இதர நிகழ்வுகள்ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஆசிரமத்திற்கு விளமல் ஆலயத்தின் சார்பாக ஒரு சேவை -2017      கடலூர் மாவட்டம்,மேட்டுக்குப்பத்தில் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்தி வரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு தேவையான எழுது பொருட்கள், துணிகள்,நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டன.

  இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தி நடத்திவரும் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு கர்மயோகி ஆவார்கள். வள்ளலாரின் வழியில் வாழ்ந்துவரும் இவர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு ஓர் முன் உதாரணமாக இருந்து வருகிறார்கள்.இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது இடுப்புக்கு கீழே உடல் செயலிழந்து போய்விட்ட போதிலும் நாங்கள் அவரை சந்தித்த தருணத்தில் அளப்பறிய செயல்களை செய்வதற்கு கூட உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்று உற்சாகமாக கூறினார்கள்.

     இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட கடந்த 14.05.2017 ஞாயிறு அன்று விளமல் ஆலயத்திலிருந்து 07 அன்பர்கள் மற்றும் சென்னையிலிருந்து திரு.சௌந்தர் உள்ளிட்ட மொத்தம் 10 அன்பர்கள் அங்கு சென்றிருந்தோம். எழுது பொருட்கள், துணிகள்,நோட்டுகள் இவற்றை கண்ட அந்த சிறார்கள் உற்சாகமாக ஓடிவந்து வேனிலிருந்து இவை அனைத்தும் எங்களுக்குத்தானா என்று கூறிக்கொண்டே அப்பொருட்களை அவர்களோடு அணைத்துக் கொண்டதை கண்ட நாங்களும் அவர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரு அருட்பிரகாச வள்ளலார் போதித்து வாழ்ந்து காட்டிய ஜீவகாருண்யத்தால் இறைவழிபாடு என்ற பேருண்மை எங்களுக்கு அப்போது விளங்கியது. எங்களை அன்புடன் வரவேற்று அந்த அறக்கட்டளையின் சேவகர்கள் மதிய உணவு அளித்தார்கள் .

      ஆன்மனேய ஒருமைப்பாடு வருவதுதான் இறை தரிசனத்தின் முக்கிய அம்சம் என்ற ஒரு உண்மையை அந்த அறக்கட்டளை அன்பர்களை கண்ட நாங்கள் புரிந்து கொண்டோம்.ஒருபுறம் வயோதிகத்தில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள் மறுபுறம் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் என இக்கலியுகத்தின் கொடுமையை தனது முயற்சியாலும் தியாகத்தாலும் தணித்து அவர்களுக்கெல்லாம் அன்பு மிக்க ஓர் புகலிடத்தை வழங்கிக்கொண்டிருக்கும் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களை வணங்கி ஆசி பெற்று,அருள் உருக்கத்துடன் அங்கிருந்து விடைபெற்றோம்.

    அண்ணன் சுவாமிகள் என்ற ஓர் சித்த புருஷர் அன்றும் இன்றும் நடத்துகின்ற அற்புதங்கள் எல்லாம் அவரின் ஆன்மனேய ஒருமைப்பாடு என்ற ஞான தரிசனத்தால் நிகழ்கின்றன என்பதை நாங்கள் அத்தருணத்தில் நினைவு கூர்ந்தோம்.எங்களை எப்போதும் காத்துவரும் அண்ணனுக்கும்,இதுபோன்ற சேவை செய்ய எங்களை வழி நடத்தும் விளமல் திரு.சிவப்பிரகாசம் ஐயா அவர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பித்து நிறைவு செய்கின்றோம்.

கடல்-திடல் பூஜை 2016


             02-08-2016 செவ்வாய் அன்று ஸ்ரீ அண்ணன் சுவாமிகளின் பக்தர்கள் விளமல் ஆலயத்திலிருந்து 0700 AM மணிக்கு புறப்பட்டு கடல்-திடல் பூஜை முன்னிட்டு முதலில் காமேஸ்வரம் கடற்கரைக்கு செல்கின்றனர். ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருவிற்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு பின்பு அனைவரும் சிந்தாமணி திடலுக்கு சென்று அங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  அங்கிருந்து புறப்பட்டு அனைவரும் பூவத்தடி வந்து வேதாச்சல சுவாமிகளின் சமாதி பீடத்தில் வழிபாடு செய்கின்றனர்.பின்பு அனைவரும் மாலை 0500 மணிக்கு விளமல் வந்துசேர்வர்.இப்பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு முன்னதாக தெரிவிக்க வேண்டுகிறோம்... Ph. +91 9486319014 / +91 9344887114
   

