திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகம்

26.10.2016  -  நினைவூட்டல்  -  NSIGSE - 2016 -17 ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் SC/St இன  மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ-3000/- ஆன்லைனில் பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள்  ஒதுக்கப்பட்ட மையங்களில் இன்றே (26.10.2016) பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யாவிடில்  அதனால் ஏற்படும் பின் விளைவிற்கு தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என  தெரிவிக்கலாகிறது.  Attachment

26.10.2016 (நினைவூட்டல்-2)  தேர்வுகள் தனி கவனம்அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 
மார்ச்/ஏப்ரல் 2017 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்பட்டியலை (NR)  07.10.2016 முதல் 31.10.2016க்குள் ஆப்லைனில் (Offline) தயார்   செய்து   வைத்திருக்க அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 
அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (நினைவூட்டல்) இடைநிலைப்பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல்-2017 - OFFLINE-ல் மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியல் (NR) தயார் செய்த விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE-படிவத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE ATTACHMENT-SSLC-MARCH/APRIL - 2016-17

25.10.2016 - 2016-17ஆம் கல்வியாண்டு வேலுர் மண்டல அளவிலான குடியரசு தின / பாரதியார் தின குழுப் போட்டிகள் நடைபெறுதல் நடுவர்கள் நியமனம் மற்றும் திருத்தப்பட்ட போட்டிகள் நடைபெறும் இடங்கள் Attachment


25.10.2016 பேரிடர் மேலாண்மை சார்பான போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல் - online entry https://docs.google.com/spreadsheets/d/1pYlOZaQWFCAhmrur8deFgSFFwZy4P0KL5gb6PiP1fgk/edit#gid=0

25.10.2016 INSPIRE Internship Science camp Organised by VIT  Attachment


25.10.2016 CPS missing credit விவரங்கள் 2016-17 ம் நிதியாண்டின்  Token No. வாரியாக http://218.248.44.123/auto_cps என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பதிவு மேற்கொள்ள voucher no. தேவைப்படாது என்பதால் உடனடியாக பதிவுகளை மேற்கொண்டு
CPS missing credit சரி செய்யுமாறு தெரிவிக்கலாகிறது.

25.10.2016 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் இணைய வசதி (Internet) குறித்து உரிய படிவத்தில் தகவல்கள் இதுவரை அனுப்பாத பள்ளிகள் உடனடியாக அனுப்ப வேண்டும். திருப்பத்தூர் கந்திலி ஆலங்காயம் நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை - ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த பள்ளிகளில் இன்றே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். காட்பாடி கே.வி.குப்பம் மாதனூர் பேர்ணாம்பட்டு குடியாத்தம் - ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த பள்ளிகள் படிவங்களை வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கலாகிறது. ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலகத்தில் படிவங்களை சமர்ப்பித்தவர்கள் தங்கள் பள்ளியின் பெயரினை 9442669215 என்ற எண்ணிற்கு SMS ல் அனுப்பவும்.

24.10.2016 - தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி 1 நாள்  GENDER SENSITIZATION  பயிற்சி -  சார்பு Attachment

24.10.2016 - தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை Attachment 

24.10.2016 மிக மிக அவசரம் - சார்ந்த உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (நினைவூட்டல்-4) 2016-17-ம் கல்வியாண்டிற்கான பாடபுத்தகங்கள்  எடுத்துச் சென்றமைக்கான போக்குவரத்துசெலவின காசோலையை  பெற்றுச் செல்லாத இணைப்பில் உள்ள பள்ளிகள் இவ்வலுவலக ஆபிரிவு எழுத்தரிடம் உடனடியாக பெற்றுச் செல்ல தெரிவிக்கலாகிறது. Attachment 

(குறிப்பு : தலைமை ஆசிரியர் அல்லாது மற்றவர் வரும்போது ஆளறிச் சான்று மற்றும் பற்றுச்சீட்டு கொண்டுவரவேண்டும்.  அசல் இரசீதில் தலைமை ஆசிரியரின் முத்திரையுட்ன் கையொப்பம் இருத்தல் வேண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளாவிடில் காசோலை ரத்து செய்யப்படும்).

