புள்ளிக் கோலங்கள்

என்னை சுற்றி
அடுக்கு அடுக்காய்
வரிசை கிரமத்தில்
புள்ளிகள்.

கோலம் துவங்கும் நேரத்தில்
புள்ளிகள் நகர்கின்றன..
மத்திய புள்ளியாகிய நானும்
அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு
கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி
கோல பலகையிலிருந்து
விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து
மீண்டும் நேர்வாட்டில்
குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .
நகர்கிற புள்ளிகளில்
கோலமாவது ,ஒண்ணாவது?
அசந்து விட்ட நேரத்தில்
புரிந்தது -

புள்ளிகள் நகர்கையில்
மாறி மாறி
உருவம் எடுக்கும்
வடிவங்களே
அழகான  கோலங்கள் என்று.
கோலங்கள் சில, பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ
அமைகிறது. அவரவர், கற்பனை செய்ததை, நிஜ  வடிவத்தில் கொணர்ந்து இணைக்கும் 
தன்மையால் திறமையான, அழகான கோலங்கள் உருவாகின்றன. நம்மை மையப்
புள்ளியாய் நினைத்தால் தாத்தா, பாட்டி, பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார்,
உறவினர், நண்பர்கள், சக உழியர்கள், மேலாளர் என, பல புள்ளிகள் சேர்ந்ததே,
நம் வாழ்க்கையெனும் கோலம். இந்த புள்ளிகளை நாம் எப்படி ,வாழ்வில்
  இணைத்துக் கொள்ளுகிறோம் (Connecting the dots) , என்பதை பொறுத்து, நம் வாழ்வின் ஏற்றத்
 தாழ்வுகள் அமைகின்றன. இது  மட்டுமின்றி, 
புள்ளிகளை இணைக்கும் கோட்பாடு திட்டமிடல், முடிவெடுத்தல், செயல் படுத்தல்  என நடைமுறையில் யோசித்தால்,   மிகப் பல விஷயங்களை,  வெற்றிகரமாக்க உதவுகிறது.
நம்முடைய ஏற்றத் தாழ்வுகளில், பெரும்பாலும்,  முக்கிய பங்கு ஆற்றுவது, நமது பொருளாதாரமே. போதுமான பணமின்மையால், அத்தியாவசிய அடிப்படைத் 
தேவைகள்,  கல்வி, வாழ்க்கை வசதி போன்றவைகளை நிறைவேற்றிக் கொள்ள
இயலாமல், துன்பங்களும் பெரும்  மனச் சிக்கல்களும், நம்மை ஆட்டி வைக்கின்றன.
முதலில் நம் வாழ்வின் மையப் புள்ளியான, நம்மைப்  பற்றிய பொருளாதார சுய மதீப்பிடு பற்றி, சிறிதே சிந்திக்கலாம்

 
 
 
 
 
 
 
 
Comments