ஆண்டாள்புரம் சுவாமிகள் போற்றி


அருட்சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் போற்றி 

    (ஆக்கம்: ராஜ.நீதிதாசன்,திருவாரூர்./பேசி:9965238210) 

       திரு.நீதிதாசன் அவர்கள் ஆண்டாள்புர சுவாமிகளின் பூர்வாசிரம பேரன் ஆவார்.(சுவாமிகளின் தமக்கையின் பேரன்). திரு. நீதிதாசன் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார்கள். பல சீர்திருத்த,ஆன்மீக,அறிவுசார்ந்த கதைகள்,கவிதைகள்நூல்கள் போன்ற படைப்புக்களை வழங்கி நடமாடும் கோயில்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.திருவாரூரில் வசித்துவரும் இவர் மனிதனேய  மக்கள் பேரவை ஒன்றை நடத்தி வருகிறார்.

               அண்ணன் சுவாமிகள் மற்றும் ஆண்டாள்புரம் சுவாமிகளின் சீடரான திரு மணி (அடியார்க்கு நல்லான்) அவர்கள் மூலம் தனது பூர்வாசிரம தாத்தாவை இவர் பல தருணங்களில் சந்தித்துள்ளார்.சுவாமிகளின் அற்புதங்கள்,ஞானத்தின் பெருமை இவற்றை சுவாமிகளின் சீடர்கள்,பக்தர்கள் மூலமாகவும்,தாமாகவும் உணர்ந்து சுவாமிகளை தம் இதயத்தில் இருத்தி பல கர்மயோகங்களை மக்களுக்கு இன்றும் ஆற்றிவருகின்றார்.இவ்விதமாக கண்டும் கேட்டும் சுவாமிகளை போற்றி வாழும் இவர்..ஆண்டாள்புரம் சுவாமிகளை துதித்து வழிபட போற்றி” என்ற ஒரு தொகுப்பை எழுதி அச்சிலேற்றி பலருக்கு வழங்கி வருகின்றார்.பக்தர்கள்,உறவினர்கள் இத்தொண்டில் இவருக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்கள்.

             அந்த போற்றிகளை நாம் இங்கு தந்துள்ளோம். அன்பர்கள்  இவற்றை மன உருக்கத்துடன் படித்து ஆண்டாள்புரம் சுவாமிகளை  வழிபட்டு எல்லா இன்பமும் பெறுவீர்களாக... 
















அறிவுச் சுடரே அருளே போற்றி!

ஆண்டாள்புரத்தின் அறமே போற்றி!

இருளை நீக்கும் இறையே போற்றி!

ஈழம் பயின்ற எழிலே போற்றி!

உயிர்மொழி பேசும் உணர்வே போற்றி!

ஊனம் மாற்றும் ஊழியான் போற்றி!

எமபயம் அகற்றும் ஏகவா போற்றி!

ஏற்பது இகழ்ந்த ஏந்தலே போற்றி!

ஐயம் தீர்க்கும் அருட்சித்தா போற்றி!

ஒளிரும் திசையில் மிளிர்வாய் போற்றி!

ஓதும் வேதம் ராம்ராம் போற்றி!

ஔவியம் அகற்றும் குருவே போற்றி!

மதங்களைக் கடந்த மதியொளி போற்றி

இதயத் துயரை எரித்தாய் போற்றி!

உதயக் கதிராய் உயிர்த்தாய் போற்றி!

காற்றாய் விரையும் காலடி போற்றி!

ஆற்றல் தவமே அமுதே போற்றி!

திருமண் தத்துவ தீர்த்தா போற்றி!

இருகண் வியக்கும் ஈர்ப்பே போற்றி!

வருமுன் காக்கும் வரமே போற்றி!

குருவின் திருநிழல் திரமே போற்றி!

குப்பு சுவாமி குலமே போற்றி!

ஒப்பிலா துறவு உயர்வே போற்றி!

மணக்குடி பிறந்த மகானே போற்றி!

குணம்மூன்றும் கடந்த கொற்றவா போற்றி!

ராஜ கோபால சுவாமியே போற்றி!

ராம ஜெயமெனும் எண்ணமே போற்றி!

சிந்தா மணிவாழ் சித்தரே போற்றி!

விந்தைகள் புரிந்த வித்தகா போற்றி!

அட்டமா சித்தி ஆற்றலே போற்றி!

தொட்டுமண் தந்த தூயவா போற்றி!

பொன்னம் மாளின் புதல்வா போற்றி!

நம்பிணி போக்கும் மருந்தே போற்றி!

ஆரிருள் களையும் விழியே போற்றி!

ஈரமாய் இதயம் இயக்குவாய் போற்றி!

வாழக்கரை அருள் வானவா போற்றி!

ஏழைக் குரலொலி இரங்குவாய் போற்றி!

