என்னைப் பற்றி

 

என் பெயர்: தளவாய் சுந்தரம். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் அருகில் உள்ள ஊரல்வாய்மொழி என்னும் சிறிய கிராமம் எனது ஊர். பிறந்த தேதி: 03.03.1975. அப்பா பெயர், கிருஷ்ணன்; அம்மா பெயர், செல்லம்மாள். அப்பா, அம்மா இருவருக்கும் விவசாயம்தான் தொழில். ஐந்தாம் வகுப்பு வரை ஊரில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியிலும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பிறகு, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கலைக் கல்லூரியில் B.Sc. (கணிதம்), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் M.A. (தொடர்பியல்) பயின்றேன். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், குமுதம் குழும இதழ்கள், ஆனந்த விகடன், கிழக்கு பதிப்பகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளேன். தற்போது, பேராசிரியர் வி. நடராஜன் வழிகாட்டுதலில் ‘portray of criminals in tamil print media’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன். 'சாவை அழைத்துக்கொண்டு வருபவள்' என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பு அகரம் பதிப்பகம் வெளியிடாக வந்துள்ளது.