வணக்கம்!
தமிழ் இலக்கியப் பரப்பில் மரபு மாறா வெண்பாக்களினாலும், சமூகச் சீர்தமிழ் இலக்கியப் பரப்பில், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளினாலும் புதிய கோணத்தை உருவாக்கும் "காந்தளின் காதலன் கார்த்திக்" அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
காதலும் கவிதையும் இணைந்த பெயர்க்காரணம்:
"காந்தளின் காதலன் கார்த்திக்" என்னும் இப்புனைப்பெயர் வெறும் புனைவல்ல; அது காதலின் ஆழமான தத்துவத்தையும் தெய்விகப் பிணைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு கவித்துவ அடையாளம்.
கவிஞரும் அவரின் காதலியும் ஒரே தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் என்னும் அரிய தெய்விகப் பொருத்தம் அமைந்தவர்கள். கார்த்திகை திங்களில் செழித்து மலரும் கார்த்திகைப் பூவாம் 'செங்காந்தள்' மலரையே தம் காதலியின் உருவகமாகக் கொண்டார் கவிஞர்.
" என்னவள் தன் பிடரியில் சூடிக்கொடுத்த பூவினை, தன் வாழ்நாள் பெயராகவே சூடிக்கொண்டேன் என்கிறார் கவிஞர்.
தம் காதலி அவருக்கு பிடித்த காந்தள் மலரைத் தன் கூந்தல் பிடரியில்சூடும் காதலியின் அன்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக, அந்தப் பூவையே தன் பெயராகவும் அடையாளமாகவும் தன் தலைமீது சூடிக் கொண்டவர் கவிஞர்.
காதலியின் காதலனாகவும், காந்தள் மலரின் காதலனாகவும் ஒன்றிணைந்து உருவாகியதே "காந்தளின் காதலன் கார்த்திக்" என்னும் இப்புனைப்பெயர். இந்தத் தூய்மையான யோகக் காதலின் உணர்வே இவரின் 'இல்லறச்சல்லடை' நூலின் வெண்பாக்களுக்கும் முதன்மை ஊற்றாகத் திகழ்கிறது.