கடல்-திடல் பூஜை 2015 லிருந்து சில புகைப்படங்கள்:

கடல்-திடல் பூஜை 2015 


 கடந்த 14-08-2015 அன்று ஸ்ரீ அண்ணன் சுவாமிகளின் பக்தர்கள் விளமல் ஆலயத்திலிருந்து கடல்-திடல் பூஜை முன்னிட்டு முதலில் காமேஸ்வரம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்பு அனைவரும் சிந்தாமணி திடலுக்கு சென்றனர்.அங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சுமார் 0300 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அனைவரும் பூவத்தடி வந்து வேதாச்சல சுவாமிகளின் சமாதி பீடத்தில் வழிபாடு செய்துவிட்டு அனைவரும் மாலை 0500 மணிக்கு விளமல் வந்தனர். பயணத்தை சிறப்பாக நடத்தி தந்த சாமிக்கும்,அண்ணனுக்கும்,விளமல் அய்யாவுக்கும் நன்றி தெரிவித்து அனைவரும் விடைபெற்றனர்.

 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஆசிரமத்திற்கு விளமல் ஆலயத்தின் சார்பாக ஒரு சேவை- 2015


       கடலூர் மாவட்டம்,மேட்டுக்குப்பத்தில் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்தி வரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளை-க்குவிளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு தேவையான எழுது பொருட்கள்துணிகள்,நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட்டன.

        இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தி நடத்திவரும் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு கர்மயோகி ஆவார்கள்.வள்ளலாரின் வழியில் வாழ்ந்துவரும் இவர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு ஓர் முன் உதாரணமாக இருந்துவருகிறார்கள்.இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது இடுப்புக்கு கீழே உடல் செயலிழந்து போய்விட்ட போதிலும் நாங்கள் அவரை சந்தித்த தருணத்தில் அளப்பறிய செயல்களை செய்வதற்கு கூட உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்று உற்சாகமாக கூறினார்கள்.

     இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட கடந்த 10.05.2015 அன்று விளமல் ஆலயத்திலிருந்து 10 அன்பர்கள் மற்றும் சென்னையிலிருந்து திரு.ஜெயக்குமார் உள்ளிட்ட 5 அன்பர்கள் அங்கு சென்றிருந்தோம். எழுது பொருட்கள்துணிகள்,நோட்டுகள் இவற்றை கண்ட அந்த சிறார்கள் உற்சாகமாக ஓடிவந்து வேனிலிருந்து இவை அனைத்தும் எங்களுக்குத்தானா என்று கூறிக்கொண்டே அப்பொருட்களை அவர்களோடு அணைத்துக் கொண்டதை கண்ட நாங்களும் அவர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.வள்ளலார் போதித்து வாழ்ந்து காட்டிய ஜீவகாருண்யத்தால் இறைவழிபாடு என்ற பேருண்மை எங்களுக்கு விளங்கியது. எங்களை அன்புடன் வரவேற்று அந்த அறக்கட்டளையின் சேவகர்கள் மதிய உணவு அளித்தார்கள் .

    ஆன்மனேய ஒருமைப்பாடு வருவதுதான் இறை தரிசனத்தின் முக்கிய அம்சம் என்ற ஒரு உண்மையை அந்த அறக்கட்டளை அன்பர்களை கண்ட நாங்கள் புரிந்து கொண்டோம்.ஒருபுறம் வயோதிகத்தில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள் மறுபுறம் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் என இக்கலியுகத்தின் கொடுமையை தனது முயற்சியாலும் தியாகத்தாலும் தணித்து அவர்களுக்கெல்லாம் அன்பு மிக்க ஓர் புகலிடத்தை வழங்கிக்கொண்டிருக்கும் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களை வணங்கி ஆசி பெற்று,அருள் உருக்கத்துடன் அங்கிருந்து விடைபெற்றோம்.

     அண்ணன் சுவாமிகள் என்ற ஓர் சித்த புருஷர் அன்றும் இன்றும் நடத்துகின்ற அற்புதங்கள் எல்லாம் அவரின் ஆன்மனேய ஒருமைப்பாடு என்ற ஞான தரிசனத்தால் நிகழ்கின்றன என்பதை நாங்கள் அத்தருணத்தில் நினைவு கூர்ந்தோம்.எங்களை எப்போதும் காத்துவரும் அண்ணனுக்கும்,இதுபோன்ற சேவை செய்ய எங்களை வழி நடத்தும் விளமல் திரு.சிவப்பிரகாசம் ஐயா அவர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பித்து நிறைவு செய்கின்றோம்.