தலகாசி தமிழ்ச் சங்கம்

(Tallahassee Tamil Sangam)


 

தலகாசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள்

(Tallahassee Tamil Sangam and its Activities) 

ஆங்கில வடிவம் [ English Version ]  | புதிய தளம் | கூகுள் தளம்

ஆண்டு 2000 த்தில் தலகாசியில் வாழ்ந்து வரும் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் அனைத்து தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக கூட்டி ஒரு உணவுக்கு அழைத்தோம். அப்போது, திரு முத்துசுவாமி "நாம் எல்லோரும், ஏன் ஒரு நிகழ்ச்சி துவங்க கூடாது?" என்று கேட்டார். அப்போழுது தொடங்கி நானும் என் குடும்பமும் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகளை ஆரம்பித்து நடத்தி வருகிறோம். சங்கம் தமிழன்பர்களை கூட்டவும், தமிழ் மொழியின் சிறப்பை பரப்பவும், அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழன்பர்களின் குழந்தைகளுக்கு தமிழில் பேச உதவி செய்து வருகிறது.

2000‍ முதல் 2003 வரை எங்கள் கூட்டங்கள் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும்,  பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்து வந்தது. அற்சமயம் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் (கல்லூரி ஆசிரியர்கள்) தலகாசியில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லி தர ஆசைப் பட்டார்கள்.  அதை அடுத்து வரும் தமிழ் வருடப்பிறபிற்கு அனைவரும் தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.

2004-வது வருடம் சனவரி மாதத்தில் திருமதி உஷா அவர்கள் 5-தலகாசி வாழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்கள். ஒவ்வோரு ஞாயிற்று கிழமையும் மணி 3 முதல் 4 வரை அவர்கள் தமிழை எழுதவும், படிக்கவும், பேசவும், மற்றும் உச்சரிக்கவும் சொல்லிக் கொடுத்தார்கள். குழந்தைகளுக்கு வாரா வாரம் வீட்டுப் பாடமும் கொடுத்து, பெற்றொர்களை உதவி செய்யச் சொன்னார்கள். குழந்தைகளும் பெற்றொர்களும் வாரா வாரம் பாடம் படித்தார்கள். தமிழ்ப் பள்ளி 2006 வரை நல்ல முறையில் நடந்தது.  2006-ல் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் வேறு ஒரு ஊருக்கு மாறிப் போகவே தமிழ்ப் பள்ளி முடிவுற்றது. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மறக்கவில்லை.

கடந்த பல வருடங்களாக தலகாசி தமிழ்ச் சங்கத்தின் மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்றுக் கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் தலகாசி இந்திய சங்கத்தின் (India Association of Tallahassee's | IATLH) Glimpses of India நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்கள். இதுவரைத் தமிழ் கற்று கொண்ட தலகாசி சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் ஆத்திசூடி, தமிழில் கதை சொல்லுதல், மகா கவி பாரதியாரின் "ஒளி படைத்த கண்ணி நாய் வா! வா!" பாட்டு, "போலிக்கு தண்டனை" நாடகம், "தெனாலி இராமன்" நாடகம், மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கெற்றுள்ளுனர்.

கடந்த சில வருடங்களாகவே (2007 முதல்) தமிழ் விழாவில்  பங்கு கொள்ளுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இப்போது தமிழ் விழாவை ஒரு பொது இடத்தில் நடத்தி வருகிறோம்.

கடைசி மாற்றம்:  தாயுமானசாமி சோமசுந்தரம், March 30, 2010.