24.10.2016   அனைத்து வகை  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  (நினைவூட்டல்)

2016-17 ஆம் கல்வியாண்டிற்கான திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி 26.10.2016 அன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் - மாணாக்கர்களின் படைப்புகளை 25.10.2016 அன்று மாலை 04.00-மணிக்குள்  உரிய இடத்தில் வைத்தல் மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் விவரம் மற்றும் படைப்பின் விவரங்களை இதுநாள்வரை பதிவு செய்யாத பள்ளிகள் மட்டும் இன்று  24.10.2016  மாலை 04.00 மணிக்குள் பதிவுசெய்யக் கோருதல் - சார்ந்து ATTACHMENT       ONLINE ATTACHMENT  

குறிப்பு  :  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து,  இன்று 24.10.2016 உரிய தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


24.10.2016  சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை-2016-17ம் ஆண்டிற்கு தொகை வழங்க தேவைப்பட்டியல்கோருதல்  இணைப்பு 


22.10.2016 அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களின் மிக முக்கிய கவனத்திற்கு.........  தங்களின் பள்ளியில் இருந்து அனுப்பப்படும் அனைத்துவகை கடிதங்களிலும் பள்ளி TTR No. குறிப்பிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

21.10.2016 அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

2014-15 மற்றும் 2015-16ம் கல்வி ஆண்டில் 6 முதல் 8ம் வகுப்பு  பயின்ற SC -ST இன மாணவிகளுக்கு பெற்று வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகைக்கு பயனீட்டுச் சான்று மற்றும் பற்றுச் சீட்டு நகல்   சமர்ப்பிக்காத பள்ளிகள் 24.10.2016 அன்று காலை  SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவிக்கலாகிறது இணைப்பு 

21.10.2016 அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

EMIS 2016-17ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில்- 2 பூர்த்தி செய்து பதிவு செய்ய இயலாத மாணாக்கர்கள் விவரம் படிவம் -1ல் வகுப்பு வாரியாக தட்டச்சு செய்து CDயில் பதிவு செய்து (Hard copy) உடன் 24.10.2016 அன்று காலை 8.00 முதல் ஒன்றியம் வாரியாக SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.Attachment 

NSIGSE - 2016-17 ஆம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் SC-ST இன மாணவிகளின் ரூ.3000 கல்வி உதவித் தொகை பெற ஏற்கனவே அறிவித்த  பதிவு மையங்களில் சமர்ப்பிக்காத பள்ளிகள் 24.10.2016 அன்று SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது


21.10.2016   அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (நினைவூட்டல்) இடைநிலைப்பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல்-2017 - OFFLINE-ல் மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியல் (NR) தயார் செய்த விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE-படிவத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT-SSLC-MARCH/APRIL - 2016-17

20.10.2016 பெற்றோர் ஆசிரியர் கழக நிதி - சந்தா செலுத்தக் கோருதல் - 30.09.2016 அன்றுடன் பள்ளி மாணவர் சேர்க்கை முடிவடைந்ததால் உடனடியாக PTA 5% சந்தா செலுத்த வேண்டும். இதுவரை சந்தா செலுத்திய பள்ளிகள் : 73 செலுத்துச்சீட்டு நகல் அனுப்பிய பள்ளிகள்: 26 (21 அரசுப் பள்ளிகள் + 5 நிதியுதவி பள்ளிகள்) . மீதமுள்ள அனைத்துப் பள்ளிகளும் உடனடியாக சந்தா தொகை செலுத்த வேண்டுமென தெரிவிக்கலாகிறது.

20.10.2016 திருப்பத்தூர் சார்கருவூலத்தில் பட்டியல்கள் சமர்ப்பிக்கும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - NHIS-2016 படிவங்களை பூர்த்தி செய்து உடனடியாக திருப்பத்தூர் சார்கருவூலத்தில் சமர்ப்பிக்கும் படி சார்கருவூல அலுவலர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

20.10.2016 (30.09.2016 முதல் 20.10.2016 வரை 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு - உண்மைத் தன்மை சான்று கோரி இவ்வலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை) இவர்களைத் தவிர திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / நிதியுதவி / நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்  அலுவலக பணியாளர்களின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று மீது உண்மை தன்மை சான்று இதுவரை பெறப்படாதவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சான்றுகளுடன் 28.10.2016க்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க கோருதல் - சார்பு. Attachment

20.10.2016   அனைத்து வகை  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இணையம் (INTERNET) தொடர்பான தகவல் கோருதல் சார்ந்து. ATTACHMENT

