தமிழ்க் கோவில்

 

                  

  பெரும்புலவர் பொய்சொல்லா                                                                                    .சுப.மாணிக்கனார்
 

மாணிக்கச் சிந்தனைகள் 
  எளிய வாழ்வு,
அளவான பேச்சு, 
எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை,
பதவிகளைத் தொண்டாக மதித்தல்,
தன்னைப்பற்றிய திருத்தமான சிந்தனைகள்,
வாழ்க்கைத் திட்டங்கள்,
பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல்,
சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள்,
பகட்டின்றித் தூய எண்ணத்தால் 
இறைவனை வழிபடுதல் 

 

பேராசிரியர் "சுபவீ" அவர்கள் மாணிக்கனார் பற்றி கலைஞர் தொலைக்காட்சியில்.... 

மூதறிஞர்,செம்மல் வ.சுப.மாணிக்கனார்(17.4.1917--25.4.1989) அவர்கள் தோன்றி நூறு ஆண்டுகள் ஆகப்போகின்றது....அவர்கள் வாழ்வும்,பணியும்....எழுத்தும்,சிந்தனையும் கடைசி மூச்சு வரை தமிழாகவே இருந்தது...

.மூதறிஞர்  அவர்கள் அவருடைய ஆசிரியர் "பண்டிதமணி மு.கதிரேசனார்" அவர்களின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக ,அரசு விழாவாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடச் செய்து மகிழ்ந்தார்...மேலைசிவபுரி சன்மார்க்க சபையில் "பண்டிதமணியின்" நூல்களை மறு பதிப்புச் செய்து சிறப்புச் செய்தார்.பண்டிதமணியின் பிறந்த ஊரான மகிபாலன்பட்டியில் பண்டிதமணிக்கு முழு உருவச்சிலை நிறுவி மகிழ்ந்தார்....

செம்மல் வ.சுப.மாணிக்கனார்அவர்களின் நூற்றாண்டு விழாவை அவரது நினைவைப் போற்றும் வகையிலும்,தமிழ் எழுச்சி விழாவாகவும் மிகச் சிறப்பாக ஓராண்டு முழுமையும்(ஏப்ரல்,2016 முதல் ஏப்ரல்,2017வரை )தமிழகத்திலும்,உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட விழைகின்றோம்.இந்த "மாணிக்கனார் தமிழ் விழா"வில் அவருடைய மாணவர்கள்,அவருடன் பணியாற்றிய பெருந்தகைகள்,தமிழ்ப் பேரன்பர்கள் அனைவரும் இணைந்து நம் தமிழ்ப் பேராசானுக்கு நம் நினைவஞ்சலியை காணிக்கையாக்குவது நம் கடமையாகும்.

இணையத்தின் மூலமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நூற்றாண்டு விழாப் பணி தொடங்கவேண்டும்....விழா பற்றிய செய்திகள் அவ்வப்போது வரும்.....

                                                                      
 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
oregon website design

 Dr.Va.Supa.Manickanar, a great Tamil scholar and a deep researcher was born in 17.4.1917 at MELASIVAPURI,Pudukottai District,Tamil Nadu,India.He was the Principal @ Alagappa College,Karaikudi,Professor of Tamil and Dean of Indian Languages @ Annamalai University and Vice-Chancellor of Madurai Kamaraj University.He was the President of Karaikudi Tamil Sangam and Thamizhaga Pulavar Kuzhu.Tamil Nadu Govt. utilised his wiser counsel in the formation of Thanjai Tamil Palkalaikazhagam.Dr.Manickanar spearheaded various Tamil movements.....very important among them are.....EAZHILAM TAMIL and Tamil VazhikKalvi Iyakkam.He was the inspirational force for many through KALAIKAZHAGAM,when he was @ Alagappa College to acquire leadership qualities and Thaithamizh.
He was awarded posthumusly the Thiruvalluavar Virudhu by Tamil Nadu Govt., and his books were nationalised by Tamil Nadu Govt in 2006.His collection of about 4500 books were donated to the library of Alagappa University,as per his last will.Alagappa University has acknowledged this gesture...
"Special mention has to be made of Dr. V.Sp. Manickam collection of 4500 vols.donated to the library as decreed in his will and handed over to the library by his wife". At the time of Dr.Manickanar's demise,Dr.Kalaignar renamed the "College Road" @ Karaikudi as Dr.MANICKANAR SALAI......though it is not properly displayed by the local administration.As per his last will, a TRUST in the name ...Dr.Va.Supa.Manickanar Arakkattalai.... is established for the betterment of health,education  of people of Melasivapuri village irrespective of caste,colour,creed and animals and other non-living things.

