home

கூடல் அழகர் பெருமாள் - மதுரை

ஸ்ரீ மதுரவல்லி கோதா நாயகா ஸமேத வியூக சுந்தரராஜ பரப்ரும்மனே நம:

          ஸ்ரீய: பதியான பகவான் தர்மத்தை நிலை நிறுத்தி அதர்மத்தை அழிக்கும் பொருட்டு பகவான் அவ்வப்போது அவதாரம் பண்ணுகிறான். ஆவதாரம் என்றாலே தன்னிலையிலிருந்து இறங்குதல் என பொருள்படும். பகவான் பரம் என்ற நிலையிலிருந்து கீழே இறங்கி நமக்கு ஏற்றவாறு அவதாரம் செய்கிறான். இப்படியான அவதாரங்களில் மத்ஸய கூர்ம வராஹ, நாரஸிம்ம, வாமன, திரிவிக்ரம, பரசுராம, ராம, கிருஷ்ண என்ற அவதாரங்கள் முக்கியமானதாகும்.

   ஆனால் கலியுகத்தில் பகவான் முந்தய அவதாரங்களைப்போல் நேரிடையாக தோன்றுவது அரிது.காரணம் யுகதர்மத்தில் தற்போது தர்மம் குறைந்து வருவதே ஆகும். அதே நேரம் தன்னுடைய பக்தர்களை ரக்ஷிக்கவும் வேண்டும்.எனவே தான் பகவான் அர்ச்சாரூபியாக ஆலயம் தோறும் எழுந்தருளினான்.

      அர்ச்சாவதாரத்தில் தனியாக ஒரு சிறப்பு எந்த யுகத்திலும் கிடைக்காத ஒரு இன்பம் இந்த யுகத்திற்கு உணடு. மற்றய யுகங்களில் எந்த அவதாரம் நிகழ்கிறதோ அதனை மட்டுமே அதுவும் அவதார காலத்திலும்,அந்த இடத்திலும் உள்ளவர்கள் மட்டுமே அனுபவிக்க முடிந்தது.  ஆனால் தற்போது தசாவதார அலங்காரம் செய்து நாம் பகவனை எல்லாமுமாக காண்கிறோம். இந்த பாக்கியம் நமக்கு மட்டுமே உண்டு.

       இப்படி அர்ச்சாவதார மூர்த்தியாக பகவான் ஆலயம் தோறும் தோன்றினான். ஆதில் முக்கியமான 108 திவ்யதேங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் 108 ஷேத்திரத்தை ஆழ்வார் அனுபவித்தார் அதனாலேயே  திவ்யதேசங்களாயிற்று.   இதில் நான்கு
யுகங்களாக இருந்து வரும்     கூடல் மாநகர் என்ற மதுரையில்  எழுந்தருளியுள்ள                  “ஸ்ரீ கூடலழகர் பெருமாள்” முதன்மையானவராவார்.


 

கூடல் அழகர் பெருமாளை    பற்றி இங்கு காண்போம் .....

    1. கூடல் அழகர் பற்றி   
    2. கோவிலின் அமைப்பு
    3. ஆகமம்
    4. ஆழ்வார் அனுபவித்த பெருமாள்
    5. உற்சவ விவரங்கள்
    6. வழிபாட்டு முறை 
    7. திருப்பல்லாண்டு

 

ஆன்மீகத் தேன்

humbird

தேடி வரும் தேன்சிட்டு

JOIN |LIST |NEXT

alt-webring.com

Comments