இந்த வருட தீபாவளிக்கு வந்திருக்கும் புது பட்டாசுக்கள். ( நண்பர் பினாத்தலுடன் சும்மா சாட் செய்ய ஆரபித்து இந்த பதிவு ரெடியாகிவிட்டது. இந்த வெடிகளை வெடிக்க செய்த அவருக்கு நன்றி. )
வெடிகள் விவரம் கீழே...

1. 2011 வாலா வெடி - அன்பாக வைத்தால் அறிவாலயத்தில் மணி அடிக்கும். 2011 ஆம் ஆண்டு

2. ராமர் வெடி - கூலிங்கிளாஸ் போட்டு வெடிக்கனும். கல்யாண மண்டபம் பக்கத்தில் வைத்தால் சத்தம் அதிகமா இருக்கும். மணல் திட்டில் வைத்தால் சத்தம் வராது.

3. க(ன்)னிவெடி - வீட்டுகொல்லை புறத்தில் வைத்து வெடிக்கும் பட்டாசு. பெண்கள் அதிகம் விரும்பும் வெடின்னு சொன்னாங்க, இப்ப வெடிக்கறதைப் பாத்தா அப்படி தெரியல. டெல்லியில கூட இந்த வெடிக்கு மவுசு வந்திருக்காம். உங்களுக்கு அதிர்ஷம் இருந்தால் இந்த வெடி பாகெட்டில் ஏதாவது ஒரு வெடி காலமேக புலவர் பாடல் பாடும்.

4. "கேப்"டன் வெடி - ஒத்தை வெடிதான், வேறெந்த சத்தமும் கூட்டணியிலே வராது, வெடித்தால் சத்தம் விருதாச்சலம் வரை கேட்கும், இந்த வெடி எவ்வளவு டேஞ்சரஸ்னு மக்களுக்கு இன்னும் புரியல. இந்த தீபாவளீக்கு தமிழர்கள் அதிகம் விரும்பி வெடிக்கும் பட்டாசு.

5. கேப்சிங் - சின்ன குழந்தைகள் விரும்பி வெடிக்கும் வெடி. இது வெடி இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. தானாக வெடிக்காது, சோனியா துப்பாகியால் வெடித்தால் தான் வெடிக்கும்.

6. கலைச்சக்கிரம் - தரையிலேயே சுத்தும் பட்டாசு, திடீர்ன்னு வெடிக்கும், சீறும், எந்த பக்கம் வேணாலும் நெருப்பு வரும். இந்துக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

7. லஷ்மி வெடி - மக்களிடம் இருக்கும் எல்லா லஷ்மியையும் வெடிக்க வைக்கும் இந்த வெடி, சிதம்பரத்தில் தான் கிடைக்கும் என்கிறார்கள்.

8. நாட்டு வெடி - நாடார் வெடியை நாட்டு வெடி என்ற பெயர் மாற்றத்துடன் மார்கெட்டுக்கு வந்திருக்கு. புது வெடி என்பதால் மக்கள் இதை வாங்குவார்களா என்று தெரியலை.

9. புஸ்வானம் - இந்த பட்டாசு சிவகாசியில் தாயாராகாமல் சத்திய மூர்த்திபவனில் தயாராகிறது. தீபாவளிக்கு மற்ற வெடிகளுடன் இதை வெடித்தால் தான் தீபாவளி கொண்டாடிய எபெக்ட் இருக்கும். பிகு: இதை வெடிக்க வேட்ண்டும் என்றால் டெல்லியில் பர்மிஷன் வாங்கனும்.

10. இளைஞர் வெடி : பழைய வெடிதான், இப்ப பாங்காக் தொழில்நுட்பத்தில் புதுமையா ராப்பர் மாத்தி வந்திருக்கு. கூடிய சீக்கிரம் இந்த வெடி மார்கெட்டில் முதன்மை வெடியாக சான்ஸ் இருக்கு.

12. 11. போயஸ் வெடி: பாதுகாப்பில்லாத வெடின்னு சிலர்னு சொல்றாங்க, புல்லட் ப்ரூப் வெடின்னு சிலர் சொல்றாங்க. வெடித்த்தால் ராக்கெட் போல பறந்து நீதிமன்ற வாசலில் போய் விழும்.

13. டபுள் ஷாட் - வெடித்தால் வலது, இடது பக்கமுனு இரண்டு வெடிக்கும். வெடிக்கும் முன் 'புஷ்'ஷ்ன்னு சத்தம் மட்டும் வெடிசத்தத்தை விட பெரிசா கேட்கும். பயம்பட வேண்டாம்.

14. வெங்காய வெடி - பெரிய வெடி, அப்பப்ப நமுத்துப் போகும், அய்யர்திரியை (மன்னிக்கவும்.. அரைத்திரியை) கிள்ளிப்போட்டா மட்டும் வெடிக்கும்.

15. இந்த வெடியெல்லாம் வெடித்த பின் வெடிக்காத பட்டாசுக்களை பொறுக்கிபோட்டு கொளுத்தினால் வெடிக்குமா வெடிக்காதானே தெரியாது. ஆனா ஆர்வமா பார்க்கும் போது வெடிக்காது. இந்த பட்டாசு பேர் உங்களுக்கே தெரிந்திருக்கும்.