Vivasayam

விவசாயிகளுக்காகவும் மற்றும் வீட்டில் உள்ள எவரும் எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் விவசாயம் மற்றும் செடிகள் வளர்ப்பு, நோய்கள், மருந்துகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என பல செய்திகள் இங்கு பதிவுச்செய்யபடுகின்றன,


ரோஜா வளர்ப்பு

செடிகள் வாங்கும் போதே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்

1. நல்ல ஆரோக்கியமான செடியா என்று பார்க்க வேண்டும்

2.மஞ்சள் இலைகள் இல்லாமல் , ஹெல்தியாக , அடர் பச்சை நிறத்திலான இலைகள் இருக்க வேண்டும்

3. வேர் உறுதியாக இருக்க வேண்டும்

4. பூச்சி வெட்டில்லாத செடியாகவும் இருத்தல் முக்கியம் .

தொட்டியைத் தயார் செய்ய

மணல், செம்மண், நல்ல ஆட்டு அல்லது மாட்டுக் குப்பை இவை மூன்றும் சேர்ந்த கலவை 1: 1: 1 என்ற விகிதத்தில் கலந்து , தொட்டியின் அடியில் ஒரு லேயர் தென்னை மட்டை அல்லது ஓடு இட்டு (அதாவது அதிகப்படி நீர் தொட்டியின் ஓட்டை வழியாக வெளியேர வசதியாக இருக்க-வேர் அழுகலைத் தடுக்க ) பிறகு மண் கலைவையை இட வேண்டும் .

தொட்டி நிரம்ப மண் இட வேண்டாம். கொஞ்சம் இடைவெளி முக்கியம் ,செடி சுவாசிக்க .

பிறகு தொட்டியின்  நடுவில் செடியை வேர் அறாமல் ,அடிபடாமல் நட வேண்டும்.

(நானெல்லாம் நடும் போது இறைவனை ஒரு நொடி தியானித்து நடுவது வழக்கம் “பிஸ்மில்லாஹ்” சொல்லிக் கொள்வேன் ) .

சுற்றிலும் மண்ணை அழுத்திக் கொடுத்து நீர் ஊற்ற வேண்டும் . ஆர்வக் கோளாறில் குழந்தைகள் சற்றைக்கொரு முறை தண்ணீர் விடுவார்கள் . வேர் அழுகி விடும்! எச்சரிக்கை !

செடியின் கிளைகளில் ஒவ்வொரு கணுவிலும் ஐந்து, ஐந்து இலைகள் மட்டும் இருக்கும் கிளைகள் தான் பூக்கும் தன்மை கொண்டவை .

ஏழு இலைகள் கொண்ட கிளைகளும் இருக்கும் . அவற்றை மெல்ல அகற்றி விட வேண்டும் . இவை இருந்தால் , வளர்ந்தால் செடி பூக்காது !

அவ்வைக்கப்போது – நல்ல வெங்காயச்சருகு , டீத்த்தூள், காய்கறித்தொலி , முட்டை ஓடு இவற்றை எல்லாம் போடவே கூடாது ! பூஞ்சை உண்டாகி ,செடி பட்டுப் போகும் ! அப்படி இவற்றை கண்டிப்பாக இட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நன்றாக மக்க வைத்து பிறகு போடலாம் .

காய்ந்த மாட்டு அல்லது ஆட்டுக் குப்பை மட்டும் தான் இடலாம் . அல்லது ரோஸ் மிக்சர் போடலாம் .

செடியைச்சுற்றி மண்ணைக் கிளறி விட்டு ,உரம் இட்டான பிறகு சற்றே அதிகப்படியாக நீர் விடவேண்டும் . ரோஸ் மிகசர் இடுவதென்றால் வேரில் பட்டு விடாமல் கவனம் !





இயற்கை விவசாயதில் தென்னை வளர்ப்பு மக்கள் தொலைகாட்சியின் மலரும் பூமியில் ஒளிபரப்பான நேர்முகம். நமது உறுப்பினர்களின் பார்வைக்காக இங்கே

YouTube Video