20.10.2016   அனைத்து வகை  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  பொதுப்பணி - அடிப்படைப்பணி திருப்பத்தூர் கல்வி மாவட்ட சரகத்திற்குட்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் அரசு / நகராட்சி /  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்களை 25.10.2016-க்குள் அனுப்பக் கோருதல் - சார்ந்து. ATTACHMENT 

20.10.2016   சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அளவிலான 2016-17-ம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி நடத்த ஏதுவாகஇணைப்பில் கண்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று 20.10.16 பிற்பகல் 03.00 மணியளவில்இவ்வலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT


20.10.2016   அனைத்து வகை  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  2016-17 ஆம் கல்வியாண்டிற்கான திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி 26.10.2016 அன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் - மாணாக்கர்களின் படைப்புகளை 25.10.2016 அன்று மாலை 04.00-மணிக்குள்  உரிய இடத்தில் வைத்தல் மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் விவரம் மற்றும் படைப்பின் விவரங்களை இதுநாள்வரை பதிவு செய்யாத பள்ளிகள் மட்டும்   21.10.2016  மாலை 04.00 மணிக்குள் பதிவுசெய்யக் கோருதல் - சார்ந்து ATTACHMENT       ONLINE ATTACHMENT  

குறிப்பு  :  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து, 24.10.2016 அன்று உரிய தலைமையாசிரியர்களிடம் சமர்பிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


20.10.2016  தேர்வுகள் அவசரம் -  HSC/SSLC MARCH- 2017 - Nominal Roll 2017- Procedure to installation and printing error trouble shooting - reg.  Attachment     


19.10.2016      உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள ஒன்றியங்களின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் (ஜோலார்பேட்டைஆலங்காயம்கந்திலிகாட்பாடிகே.வி.குப்பம்)  - வேலூர் காட்பாடி SSA அரங்கத்தில் நாளை 20.10.2016 காலை 09.00 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.  கூட்டத்திற்கு  வரும்போது  1) EMIS - பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படவேண்டிய மாணாக்கர்களின் விவரம். 2) பதிவு மேற்கொள்ளப்பட வேண்டிய மாணவர்களின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவம் -1ல் பூர்த்தி செய்து CDயில் நகல் எடுத்து வரவும் 3) Aadhaar - பெற்று வழங்கிய விவரம் மற்றும் வழங்கப்படவேண்டிய மாணாக்கர்களின் விவரம். 4) 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணாக்கர்களின் தற்போதைய எண்ணிக்கை விவரம்  ATTACHMENT

குறிப்பு :- கூட்டத்திற்கு தலைமையாசிரியர்கள் மட்டுமே தவறாமல் வருகைப்புரியவேண்டும் எனவும்பொறுப்பு தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளகூடாது எனவும் தெரிவிக்கலாகிறது.


19.10.2016 உலகசிக்கன நாள் - சார்பாக பள்ளி அளவில்நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை (கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி, நாடகப் போட்டி) அவர்கள் போட்டிகளில் பெற்ற மதிப்பெண் விவரங்களுடன் இன்று மாலை 3.00 மணிக்குள் 9442669215 என்ற எண்ணிற்கு பள்ளி பெயருடன் SMS ல் அனுப்புமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

18.10.2016      உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள 5 ஒன்றியங்களின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் (திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, பேர்ணாம்பட்டு, மாதனூர், குடியாத்தம்)  - வேலூர் காட்பாடி SSA அரங்கத்தில் நாளை 19.10.2016 காலை 09.00 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.  கூட்டத்திற்கு  வரும்போது  1) 6-ம் வகுப்பு மாணாக்கர்களின் சேர்க்கை பதிவேடு மற்றும் வருகைப்பதிவேடு. 2) EMIS - பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படவேண்டிய மாணாக்கர்களின் விவரம். 3) Aadhaar - பெற்று வழங்கிய விவரம் மற்றும் வழங்கப்படவேண்டிய மாணாக்கர்களின் விவரம். ATTACHMENT

குறிப்பு :- கூட்டத்திற்கு தலைமையாசிரியர்கள் மட்டுமே தவறாமல் வருகைப்புரியவேண்டும் எனவும், பொறுப்பு தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளகூடாது எனவும் தெரிவிக்கலாகிறது.


