமாற்றத்தை விழுங்கி கொண்டு எங்கோ மறைந்து விட்டேன்
தெய்வத்துக்கு என் நன்றியைச் சொல்லியபடி
PB's puzzle at 1318
முறத்தினால் புலியை த் துரத்தி விரட்டிய
குறத்தியின் வீரத்தில் பெல்ஜியம் கண்டவன்
துருபதன் திருமகள் துவண்ட துன்பத்தில்
திரு மிகு தாய் நாட்டின் துயர்தனை க் கண்டவன்
கறுப்புச் சட்டைகள் மறைத்த திரை கிழித்து
பார் அதிரப் புறப்பட்ட பாவலன் யாரோ
அவர் தான் இவரே
P53
காதார் குழை ஆட , கை பூண் வளை ஆட
மலர் சரம் குழலாட ,ரசிகர் தம் தலை ஆட
ராகம் பல பாடி, அபங்கத்தை அலறி ப்பாடி
பொருள் தருவோர் துதி பாடி ,அவர் சொல்படி ஆமா பாடி
விருதெனும் பெயரில் சர்ச்சை மிகு " -நிதி" ஒன்றை
அளித்துப் புயல் கிளப்பும் அகாடெமின் யின் அருள் நாடி
பாடகர் படும் பாடுகளோ !-அம்மாடி !!-அவர்
ஜாதகத் திறம் பாடி ஆடேலோ ரெம்பாவாய் !!
and here is theoriginal( Manikkavachagar may pl excuse me )
திருவெம்பாவை பாடல் -14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். ———[ 14 / 20 ]
P54
வெட்டி ஒட்டுதல் கம்ப்யுட்டரில் ஒரு உத்தி மட்டுமன்று.தற்கால ஓவியத்தில் ஒரு பாணியும் கூட (collage) .இந்த வெட்டி ஒட்டுதலை கவிதையில் புகுத்தியவர் Jacques Prévert.அதிகம் புழக்கத்தில் உள்ள இரண்டு சொற்றொடர்களை எடுத்துக்கொள்வார் .ஒன்றிலிருந்து ஒரு சொல்லை வெட்டி மற்றதிலும் அதிலிருந்து ஒரு சொல்லை வெட்டி இதிலும் மாற்றி போடுவார் . படிக்கும்போது சற்றே விபரீத மாகவும் நகை சுவையுடன் கூடியதாகவும் இருக்கும்
அவருடைய Cortège எனும் கவிதையிலிருந்து நான்கு வரிகளை கீழே தந்திருக்கிறேன்
சொற்றொடர் அமைப்பு ஒவ்வொரு மொழிக்கும் தனித் தன்மை வாய்ந்தது .இருப்பினும் மேற்கண்ட வரிகளை ஓரளவிற்கு தமிழாக்க முயன்றிருக்கிறேன் :
தங்கத்தாலான முதியவரும் சோகமிகு கை கடிகாரமும்
வேலைக்கார ராணியும் இங்கிலாந்து ஆசாமியும்
பீங்கான் பேராசிரியரும் தத்துவ ஒட்டவைப்பவரும்
வட்ட மேசை ஆய்வாளரும் பாரிஸ் gas கம்பெனி குதிரை வீரர்களும்
இதே பாணியில் வெட்டி ஓட்டல் கவிதை தமிழில் செய்து பார்க்கத் தோன்றியது . இதோ :
சோழர் கால கிரிக்கட் ஆட்டக்காரரும் run outஆன சிற்பங்களும்
ராகம் கண்டுபிடிக்கும் எருமையும் கயிறை அறுத்துக்கொண்டு ஓடிய 3 வயது சிறுமியும்
நீச்சல் உடையில் பாகிஸ்தான் பயங்கர வாதிகளும் எல்லை தாண்டிய கவர்ச்சி நடிகையும்
பிணத்துக்கு பாராட்டு விழாவும் மந்திரிக்கு இறுதிச்சடங்கும்
நீங்களும் சில எழுதுங்களேன் !!
கற்க கசடற கற்பவை கற்றபின்
அன்றே மறப்பது நன்று .
and the left overs:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
நிற்க அதற்கு தக.
தீபாவளி மலரில் வந்த பேராசிரியர் பசுபதி அவர்கள் கவிதை மிக உயர்ந்தவை அதை வேறு ஒரு தடத்தில் படித்தபோது எனக்குத் தோன்றிய சில வரிகள் இவை.
திருப்பு முனைகளில் திசை திருப்பிய பெண்டிர்
விளையாட்டுப் பருவத்தோன் வில்லால் பட்ட அடி
களையாமல் உளம் வைத்து கான் ஏகச் செய்துவிட்டாள்
முடி சூடும் முதல் நாளே, மந்தரை தன் தந்திரத்தால்
அடி பட்ட பெண்மையின் ஆழ் மன ச் சீற்றமிது.
என்றோ தந்த வர மிரண்டை மன்றாடி ,கொண்டவனைக்
கொன்றேனும் அவை பெற்று நாடக மயிலானாள்.
