உலக நீதி

உலக நாதர் எழுதிய உலக நீதி


ஆசிரியர் : உலக நாதர்.
   மொத்தம் 13 விருத்தங்கள். ;  வகை :  ஆசிரியப்பா.

ஆசிரியர் காலம் வரலாறு தெரியவில்லை.

 முழு நூலையும் படிக்க:  மதுரை தமிழ் வளர்ப்புத்  
   திட்டம் / சென்னை லைப்ரரி டாட் காம்

தங்கள் வலைப்பக்கத்திலோ  i-google  பக்கத்திலோ இந்த Google Gadget-ஐ  பொருத்த முடியும் என்ற நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட இந்த விட்ஜெட்க்கள் இப்போது Google Moules சேவை விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டதால் செயலிழந்து விட்டன.  ஆனால் இப்போது Blogger-ல் gadget வசதி உள்ளதாலும்  Javascript  ஐ வேண்டிய இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும் என்பதாலும்  இன்னும் இவற்றின் பயனை நாம் நுகர முடியும்.  இதை தம்முடைய வலைப்பக்கத்தில் பொருத்தி வாசகர்களுக்கு தமிழ் ஆர்வத்தை வளர்க்க விரும்பும் அன்பர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும்.

இநத மென்பொருள்  மூலம் உலகநாதர் வலியுறுத்தும் நீதிக் கருத்துகள் இரண்டிரண்டாக ஒவ்வொரு முறையும்  எடுத்துக் காண்பிக்கப்படும். இப்படி அடிக்கடி கவி நயத்தோடு கூடிய வரிகளை படிக்கும் போது கருத்துகள் நம்மையறியாமலே நம் மனதில் வேரூன்ற தொடங்கி  படிப்பவர்களை நல்வழிபடுத்தும் திறன் படைத்தவனாகின்றன.

இந்த இணைப்பில் உள்ள பாடல்களில் காணப்படும் அருஞ்சொற்பொருட்கள் அருகில் தொகுக்கப்பட்டுள்ளன. 
ஒரு மாதிரி gadget ஐ காண கீழே உள்ள இணப்பை சொடுக்கவும்

                                    சித்திரமும் கைப்பழக்கம் 

 அருஞ்சொற்பொருள்

பொல்லாங்கு  = தீமை பயக்கும் சொற்கள் 

போகவிட்டு = தம்முன்னின்று ஒருவர் சென்ற பின்னே 

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம் = நிலையற்ற (பயனற்ற) காரியங்களை நிலை நாட்ட வேண்டாம்/ செய்ய வேண்டாம். 

மாற்றான் /மாற்றார்= பகைவர், எதிரிகள் 

சேறல் = செல்லுதல் கொற்றவன் = அரசன் 

வாழாமல் பெண்ணை வைத்து திரிய வேண்டாம்= மனையாளை துன்பத்தில் இருத்தி திரிய வேண்டாம் 

வெஞ்சமர்= வெம்மை + சமர் =கடும் போர். 

வாத்தியார் = கல்வி கற்பித்த ஆசிரியர் 

கணக் கழிவை = பொய் கணக்கு 

நத்தல் = விரும்புதல் 

மறம் பேசி திரிதல்= (வெட்டி) வீரம் பேசி திரிதல்

 ஏசல் இட்ட =இகழ்ச்சி செய்த 

வழக்கழிவு = அழிவு வழக்கு = கெடு வழக்கு

பொருவார் = போர் செய்வார் 

எளியார் = ஏழைகள் 

பொது இடத்தில் = பலரும் வந்து போகும் இடம் 

குண்டுணி = கோள் சொல்பவன்

 பிணைப்பட்டு = பிணையாகி 

மண்ணின்று மண்ணோரம் சொல்லுதல் = நிலத்தில் நின்று (உண்மைக்கு புறம்பாக) நிலத்தைப் பற்றி ஒரு தலைபட்சமாய் சொல்லுதல் 

கண்ணழிவு = அருள் இன்றி

 துயர்காட்டுதல் = துன்பம் செய்தல் 

குருகு =பறவைகள் 

சிலுக்கிட்டு =சண்டையிட்டு 

கட்டுரைத்தல் = கற்பனை உரைகள் 
Comments