 17.10.2016  - NMMS- தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு (Registration form) படிவம் பல நினைவூட்டுகள் வலியுறுத்தி இருந்தும் இதுவரையில் சமர்பிக்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது எனவே இணைப்பில் கண்ட பள்ளிகள் இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக காலை 10.30 மணிக்குள் தெளிவாக  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். Attachment 

17.10.2016  - RMSA- ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி 5 நாட்கள் IEDSS, ICT மற்றும் Gender Sensitization  பயிற்சி - சார்பு. Attachment

17.10.2016   அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

இடைநிலைப்பொதுத்தேர்வு - மார்ச்/ஏப்ரல்-2017 - OFFLINE-ல் மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியல் (NR) தயார் செய்த விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE-படிவத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT-SSLC-MARCH/APRIL - 2016-17


17.10.2016   அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

 பள்ளிக் கல்வி   ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி - தங்கள் பள்ளியில்  நடத்தப்பட்ட - அறிவியல் கண்காட்சியில்   முதலிடம் பெற்ற  மாணவர்கள் பெயர்பட்டியல் மற்றும் அவர்களின் படைப்பின் விவரங்களை இதுநாள் வரை பதிவு செய்யாத பள்ளிகள்  ONLINE படிவத்தில் 21.10.2016-க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.      ONLINE ATTACHMENT    ATTACHMENT


17.10.2016 -   அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  (மிக மிக அவசரம்)

 NSIGSE - 2016 -17 ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் SC/St இண மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ-3000/- ஆப்லைனில் பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment 


17.10.2016   சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அளவிலான 2016-17-ம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி நடத்த ஏதுவாக, இணைப்பில் கண்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று 17.10.2016 பிற்பகல் 03.00 மணியளவில், இவ்வலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT


17.10.2016   மிக மிக அவசரம் - சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு (நினைவூட்டல் - 3)

2016-17-ம் கல்வியாண்டிற்கான பாடபுத்தகங்கள்  எடுத்துச் சென்றமைக்கான போக்குவரத்து செலவின காசோலையை  பெற்றுச் செல்லாத இணைப்பில் உள்ள பள்ளிகள் இவ்வலுவலக ஆ3 பிரிவு எழுத்தரிடம் பெற்றுச் செல்ல தெரிவிக்கலாகிறது. Attachment 

(குறிப்பு : தலைமை ஆசிரியர் அல்லாது மற்றவர் வரும்போது ஆளறிச் சான்று மற்றும் பற்றுச்சீட்டு கொண்டுவரவேண்டும்.  அசல் இரசீதில் தலைமை ஆசிரியரின் முத்திரையுட்ன் கையொப்பம் இருத்தல் வேண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளாவிடில் காசோலை ரத்து செய்யப்படும்). 


14.10.2016    சார்ந்த பள்ளித்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

அனைவருக்கும் கல்வித் திட்டம் - 2016-17 புதிய அQகுமுறையிலான கல்வி - பெண்கல்வித் திட்டம் - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி - ஏலகிரியில் நடைபெறுதல் - DIET விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியில் பங்கேற்கும் பொருட்டு உரிய நேரத்தில் விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT


14.10.2016       அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

              15.10.2016-அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை பாடதிட்டம் பின்பற்றப்படவேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 15.10.2016 அன்று பள்ளியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் நாளை இளைஞர் எழுச்சி நாள்’-ஆக கொண்டாடிடவும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அன்றைய தினம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான யுக்திகள் குறித்து சொற்பொழிவாற்றுவதற்கு ஏற்பாடு செய்து விழாவினை சிறப்புற நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

14.10.2016    அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 

திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 20.10.2016 (ஆண்கள்) மற்றும் 21.10.2016 (பெண்கள்) ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை சிறுவிளையாட்டு அரங்கத்தில் (SDAT MINI STADIUM, JOLARPETTAI) காலை 09.00  மணியளவில் நடைபெறவுள்ளது.  அப்போட்டிகளுக்கான நடுவர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் உள்ளது.  போட்டிகள் சிறப்புடன் நடைபெற சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்,  உடற்கல்வி ஆசிரியர்களை முன்னதாக பணிவிடுப்பு செய்து உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT


14.10.2016 வேலூர், ஊரிஸ் பள்ளியில் நடைபெறும் இளைஞர் எழுச்சி நாள் சார்பான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கீழ்காணும் பள்ளிகளில் பள்ளி அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ/மாணவியர்களை நாளை 15.10.2016 அன்று காலை 9.00 மணிக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவருடன் போட்டியில் பங்கேற்கச் செய்ய வேண்டுமென தெரிவிக்கலாகிறது. 

