2014 PROGRAMMES‎ > ‎

2015 PROGRAMMES

 
 தமிழ்நாடு பிராமணர் சங்கம்
[பதிவு எண்
127/2010]
சென்னை மாவட்டம்  -  ரெட்டேரி கிளை,
திருக்கள்ளில் கிராம மக்கள்,  மற்றும்  
திருக்கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தும்
9-
ஆம் ஆண்டு மாசித் தெப்பத் திருவிழா
2.2.2015, 3.2.2015
மற்றும் 4.2.2015
மூன்று நாள் நிகழ்சிகளும் மிகச்சிறப்பாக 
நடந்தேறியது, இறையருளால் 
4.2.2015
அன்று நடந்த
கல்யாண உற்சவம் 
காண கண்கொள்ளா காட்சியாய்
அமைந்தது !
திரு சர்மா சாஸ்திரி அவர்களின்
முகநூல் பதிவு கீழே தரப்பட்டுள்ளது  

 

Sarma Sastrigal .

"தெப்போத்ஸ்வத்தை பூஜையுடன் துவக்கி வைக்க வாருங்கள்..." என நண்பர் ஸ்ரீ வரதராஜன் அவர்கள் ( Varadha Rajan ) அழைத்தபோது எனக்கு ஒரு பெரிய பாக்யமும், அதிரிஷ்டமும் காத்திருக்கு என நான் சற்றும் நினைத்து பார்க்கவில்லை.

இன்று மாலை சென்னை பெரியபாளையம் அருகில் திருக்கண்டலம் (திருக்கள்ளி) எனும் க்ராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சிவானந்தேஸ்வரர் கோவில் உள்ள கிராமத்தை எங்களது கார் நெருங்கியதுமே ஒரு நிமிடம் ஆடி போய் விட்டோம், திரளாக கூடியிருந்த கிராம மக்களின் உற்சாகத்தை பார்த்து.

ஆகா, ஏற்பாடுகள் அனைத்தும் மிக துல்லியமாக செய்திருந்தனர்.
* எடுத்தவுடனேயே ஆலயத்தில் உள்ளே கிராமஸ்திரீகள் பங்குபெற்ற குத்து விளக்கு பூஜை. கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

*
அடுத்து ஆலயத்தில் அமைந்திருந்த அத்துனை ஸ்வாமி சந்நிதிகளுக்கும் அடியேனை அழைத்துச் சென்று அடியேன் மூலம் அந்தந்த தேவாதாமூர்த்திக்கு அர்ச்சனை, கற்பூர ஆரத்தி நடைபெற்றது.  கணபதி,  சுப்ரஹ்மண்ய ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, பைரவர், ஆஞ்சனேயர், சமய குரவர்கள் (நால்வர்), நவக்ரஹம், அம்பாள், சிவன் ஆகிய சந்நிதிகள்.
எனது பாக்யம்தான்.

*
அடுத்து ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அந்த க்ராமத்தில் 105 வயதை தாண்டிய ஸ்ரீ ஆறுமுக சிவாச்சாரியாருடன் சேர்த்து என்னை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றத

  
 

தொடர்ந்து தெப்பம் ஆரம்பம். தெப்பத்தில் எழுந்தருளியிருந்த சுந்தர விநாயகர் மற்றும் முருகன் வள்ளி தெய்வயானை மூர்த்திகளுக்கு அடியேனை பூஜை செய்ய சொல்லி தெப்பத்தை துவக்கிவைக்கும் பாக்யம்.

இந்த ஆலய விசேஷத்தை அங்கிருப்பவர்கள் மூலம் கேட்க கேட்க ஆனந்தம் அதிகமாகியது.

திருஞானசம்பந்தர் 11 பதிகங்களை பாடியுள்ள பாடல் ஸ்தலம் இது.
மகா பெரியவா தர்ஸித்த ஸ்தலம் ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவா பூர்வாஸ்ரம ஸ்தலத்தின் அருகில் அமைந்துள்ள ஸ்தலம் ஒரு காலத்தில் வைஷ்ணவர்கள் அதிகம் வசித்து வந்த அக்ரஹாரமாக இது திகழ்ந்துள்ளது.
இன்றும் இதன் முக்கிய ட்ரஸ்டிகளில் ஒருவர் ஸ்ரீ ராமசந்த்ர ஐயங்கார்

 

மகா பெரியவா இங்கு விஜயம் செய்தபோது இவரின் தாத்தா ஸ்ரீ வெங்கடாசாரிதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் என்று இவர் மூலம் இன்று கேட்டறிந்தபோது என் மனதில் ஏற்பட்ட எண்ன ஓட்டங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

அன்புடன் அழைத்து என்னை கெளரவித்து அதே சமயம் எனக்கு புண்ணியத்தையும் தேடி தந்துள்ள நண்பர் வரதராஜனுக்கு எப்படி நன்றியை தெரிவிப்பது எனத் தெரியவில்லை.


 


3.1.2015

50 (10+2) students - topper
free coaching by
Doctor bala of classic tuition center

and 

10 IAS students
free coaching arranged by 
Retteri Thambraas .
Dr. Sriram
of  CIT and 
Dr. Veeramani of Sankara college Dr. Parameswaran ,

Sri B.Purushothaman 
of EverWin Presides
  

Dr. H.V.Hande  being the chief guest.

All appreciated the free coaching service 
to score more than 1100 by
Dr. Bala and Retteri Thambraas 

by janakiraman ,
vaidyanathan, 
Srinivasan and
ramasamy

Comments