காரைக்குடி,சுப்பிரமணியபுரம் 6-வது வீதியில் வ.சுப.மாணிக்கனாரின் இல்லம்....."கதிரகம்"(தன்னுடைய ஆசிரியர்,பண்டிதமணி கதிரேசன் செட்டியார் நினைவாக தன்  வீட்டுக்கு "கதிரகம்" என்று பெயரிட்டார்.)
 
"புலவர் பெருமகனாரும் நல்ல தமிழறிஞரும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்து முன்னாள் துணைவேந்தருமான டாக்டர். வ.சுப. மாணிக்கம் அவர்கள் இந்த நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரை, இலக்கியப் பணியில் என்னை மேலும் மேலும் தொடர்ந்து ஈ.டுபடத் தூண்டுகின்ற உளமார்ந்த வாழ்த்தாகவே அமைந்துள்ளது. அவரது பண்பும், பாசமும், அன்பும் நிறைந்த இதயத்துக்கு என்றைக்கும் நன்றியுடையவனாக இருப்பேன் நான்! ".........கலைஞர் மு கருணாநிதி (முன்னாள் முதலமைச்சர்)--"குறளோவியம் " அறிமுக உரையில்..
 
 நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது(21.3.2007) திருமதி .வ.சுப.ம.ஏகம்மை ஆச்சி  மாண்புமிகு முதல்வருடன்.....
 வ.சுப.மா.ஏகம்மை ஆச்சி,மா.தொல்காப்பியன்,பொற்றொடி செந்தில் வேலாயுதம் .....மாண்புமிகு முதல்வருடன்....

                                          தமிழறிஞர்களின் படைப்புக்களை நாட்டுடைமையாக்கித் தமிழ்க் கொடை வழங்கும்
                                                        முத்தமிழறிஞர் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு

                                                                                                   நன்றிக் கவிதை
                                                          1.செந்தமிழின் தலைமகனே   !            செம்மொழியின் பிறப்பிடமே !
                                                             முத்தமிழின் முழு உருவே  !            மூவேந்தர் பரம்பரையே !
                                                             கற்றவரின் தமிழினிலே !                  காலமெலாம் கலந்து தமிழ்ப் !
                                                             பற்றதனைப் பற்றிய நீ !                     பல்லாண்டு வாழியவே !


                                                           2.காவியங்கள் பல படைத்தாய் !      காப்பியதிற்குரை படைத்தாய் !
                                                             ஓவியமும் வள்ளுவனுக்கு !           உறைவிடமும் நீ கொடுத்தாய் !

                                                             பாடு தமிழ் அவை நடுவே !               பாட்டுடைத் தலைவனென !
                                                             நீடு புகழ் நீ பெற்றாய் !                        நீடூழி வாழியவே !

                                                           3. மூவேந்தர் காலத்தும் !                   முன்னுரிமை தமிழ்க்குண்டாம் !

                                                              பாவேந்தி வந்தவர்கள் !                   பாடலுக்குப் பரிசுண்டாம் !
                                                              சாவேந்தி மறைந்த தமிழ்ப்           புலவர்களின் உறவுகளை !
                                                              யாரேந்திப் பரிசளித்தார் !                நின் பெருமை  வாழியவே !


                                                                             செம்மல்.வ.சுப.மாணிக்கனார் குடும்பத்தினர்        

  Terms   Report Abuse   Print  |  Powered by Google S


 


 

 

 

  
Comments