GEG ஆசிய-பசிபிக் இணைப்பு என்பது ஆசியாவைத் தளமாகக் கொண்ட கூகள் கல்வியாளர் குழுக்களின் ஒரு குழு ஆகும். ஆசிய-பசிபிக் கல்வியாளர்களுக்குத் தொழில்முறை மேம்பாட்டு நிகழ்வுகளை இயங்கலையில் கொண்டு வருவதற்கு ஒத்துழைக்கின்றன. கூகள் கல்வியாளர்கள் குழுக்கள் (GEG கள்) உள்ளூர் கல்வியாளர்களை நேரில் மற்றும் இயங்கலை மூலம் பல தகவல்களை ஒன்றாகக் கற்றுக்கொள்ளவும், பகிரவும், ஊக்கப்படுத்தவும், ஒருவருக்கொருவர் அதிகாரம் அளிக்கவும் உதவுகின்றன. GEG கள் கல்வியாளர்களுக்கு ஒத்துழைக்க ஒரு தளத்தை வழங்குகின்றன. ஒவ்வொருவரும் புதிய ஆக்கபூர்வமான யோசனைகளைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. மேலும் வகுப்பறையிலும் அதற்கு அப்பாலும் தங்கள் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.