தாய்ப்பால்


தாய்ப்பாலே  குழந்தைக்கு ஒப்புவமையில்லாத ஊட்டச்சத்து மிக்க உணவாகும். தாய்ப்பாலிலுள்ள போஷாக்கு மற்ற எந்த உணவிலும் இல்லாத காரணத்தினால் அதற்கு மாற்றீடாக வேறு எந்த உணவையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கு மேலாகஇ குழந்தைக்கு நோய்வராமல் காக்கும் பிறபொருள் எதிரிகளும் கலங்களும் தாய்ப்பாலில் காணப்படுதல் ஆச்சரியமான ஒரு விடயமாகும்.
குழந்தைக்கு பாலூட்டும்போது ஏற்படும் கனிவுஇ புளங்காகிதம்இ என்பவற்றுடன் தாயின் உடலில் சுரக்கப்படும் ஓமோன்கள் காரணமாகத் தாய்க்கும் பல நன்மைகள் கிடைப்பதுடன் குழந்தைக்கும் தாய்க்குமிடையில் உளரீதியான பிணைப்பொன்றை ஏற்படத்துவதிலும் தாய்ப்பாலின் பங்கு இன்றியமையாததாகும்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஏன் அவசியமாகிறது ?
 • முதல் 6 மாதங்களில் குழந்தைக்கு தேவையான அனைத்துவகையான ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பாலே சரியான        விகிதத்தில் வழங்குகிறது.
 • தொற்று நோய்களுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் மூலமே குழந்தைக்கு கிடைக்கின்றது.
 • வளர்பராயத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களிலிருந்து தாய்ப்பால் பாதுகாப்பளிக்கிறது.உ-ம் :- எக்ஸிமா, ஆஸ்த்துமா, நெஞ்சுவலி, வயிற்றோட்டம், சிறுநீர்த்தொகுதி நோய்கள்,  அதிக  உடல் எடை போன்றன.
 • குழந்தையின் மனவளர்ச்சிக்கு தாய்ப்பால் துணைபுரிகின்றது.
 • குழந்தையின் தாடையென்பு விருத்திக்கும் சீரான பல்வரிசைக்கும் தாய்ப்பாலூட்டல் துணைபுரிகிறது.

தாய்ப்பாலூட்டுவதனால் நீங்கள் அடையும் அனுகூலங்களை அறிந்துள்ளீர்களா ?
 • மார்பக புற்றுநோய்இ கர்ப்பப்பை புற்றுநோய்இ சூலக புற்றுநோய்;இ நீரிழிவு நோய் போன்றநோய்கள் ஏற்படும் வாய்ப்பு     தாய்ப்பாலூட்டுவதால் குறைவடைகின்றது.
 • பிரசவத்துக்கு பின்னரான குருதிப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் தாய்ப்பாலூட்டல் துணைபுரிகின்றது.
 • நீங்கள் கர்ப்பகாலத்துக்கு முன்னைய உடலமைப்பை மீளவும் அடைவதற்கு தாய்ப்பாலூட்டல் வழிவகுக்கின்றது.
 • தாய்ப்பாலூட்டாது தவிர்ப்பதனால் தாயின் மார்பகங்கள் வீக்கமுறுவதுடன் மார்பகத்தில் நோவுஇ பாற்கட்டி தோன்றுதல்இ கிருமித்தொற்று என்பனவும் ஏற்படலாம்.

எப்போது உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும் ?
 •  சாதாரணமாக பிரசவம் நிகழ்ந்து அரைமணி நேரத்தினுள் தாய்ப்பாலூட்ட வேண்டும்.
 •  சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருப்பினும் மருத்துவதாதியின் உதவியுடன் படுக்கையில் இருந்தவாறே தாய்ப்பாலூட்டலாம்.
 • குழந்தைக்கு முதல் 6 மாதங்களில் தாய்ப்பால் மாத்திரமே வழங்கப்பட வேண்டும். இக்காலப்பகுதியில் தண்ணீரோ அல்லது வேறு உணவு வகைகளோ வழங்கப்படின் குழந்தைக்கு வயிற்றோட்டம் முதலான தொற்று நோய்கள் ஏற்படலாம்.
 • ஒரு தடைவ பாலூட்டியபின் சிறிது நேரமே கடந்திருப்பினும் குழந்தை பசியுடன் இருப்பின் மீண்டும் பாலூட்டலாம்.
 • சராசரியாக ஒரே தடவையில் 20 – 30 நிமிடங்கள் பாலூட்டலாம்.
 • ஒருபக்க மார்பகத்திலிருந்து முற்றாகப் பாலூட்டி முடிந்த பின்னரே மற்றைய மார்பகத்திற்கு குழந்தையை மாற்றவேண்டும்.
 • அடுத்த தடைவ பாலூட்டும்போதுஇ முன்பு இரண்டாவதாக பாலூட்டிய மார்பகத்திலேயே பாலூட்ட ஆரம்பிக்கவேண்டும்.
 • ஒரு நாளில் சராசரியாக 8 – 12 தடவைகள் பாலூட்டலாம்.இதன் மூலம் போதியளவு பால் சுரத்தல் உறுதிசெய்யப்படுகிறது.

