Search this site
Embedded Files
Skip to main content
Skip to navigation
ஆடுகளில் பேன், உண்ணி நீக்க
ஆடுகளில் பேன், உண்ணி நீங்க
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து இடித்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் 4 ஓமவள்ளி இலை, ஒரு கைப்பிடி தும்பை இலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஆடுகளின் மேல் பு+சி, நன்கு காயவிட வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அவற்றை கழுவி விட வேண்டும்.
இதனை மழை மற்றும் ஈரப்பதமான சு+ழ்நிலைகளில் தவிர்த்தல் நல்லது. இந்த அளவு ஒரு ஆட்டுக்கானது.
முற்றிலும் பேன்முட்டைகள் அழிய 3 வாரங்கள் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.கவனம் தேவை !!
கோடைக்காலத்தில் மழை பெய்யும் போது, கால்நடைகளின் கொட்டகைகளில் ஒட்டுண்ணிகளின் பெருக்கம் அதிகமாக காணப்படும்.
அவைகள் கால்நடைகளின் ரத்தத்தை குடித்து இரத்த சோகையை உண்டாக்கலாம். மேலும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எனவே கால்நடை கொட்டகைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
புதிதாக கால்நடைகளை வாங்கி வந்தால் அவற்றில் ஒட்டுண்ணி நீக்கம் செய்த பின்னரே கொட்டகைக்குள் அனுமதிக்க வேண்டும்.
Google Sites
Report abuse
Google Sites
Report abuse