அண்ணனுக்கு பிடித்த பாடல்கள்


              

       புதூரில்,பொதுவாக மாலை நேரங்களில் அண்ணன் வசிக்கும் அறை மற்றும் அத்திமரத்து ஆச்சி இருப்பிடம்,அரிசி ஆலையின் களம் இவற்றில் அருள் மனமும் ஆன்மீக ஆரவாரமும் எழும்ப துவங்கும்.   

           அண்ணனின் பக்தர்கள் மற்றும் சீடர்கள் மாலையில் ஒன்று கூடி அண்ணன் வசித்த அறைக்கு அருகில் இருக்கும் குளமே புண்ணிய தீர்த்தமாகவும் அண்ணன் மற்றும் அத்தி மரத்து ஆச்சி அம்பாளின் வெளிப்பாடாகவும் தங்களின் அனுபவத்தில் அறிந்து  தினசரி மாலை கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

        தத்துவ,காதல் சினிமா பாடல்கள் அனைவரும் பாட ஹார்மோனியம்,கடம், கஞ்சிரா,மோர்சிங் போன்ற வாத்திய கருவிகள் பாடல்களுக்கு அணி சேர்க்க பக்தர்கள் அனைவரும் காதலர்கள் தங்களுள் இருக்கும் ஈர்ப்பை போன்ற ஒரு அம்பாளுடனான ஆத்மார்த்த தொடர்பை உணர்ந்து அனுபவித்தனர். ஏனென்றால் அம்பாளின் அம்சம் அதிகமாக அண்ணனிடம் வெளிப்பட்டது.அண்ணனை அனைவரும் அம்பாளாகவே வழிபட்டனர்.இது பக்தர்கள் அனைவருக்கும்  இனிய சத்சங்கமாக  அமைந்தது. 

        ஜாதி,மதம், அறிவு,ஆற்றல் இவற்றை கடந்து ஆன்ம ஒறுமைப்பாட்டை ஒவ்வொரு பக்தருக்கும் உணர்த்தும் விதமாக நடக்கும் இந்த கொண்டாட்டம் இரவு சுமார் 3 மணிவரையும் தொடர்வதுண்டு.அரிசி மாவும் கல்யாணமுருங்கை இலையும் கலந்த கலவையில் செய்த அடையை அனைவரும் உண்டு களித்தனர். அடையின் இலக்கணம் ஏதும் அதில் இல்லாவிட்டாலும் கூட அண்ணனின் அருளால் அந்த அடை அனைவருக்கும் சுவையானதாக அமைந்தது

    இவ்வாறு இரவில் நடக்கும் பாட்டு கச்சேரியில் அனைவரும் கலந்து கொண்டு பல சினிமா பாடல்களை பாடி மகிழ்ந்தனர்... அண்ணனும் பல பாடல்களை பாடி தனக்கும் அம்பாளுக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தினார்கள். அந்த பாடல்களில் சிலவற்றை இங்கு தந்துள்ளோம்.

       
 

அண்ணனுக்கு பிடித்த பாடல்கள்...