இலத்திரனியல் நூலக தன்னியமாக்கம்

Homepage 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய நூலக சேவையை வெற்றிகரமாக வழங்குவதற்கு, தேவையான திறன்கள் மற்றும் ஆலோசனைகள் ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும்.  இத்தகைய சேவைகளை  வழங்கும் குறிக்கோளுடன் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இ-நூலக மென்பொருள், கணினிகள், பிணையம் / இணையம், பட்டைக்கோடு-குறியிடப்பட்ட புத்தகங்கள், பயனர் அடையாள அட்டைகள், RFID அமைப்புகள் மற்றும் பட்டைகோடு ஸ்கானர், RFID கேட் மற்றும் சென்சர்கள் போன்ற தானியங்கு அமைப்புகளை நூலகங்கள் தற்போது அறிமுகப்படுத்தி தன்னியமாக்கப்பட்ட நூலக சேவையை வழங்கிவருகின்றது.

இங்கு நூலீட்டல், இணைய பிரதி பட்டியலாக்கம், நூற்சுழற்சி, நூற் தேடல் போன்ற அனைத்து நூலக செயல்பாடுகளும் தானியங்கப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு நூலகத்தின் செயல்பாடு சமகாலத்து இ-நூலக முறைமையை பயன்படுத்துவதன் மூலம் கணினிமயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் சமகால வாசகர்களின் விருப்பங்களை திருப்தி செய்ய வேண்டும். இது வாசகர்களாக இல்லாதவர்களை வாசகர்களாக மாற்றும் ஒரு செயற்பாடாகும்.

தற்காலத்தில் மக்கள் விரைவாக தொழில்நுட்பமாற்றங்களை உள்வாங்கும் மனோநிலையில் காணப்படுகின்றனர். அவர்களது விருப்பங்களும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுடன் சேவைகளை  பெற்றுக்கொள்வதே ஆகும்.

அந்த வகையில் பிறின்ட் செய்யப்பட்ட பெளதீக நூல்களை மட்டும்மன்றி பகுப்பாய்வு மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்லையின் நூல்கள், இணையவளங்கள், காணொலிகள் போன்றவற்றைத் தேடல் மற்றும் பார்த்தல்,  இவற்றுடன் ஒன்லையின் புத்தக இறாக்கைகள், புத்தக அட்டைகள் மற்றும் நூல் உள்ளடக்கங்கள்,  போன்றன வசதிகளைப் பெறுவதும் நூலக தொழில்நுட்பங்கள் மூலம் மாற்றம் பெற்றுள்ளன. இவற்றிற்க்கெல்லாம் வழிசமைத்து கொடுப்பது இ-நூலகமாகும்.

இலங்கையிலோ உலகிலோ தமிழ் சேகரிப்புக்களை  கொண்ட  ஒரு சில நூலகங்கள் மட்டுமே மேற்சொன்ன  வசதிகளுடன் நூலக சேவைகளை வழங்குகின்றன. ஏனைய நூலகங்கள் இவ்வசதிகளைப் பெற்றுக்கொள்ள கூடிய சூழல்கள் காணப்பட்டாலும் அவற்றை உள்வாங்காமல் பழைய முறைமைகளை கொண்டு நூலக சேவைகளை வழங்கி கொண்டிருக்கின்றது. இங்கு வாசகர்களுக்கும் நூலகத்திற்கும் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

ஒரு நூலகம் சமகால தொழில்நுட்பங்களை உள்வாங்கி நூலகங்களை தன்னியமாக்கும் போது அதன் நூலக சமூகம் நூலகங்களை நோக்கி ஈர்த்துக்கொள்வதால் சமூகம் பொருத்தமான அறிவு மட்டங்களை  எட்டுவதற்கு வழிகோலும்.

இவ் இணையப்பக்கம் இ-நூலக தன்னியமாக்கம் பற்றிய ஆரம்ப அறிவுகளை வழங்குவதற்கும் ஊக்கமளிப்பதற்கும்  உருவாக்கப்பட்டுள்ளது. 

முறையான ஒரு இ-நூலகத்தின் அமைப்பு