நிகழ்ச்சி நிரல்

10:00 - பொங்கலோ, பொங்கல் மற்றும் கும்மி - (Cafeteria) - குழந்தைகள், பெரியவர்களுடன் பொங்கல் வைக்கும், கிராமியப் பொங்கல் நிகழ்ச்சி மற்றும் கும்மி நடனம்.

10:30 - 12:30 - திருக்குறள் கண்காட்சி - (Cafeteria) - தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திருக்குறள் கண்காட்சி

11:30 - 12:30 - பட்டிமன்றம் (Auditorium) - வாழ்க்கையின் மகிழ்ச்சி - நேற்றைய நினைவுகளா!! நாளைய கனவுகளா!!

12:30 - மதிய உணவு

1:30 - கலை நிகழ்ச்சிகள் - (Auditorium) - பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

பொங்கல் கிராமியத் திருவிழா

நியூசெர்சி ஒருங்கிணைந்த தமிழ்ப் பள்ளிகளின் பொங்கல் கிராமியத் திருவிழா, வரும் சனவரி மாதம் 19ம் தேதி, சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது. நியூசெர்சியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பறையிசை, மற்றும் பல மரபுக்கலைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் நிகழ்வான "பொங்கலோ பொங்கல்" நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

திருவள்ளுவர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திருக்குறள் கண்காட்சியும் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பள்ளிகளைச் சாராத பொதுமக்களும் கலந்துக் கொள்ளலாம். எனவே உங்கள் நண்பர்களையும் விழாவுக்கு அழைத்து வரலாம்.

அனுமதி இலவசம். அனைவரும் வருக....

மதிய உணவுக்கு, இந்த இணையத்தளத்தில் முன்பதிவு (Food RSVP) செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் தங்களுக்கான உணவுச் சீட்டினை விழா அரங்கில் காலை 10மணி தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம் (Please bring exact cash. Only Cash. No Credit/Debit cards).

விழா நாள் : சனவரி 19, சனிக்கிழமை

நேரம் : காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : Millstone Township Performing Arts Center,

5 Dawson Ct, Millstone, NJ 08535