சுயவிவரக் குறிப்பு

இயற்பெயர் : நம்பிராஜன்
 
பிறந்த தேதி : 25.09.1947
 
கல்வித்தகுதி : புகுமுக வகுப்பு
 
மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதின அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என பல பணிகள் செய்திருக்கிறேன்.
 
சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறேன். தற்போது முழுநேர எழுத்தாளர். 
 
திருமணமாகி பிள்ளைகள் இருவர். பெரியவன் சென்னையில் தனியார் நிறுவமொன்றில் பணிபுரிகிறான். சின்னவன் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் பயின்று ஒளிப்பதிவு உதவியாளராக இருக்கிறான்.
 
முகவரி: மாறிகொண்டே இருப்பது.