திரு வெங்கட்ராமன் ராஜகோபாலன் காரைக்காலில் 1937 இல் பிறந்தவர் .பிரெஞ்சை பயிற்று மொழியை கொண்டு பாரிஸ் பல்கலை கழகத்தில் Baccalaureat பட்டம் பெற்று பின் இந்திய பல்கலைகழகங்களில் MA MPhil பட்டங்கள் பெற்றவர்.ஆங்கிலமும் லத்தினும் இவர் பயின்ற துணை மொழிகள். மொழியாக்கம் செய்வதிலும் பிரெஞ்சு மொழி போதிப்பதிலும் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.1995 இல் இணைப்பேராசிரியராக ஒய்வு பெற்றார்.இவர் மொழியாக்கம் செய்த பிரெஞ்சு சிறுகதைகளும் இலக்கிய கட்டுரைகளும் மஞ்சரி இதழில் பிரசுரமாகி உள்ளன.ஐமபதுக்கும் மேலான கவிதைகள் புனைந்துள்ளார்.ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்..கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்ட இவர் புதுவையில் " பைரவி " எனும் சபாவை நிறுவி 15 ஆண்டுகள் பணி ஆற்றியுள்ளது இவரது பன்முக ஆற்றலின் வெளிப்ப்பாடு .தொடர்பு கொள்ள
raja124gopalan@gmail.com