முதுமொழிக் காஞ்சிமூத்தோர் வாக்கு அல்லது மூத்தோர் உரை என்பதை குறிப்பது முதுமொழி.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலன். பல மணிகளால் கோர்க்கப்பட்ட அணி போல மூத்தோர் உரைகளை கோர்த்து தருவதே முதுமொழிக் காஞ்சி என்னும் நூல்.

இதன் ஆசிரியர் மதுரை கூடலூர் கிழார்.

இது பதினெண்கணக்கு நூல்களில் ஒன்று. தொல்காப்பியரும் புறநானூற்று பாடல்களும் இந்நூலை குறிப்பிட்டு பல இடங்களில் தெரிவிப்பதால் மிகவும் தொன்மையான நூல் என்பது புரிகிறது.

பத்து தலைப்புகளில் பத்து பத்தாக நூறு செய்யுள் அடங்கிய அறிவுரை கோவை இது.  இந்நூலின் பா அமைப்பு குறள் வெண்செந்துறை. ஒவ்வொரு செய்யுளும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’   என்றே துவங்கும். ஆனால் எளிமை கருதி மையக்கருத்து மட்டும் எடுத்து காட்டப்பட்டிருக்கிறது.

பத்து தலைப்புகள் 1) சிறந்த பத்து    2)  அறிவுப் பத்து    3) பழியாப் பத்து   4)  துவ்வாப் பத்து   5) அல்ல பத்து   6)  இல்லைப் பத்து   7)  பொய்ப் பத்து   8) எளிய பத்து  9) நல்கூர்ந்த பத்து  10) தண்டாப் பத்து
                                             If you wish to benefit your visitors with Tamil wisdom you may incorporate the Javascript in your blog. please write to the author
 


அருஞ்சொற்பொருள்

( இங்கு கொடுக்கப்படும் சொற்களின் பொரு்ட்கள்  இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கண்ணோட்டத்தை அனுசரித்து தரப்பட்டிருக்கிறது )

அகம் வறியோன் = நல்லெண்ணம் இல்லாதவன்
இசை                   =புகழ்
உண்டி                 = உணவு
உட்கு                   = அச்சம்  ; ( உட்கு இல்வழி = மதிப்பு இல்லாத இடத்து)
ஏமம்                   = பாதுகாத்தல் 
கரத்தல்              =ஒளித்து வைத்தல்
குறளை              =புறங்கூறல்
கையுறல்          = காரிய சித்தி
சாக்காடு            = மரணம்
சிறந்தன்று       = சிறப்பானது
சூழ்ச்சி                 = தொழிலுக்கு ஏற்ற வழிமுறைகள்
செற்று                  = உட்பகை
மறை                  = மறைந்திருத்தல், இரகசியம்
தண்டான்         = தவறமாட்டான்; தவிர்க்க மாட்டான்
நசை                    = ஆசை
நல்கூர்தல்       =வறுமை அடைதல், பயனற்று போதல்.
நண்ணல்          = சென்று அடைதல்
நிற்றல்               = முத்தி நிலையில் நிற்பது
முறை செயல் =நீதிமுறை
வாலியன்          = மனசுத்தம் உடையவன்
வீங்கல்              = செல்வம் பெருகுதல்
வெய்யோர்      =விரும்புவர்
பல்புகழ்             = புகழ் தரும் செய்கைகள்
Comments