கதையால் துயரை துடைத்தோய் போற்றி!

மணமது வீசும் மாயவா போற்றி!

சுந்தரத் தேவ எந்தையே போற்றி!

சந்தன மேனி செவ்விதழ் போற்றி!

இலங்கை தவமுனி ராஜரே போற்றி!

துலங்கும் தவநெறி தூயோனே போற்றி!

ஐம்புலன் அடக்கிய அறமே போற்றி!

மெய்வழி காட்டிய மதியே போற்றி!

துறவற தூய்மை பரமனே போற்றி!

திறன்ஒளிர் தீர்க்க தரிசியே போற்றி!

வரமது அருளும் வாய்மொழி போற்றி!

கரம் புரம் காட்டும் கைகளே போற்றி!

கடமை முதலென கருதியோய் போற்றி!

வேம்பில் உலரும் வெண்துகில் போற்றி!

பாம்புடன் துயிலும் பரிதியே போற்றி!

யாக்கை காக்கும் யாகவா போற்றி!

நித்திய அறநெறி கரமே போற்றி!

சத்திய வாக்கின் அறமே போற்றி!

போடா தத்துவ போதகா போற்றி!

தேடத் தோன்றும் திசையே போற்றி!

அனுமன் நாமம் அருள்வாய் போற்றி!

மனுமுறை காக்கும் மன்னா போற்றி!

அகவிழி திறக்கும் அரியோன் போற்றி!

யுகமது கடந்தும் திகழ்வாய் போற்றி!

தண்டலை வனத்துத் தவமே போற்றி!

நீதி உரைத்த நிமலா போற்றி!

ஆதி வேத அருட்சுடர் போற்றி!

பாதமண் நல்கும் பார்க்கவா போற்றி!

பாதகம் போக்கும் பார்த்தா போற்றி!

வேதம் அறிந்த நாதனே போற்றி!

வாதத் திறன்மிகு வல்லவா போற்றி!

ஐயம் அகற்றும் அரசே போற்றி!

ஆன்ம வெளிச்ச அகவெளி போற்றி!

மேன்மைச் சித்து மெய்யே போற்றி!

கண்ணீர் அகற்றும் கருணா போற்றி!

கண்ணியத் துறவறக் கதிரே போற்றி!

புன்னகை பூக்கும் பொன்னிதழ் போற்றி!

ஊன்றுகோல் உரைக்கும் உன்னதம் போற்றி!

தோன்றலின் தத்துவ தூயனே போற்றி!

அலைகடல் அமர்ந்த அரிசிவா போற்றி!

நிலைபெறா உலகில் நிறைவே போற்றி!

இருளை போக்கும் இன்முகா போற்றி!

பொய்வேட பூசை துறந்தனை போற்றி!

மெய்வாழ்வு காட்டி மிளிர்ந்தவா போற்றி!

அரியின் மார்பின் ஒளியே போற்றி!

கரிமா சித்து கண்ணியா போற்றி!

ராம நாம வேதமே போற்றி!

இம்மை மறுமை இயக்கமே போற்றி!

எம்மை துலக்கும் ஏந்தலே போற்றி!

துளிர்க்கும் துயரை துடைப்பாய் போற்றி!

வெளிப்படும் வேதனை வெல்வாய் போற்றி!

தீப ஒளிச்சுடர் திருமுகம் போற்றி!

பாவம் அகற்றும் பரந்தாமா போற்றி!

அகிலம் காக்கும் காற்றே போற்றி!

முகிலாய் பரவிய ஊற்றே போற்றி!

முக்காலம் உணர்ந்த முனிவரே போற்றி!

காற்றில் உலவும் கவின்முகா போற்றி!

ஆற்றல் ஊற்றகம் அருள்நிதி போற்றி!

சூழ்ச்சி அறுக்கும் சுயமே போற்றி!

வீழ்ச்சி காணா வித்தே போற்றி!

நீர்நிலை வளர்த்த நிமலா போற்றி!

பாற்கடல் துயிலும் பரமனே போற்றி!

மும்மலம் கடந்த முனியே போற்றி!

எம்மனம் உறையும் நினைவே போற்றி!

திரிலோகம் சஞ்சரிக்கும் திருமால் போற்றி!

குருமார்க்க ஞானியாம் குருவே போற்றி!

அண்ணன் சுவாமி அககுரு போற்றி!

அருணோதயமே அரிமா போற்றி!

மருள்நிலை நீக்கும் மாதவா போற்றி!

அருள்நிலை அருளும் குருவே போற்றி!

ஓம் ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகள் திருவடிகள்

போற்றி!  போற்றி!!  போற்றி!!!



















https://sites.google.com/site/sriannanswamigaltamil/padhigam/antalpuram-cuvamikal-porri/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%20for%20upload.pdf?attredirects=0&d=1