சொரப்பூர் துப்பாக்கிச் சூடு

தமிழகத்தைச் சேர்ந்த கிராமங்களான வீராணம் சொரப்பூரும். இந்த கிராமங்களின் பெயர்கள் வெளி உலகிற்குத் தெரிய வந்தது 1989 இல்தான்.1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக காவல் துறையினர் புதுவை மாநில எல்லைக்குட்பட்ட பனையடிக்குப்பம் கிராமத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கந்தன், சேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.     
அந்த ஆண்டு சொரப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு முன்னர், இருபது நாட்களாகவே ஊர் மக்களுக்கும் சேரி மக்களுக்கும் சிறு சிறு மோதல்களும் சச்சரவுகளும் இருந்து வந்திருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பினருக்குமிடையே சமரச முயற்சிகளும் நடந்திருக்கின்றன. பாதுகாப்பிற்காக இருபது காவலர்களும் சொரப்பூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 1.9.1989 அன்று பிற்பகல், ஊருக்கும் சேரிக்கும் இடையில் ஒரு பதட்டமான சூழல் நிலவியிருக்கிறது. சொரப்பூர் சேரிக்கு ஆதரவாக, வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் சேரி மக்களும் சென்றிருக்கின்றனர். சொரப்பூரில் இருக்கும் சில வீடுகளை  கொளுத்தியுள்ளனர்.
ஆனால், 2.9.1989 அன்று அதிகாலை, மூன்று கிராம சேரி மக்களும் புதுவையைச் சேர்ந்த பனையடிக்குப்பத்தில் கூடி இருந்த நிலையில் தமிழக காவல் துறையினர், சொரப்பூர் சேரி மக்களைத் தேடிக் கொண்டு பனையடிக்குப்பம் கிராமத்தில் புகுந்தனர்.

Sekar எதிர்பாராத இந்தத் தாக்குதலால் திகைத்த பனையடிக்குப்பம் மக்கள், "இது புதுவைப் பகுதி, இங்கு ஏன் பிரச்சனை செய்கிறீர்கள்?' என்று கேட்டதை காதில் வாங்காமல் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் பனையடிக்குப்பத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் சட்டக் கல்லூரி மாணவரான சேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதிலும், கந்தன் குண்டடிபட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்தாலும், சேகருக்கு காலில் மட்டுமே குண்டடிபட்டு இருக்கிறது.
கொல்லி வேலைக்குப் போன கந்தன் சத்தத்த கேட்டு ஓடி வந்தபோது, குண்டு அவன் மேலே பாய்ஞ்சிருச்சு. அந்த எடத்துலேயே கீழ விழுந்துட்டான்''
இச்சம்பவத்தைப் பற்றி விசாரிக்க பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர். இக்குழுவினர், சம்பவம் நடந்த அய்ந்து நாட்களுக்குள் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, நடந்த உண்மைகளைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடின. துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு புதுவை அரசு இறந்த கந்தன், சேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு வேலை அளித்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக காவல் துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பனையடிக்குப்பம், வீராணம், சொரப்பூர் கிராமங்களில் ஏறக்குறைய 700 குடும்பங்கள் உள்ளன. இது, செழிப்பான விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமி. புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தின் போது, பொதுவுடைமை இயக்கத் தலைவர் வ.சுப்பையா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது இக்கிராம மக்கள்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் இருந்த பகுதி. நக்சலைட் இயக்கம், இங்கு ஆழமாக வேரூன்றியதும் குறிப்பிடத்தக்கது. தமிழக புதுச்சேரி காவல் துறையின் "போர்க்குணமிக்க கிராமங்களுக்கான'' வரைபடத்தில், இக்கிராமங்களுக்கு நிரந்தர இடமுண்டுComments