Prof Dr. A.S.SYED NAVAZ Ph.D.
பேராசிரியர் முனைவர் அ. சி. சையத் நவாஸ் Ph.D.
Prof Dr. A.S.SYED NAVAZ Ph.D.
பேராசிரியர் முனைவர் அ. சி. சையத் நவாஸ் Ph.D.
Fintech Advisor | Academic Strategist | Educator | Author
FinTech ஆலோசகர் | கல்வித் திட்டமிடல் நிபுணர் | கல்வியாளர் | எழுத்தாளர்
About Me
Prof. Dr. A. S. Syed Navaz is an educator, Academic Strategist, and FinTech Advisor with over 17 years of experience spanning higher education, technology, research, and entrepreneurship.
His journey has been shaped by a simple belief: growth begins with believing in yourself and taking responsibility for becoming the person you aspire to be. He believes confidence is built through learning, experience, action and the courage to create one’s own path.
With a background in Computer Science, his professional interests extend across FinTech, Blockchain, Networking, Data Mining, Image Processing, emerging technologies, academic development and innovation. He has contributed to international research through 30+ peer-reviewed publications, academic initiatives, books, professional engagements and research-development activities.
As an academic strategist and educator, he has contributed to a wide range of academic and professional initiatives. His professional journey includes academic leadership, research and editorial responsibilities, technology initiatives, training, mentoring and entrepreneurship. He is also associated with 40+ national and international professional and academic memberships and actively participates in FDPs, seminars, workshops and training programmes as part of his commitment to continuous learning.
His work extends beyond academics. Through FinTech, entrepreneurship, publishing and professional development initiatives, he seeks to connect knowledge with opportunity and ideas with meaningful impact.
Recognition has been a part of this journey, including academic and professional awards, research contributions, technology innovation and a patent. Yet, he believes that achievement becomes truly meaningful when it creates value for others.
Social responsibility is equally important to him. His commitment includes 45+ blood donations and voluntary organ-donor registration, reflecting his belief that success is not only about what we achieve for ourselves, but also about what we can contribute to society.
He is also an author and poet, expressing through his writing the experiences, emotions and reflections that make life meaningful. His books include “Computer Hardware and Networking,” “A to Z Computer Dictionary,” “மிச்சமிருக்கும் நிமிடம்” and “அப்பா — நம்பிக்கையின் வழிகாட்டி.”
Succeed, adapt, grow—what’s next?
No experience is an ending; it is always a beginning. My journey is not about reaching a final destination, but about constantly learning, creating, and inspiring.
Every achievement is just the launchpad for what's next.
என்னைப் பற்றி
பேராசிரியர் முனைவர் அ. சி. சையத் நவாஸ் அவர்கள், கல்வியாளர், ஆய்வாளர், FinTech ஆலோசகர், கல்வித் திட்டமிடல் நிபுணர், தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகிய துறைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
அவரது பயணத்தை வழிநடத்தும் எளிய நம்பிக்கை:
“சுயநம்பிக்கையும், நம்மைச் சிறந்த மனிதராக உயர்த்திக் கொள்வதற்கான சுயப்பொறுப்புமே உண்மையான வளர்ச்சியின் தொடக்கம். ”
கற்றல், அனுபவம், செயல்பாடு மற்றும் நமக்கான பாதையை நாமே உருவாக்கும் துணிவு — இவையே தன்னம்பிக்கையை வளர்க்கின்றன என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.
கணினி அறிவியல் பின்னணியுடன், FinTech, Blockchain, Networking, Data Mining, Image Processing, புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி சார்ந்த புதுமைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். 30-க்கும் மேற்பட்ட சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் கல்வி சார்ந்த நூல்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் சர்வதேச அளவில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
கல்வித் திட்டமிடல் மற்றும் கல்வி வளர்ச்சித் துறையில் பல்வேறு கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் பங்காற்றியுள்ளார். இவரது தொழில்முறைப் பயணம் கல்வித் தலைமைத்துவம், ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பொறுப்புகள், தொழில்நுட்ப முயற்சிகள், பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் தொழில்முனைவு எனப் பல்வேறு தளங்களில் விரிவடைந்துள்ளது.
மேலும், 40-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் உறுப்பினராக இருந்து, FDPs, கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் மூலம் தொடர்ந்து கற்றுக்கொண்டும், கற்றதைப் பகிர்ந்துகொண்டும் வருகிறார்.
அவரது பயணம் கல்வியுடன் மட்டும் முடிவதில்லை; FinTech, தொழில்முனைவு மற்றும் பதிப்புத்துறை மூலமாக அறிவை வாய்ப்பாகவும், சிந்தனைகளை பயனுள்ள மாற்றங்களாகவும் மாற்றுவதே அவரது நோக்கம்.
இவரது பயணத்தில் விருதுகளும், ஆராய்ச்சிப் பங்களிப்புகளும், தொழில்நுட்ப காப்புரிமையும் (Patent) அங்கீகாரங்களாக இருந்தாலும், "சாதனையின் உண்மையான மதிப்பு மற்றவர்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் நேர்மறை மாற்றத்தில்தான் உள்ளது" என நம்புகிறார்.
சமூகப் பொறுப்பின் அடையாளமாக 45-க்கும் மேற்பட்ட முறை இரத்த தானமும், தன்னார்வ உறுப்பு தானப் பதிவும் செய்துள்ளார். வெற்றி என்பது நமக்காக அடைவது மட்டுமல்ல, சமூகத்திற்கு நாம் திரும்பத் தருவதிலும்தான் உள்ளது என்பதற்குப் பிரத்யட்ச சான்றாகத் திகழ்கிறார்.
எழுத்தாளரும் கவிஞராகவும் வாழ்க்கையின் அனுபவங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்து வருகிறார். "மிச்சமிருக்கும் நிமிடம்" மற்றும் "அப்பா — நம்பிக்கையின் வழிகாட்டி" ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களாகும்.
வெற்றி, மாற்றம், வளர்ச்சி — அடுத்தது என்ன?
எந்த அனுபவமும் முடிவல்ல; அது எப்போதும் ஒரு புதிய தொடக்கமே. என் பயணம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவது மட்டுமல்ல—தொடர்ந்து கற்றுக்கொள்ள, படைக்க, பங்களிக்க மற்றும் பிறரை ஊக்கப்படுத்தவே.
ஒவ்வொரு சாதனையும் முடிவுக்கோடு அல்ல.
அது அடுத்த கட்டத்திற்கான தொடக்கப்புள்ளி!