தாய்பாலூட்டலுக்கு உகந்த  நிலைகள்
கிறேடில் முறை

புட் போல் /கிளட்ச் முறை
இம்முறை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
 • சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருத்தல்
 •   குழந்தை சிறியதாக இருத்தல்
 •  தாயின் மார்பகங்கள் பெரிதாக இருத்தல்.
 •  இரணைப் பிள்ளைகளுக்குப் பாலூட்டல்

குறொஸ் கிறேடிஸ்  முறை
இம்முறை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
 •  குழந்தை குறை மாதத்தில் பிறந்திருத்தல்.
 • குழந்தை சிறியதாக இருத்தல்.
 • தாய்ப்பாலூட்டலில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் எவை ?
 • எடை குறைவாக பிறக்கும் குழந்கைகளுக்கு ஆரம்பத்தில் முலையை உறிஞ்சும் ஆற்றல் குறைவாகவே காணப்படும்.
 •  மேல் உதடுஇ அண்ணம் என்பவற்றில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவததில் சிரமங்கள் ஏற்படும்.
 • தாய்க்கு பாலூட்டுவதில் விருப்பமின்மைஇதாய் மன அழுத்தத்துக்குள்ளாதல் என்பன வெற்றிகரமான தாய்ப்பாலூட்டலில் தடங்கலை ஏற்படுத்துகிறது.
 • மார்பகங்களில் வீக்கம்இ நோ மற்றும் தொற்றுக்கள் ஏற்படின் பாலூட்டல் பாதிக்கப்படும்.
 •  முலைக்காம்பு உட்பதிந்திருத்தல்; முலைக்காம்பில் வெடிப்பு அல்லது புண் ஏற்படல் போன்றனவும் வெற்றிகரமான தாய்ப்பாலூட்டலை பாதிக்கும்.

இவ்வாறான இடர்பாடுகள் ஏற்படுமாயின் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும்.


தாய்ப்பாலை வெளியேற்றிக்கொடுத்தல் பற்றி அறிந்துள்ளீர்களா ?
 • குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பாலூட்ட முடியாத சந்தர்ப்பங்களில் தாயிலிருந்து பாலை செயற்கையாக வெளியேற்றிஇ பின்பு தேவையான நேரங்களில் குழந்தைக்கு வழங்கமுடியும்.
 • தாயின் முலையிலிருந்து பாலை கையினாலோ அல்லது அதற்கென விசேடமான பம்பிகள் மூலமாகவோ வெளியேற்றி பெறமுடியும்.
 • தாய் குழந்தையிலிருந்து விலகியிருக்கும் நேரங்களிலும் நோய் காரணமாக குழந்தை பாலை உறிஞ்சமுடியாத சந்தர்ப்பங்களிலும் தாயின் முலைக்காம்பில் வலி அல்லது காயம் ஏற்படும் வேளைகளிலும் இம்முறை மூலம் பாலை வழங்கலாம்.
 • வெளியேற்றிக் கொடுக்கப்படும் பாலை அறைவெப்பநிலையில் 10 மணித்தியாலங்களுக்குமஇ; சாதாரண குளிரூட்டியில் ஒரு நாளும் இ மிகை குளிரூட்டியில்; 3 மாதங்களும் சேமித்து வைக்கலாம். பின் இளங்சூடாக்கிய பின் குழந்தைக்கு வழங்கலாம். பால் இருக்கும் பாத்திரத்தை நேரடியாக வெப்பமேற்றக்கூடாது.


Comments