போர்க்களம் என்ன பொழுது போக்கு பூங்காவா
சீர் மனையாளை அங்கே உடன் அழைத்து செல்வதற்கு ?
தார் வேந்தன் தசரதன் தந்த விலை தன உயிராம்
பெண்மையின் காதல் உணர்வினை கிண்டல் செய்து
ஆண்மையின் உருவான அவன் அவள் மூக்கறுததான்
சீறி எழுந்தது பெண்மை சினத்தோடு அவமானம்
சீர் அழிந்து போனது சீரிலங்கை பேரரசு
பங்க முற்ற பெண்ணொருத்தி பழிவாங்க திட்டமிட
மங்கல நாண் இழந்தாள் மாசிலா மண்டோதரி
தங்கத் தரம் கொண்ட தாரைக்கும் அதே கதி
பொங்கும் பெரு வெள்ளம் மான்களையும் மாய்ப்பது போல்
எண்ணிலா இன்னலுக் இலக்கான பெண்திலகம்
மண்ணின் மகள் தீக்குளித்து எழுந்த பின் தான்
ஏற்கும் இப்பாழ் உலகம் என்றாரோ சொல்வதற்கு
கற்பின் கனலி அவள் செய்திட்ட குற்றமென்ன?
"நாடக மயில் ", "கற்பின் கனலி" ;இவை கம்பன் தரும் அடை மொழி
by Ponbhairavi » 07 Nov 2013, 10:22
my guess is
பாப்பா=பாவலர்கள் பா i e original story.
பாக்கி பா=other observations
அப்பாவி இப்பாவி எப்பா தப்பா புனைந்திடினும்
தப்பாது உவப்பார் cml அப்பப்பா!
CML Arasi thanks..
நெஞ்சில் நஞ்சில்லாப்
புகழ்ச்சியில் வஞ்சமில்லை
மணியான சொல்லை
பணிவோடு அணிவோர்க்கு
translation of a french poem
உன் வாழ்வினை முடிப்பதற்காக நான வரவில்லை .
உன் வாழ்வினை முடிப்பதற்காக நான வரவில்லை
அதை உனக்கு வேறு ஒரு கோணத்தில் காண்பிக்கவே வந்திருக்கிறேன்
அது தான் கிராம புறத்தின் ஒளி கடலின் ஒளி என்றும் கூறலாம்
இரு புறமும் சுவர்கள் அடைத்த நீண்ட தாழ்வாரத்தில்
வெளியேற வழி தெரியாத வியூகத்தில் நீ
காலத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தபோது
அச்சுவர்களுக்கு மேல் இருந்து நான பார்த்துக் கொண்டிருந்தேன்
உன் தடம் வசந்த காலத்தில் போய்கொண்டிருந்தது
நேர்கோடான கனவின் முடிவில்
உன் இலக்கின் மையப் புள்ளியை குறிவைத்து அதுதான்
வான மேனும் மலையைக் குடைந்து சென்று
விண் முகட்டை அடையும் சுரங்கப் பாதை என நினைத்து
நடந்த விபத்துக்கள் உனக்கு நினைவில்லை
பேரிழப்பிற்குப் பின் காலால் நடந்து சென்றாய்
அனைத்தையும் இழந்துவிட்ட மனிதனைப்போல்
நாடு கடத்தப்பட்ட ஒருவன் மாலையில்
தன பழைய வீட்டின் வாயிலைததேடி தெருவில் வருதல் போல்
யாரேனும் ஒளிந்திருந்து பிடித்துவிடக்கூடும் என்பதைப்
பற்றிக் கூட அஞ்சாத அளவிற்கு ஒய்ந்து போய்
மனைவியையும் மக்களையும் ஒரு முறை காண்பதற்காக
அப்போதுகூட நான அங்கேதான் தடுப்புகளுக்குப் பின்னால் இருந்து
எல்லாச் ஜன்னல்கள் வழியேயும் செய்கை காட்டினேன்
பார்வை அற்றவன் போல் நீதான் திரும்பிக்கூட பார்கவில்லை
நான எங்கோ இறுதி நிலையில் இருப்பதாக எண்ணிக்கொண்டு
பாதை தவறியதற்குப்பின் என்னையும் உன் ஆன்மாவையும்
உன் ஜப மாலையின் அனைத்து மணிகளையும் ஒருமிக்க
இழந்துவிட்டதாகவும் எண்ணிக் கொண்டாய்
ஆனால் உலகத்தின் அரவம் இப்போது தான் உன் காதில் விழத் தொடங்கியிருக்கிறது
.நான அதனுள்ளும் இருக்கின்றேன்
தடுமாறித் திரிந்த பிறகு தான் நீ என்னுடன் வந்துகொண்டிருக்கிறாய்
Jean –Pierre Lemaire (1985)
நான எப்போதும் உன்னுடன் தான்இருக்கிறேன் நீ தான் கண்டுகொள்ளவில்லை அப்படி செய்திருந்தால் இந்த சூதாட்டத்தில் சகுனி வெற்றி பெற்றிருக்க முடியுமா என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரரை கேட்கும் மகாபாரத காட்சி நம் நினைவுக்கு வருகிறத