1. ராமகிருஷ்ணா 2. மேரி இமாகுலேட் 3. செயிண்ட் ஜோசப் ஜோலார்பேட்டை 4. தொன்போஸ்கோ ஜோலார்பேட்டை 5. இஸ்லாமியா ஆண்கள் வாணியம்பாடி 6. குனிச்சி 7. வளத்தூர் 8. திருவள்ளுவர் குடியாத்தம் 9. மேல்பட்டி 10. காட்பாடி பெண்கள் 11. அக்ஸீலியம் காட்பாடி 12. நேஷ்னல் குடியாத்தம் 13. லத்தேரி பெண்கள் 14. ஜங்காலப்பள்ளி 15. காங்கேயநல்லூர் பெண்கள் 16. தொன்போஸ்கோ காந்திநகர் 17. திருவலம் பெண்கள் 18. கே.வி.குப்பம் பெண்கள்

வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் 15.10.2016 காலை 9.00 மணிக்கு அன்று நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கீழ்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளைச் சார்ந்த அறிவியல் கண்காட்சிப் படைப்புகளை பொறுப்பான ஆசிரியர் ஒருவருடன் மாணவர்களை பங்கேற்கச் செய்யுமாறு தெரிவிக்கலாகிறது.

1. கொட்டமிட்டா 2. செம்பேடு 3. வளத்தூர் 4. பரதராமி பெண்கள் 5. ஜோதி உநிப குடியாத்தம் 6. திருவள்ளுவர் குடியாத்தம் 7. நேஷ்னல் குடியாத்தம் 8. பனமடங்கி 9. வடுகந்தாங்கல் 10. கே.வி.குப்பம் ஆண்கள் 11. கே.வி.குப்பம் பெண்கள் 12. கொசவன்புதூர் 13. லத்தேரி ஆண்கள் 14. லத்தேரி பெண்கள் 15. செஞ்சி 16. கல்வி உலகம் அரும்பாக்கம் மோட்டூர் 17. காங்கேயநல்லூர் பெண்கள் 18. ஜங்காலப்பள்ளி 19. காட்பாடி ஆண்கள் 20. காட்பாடி பெண்கள் 21. சேர்க்காடு 22. திருவலம் ஆண்கள் 23. திருவலம் பெண்கள் 24. செயிண்ட் சேவியர் கிருஸ்டியான்பேட்டை 25. அக்ஸீலியம் காட்பாடி 26. தொன்போஸ்கோ காந்திநகர் 27. மேல்பட்டி


14.10.2016 -  மாநில கணக்காயரின் தணிக்கை படிவம் 1.அ.(ம) மே.நி.பள்ளி, கே.வி.குப்பம் 2.அ.உ.நி.பள்ளி, மல்லப்பள்ளி, 3.அ.உ.நி.பள்ளி,ஆசனாம்பட்டு 4.அ.உ.நி.பள்ளி,கொல்லகுப்பம் 5.அ.உ.நி.பள்ளி,பந்தாரப்பள்ளி 6.அ.மே.நி.பள்ளி, கொரட்டி 7.அ.மே.நி.பள்ளி, நிம்மியம்பட்டு இப்பள்ளிகள் இணைப்பில் கண்ட படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து பள்ளி முத்திரை மற்றும் கையொப்பத்துடன்  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். Attachment


14.10.2016 - தீபாவளி 2016 பண்டிகை கொண்டாடுதல் வழி காட்டுதல்கள் / அறிவுரைகள் வழங்குதல்  சார்பு . Attachment


13.10.2016  - தேர்வுகள் அவசரம்10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு காலண்டு தேர்வு  தேர்ச்சி அறிக்கை மற்றும் முதல் பருவ தேர்ச்சி ( Ist MID term )  அறிக்கை சமர்ப்பிக்காத கீழ்கண்ட பள்ளிகள் 14.10.2016 காலை 10.30 மணிக்குள் அ3 பிரிவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ( அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு சமர்பிக்க உள்ளதால் கால தாமதமின்றி சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.) 

காலாண்டு தேர்ச்சி அறிக்கை 

                            10ம் வகுப்பு -  TTR -097, 104 , 147,164,306,405,411,416,478,484,

                            12ம் வகுப்பு - TTR - 405, 411,416,427,

முதல் பருவ தேர்ச்சி அறிக்கை 

                            10ம் வகுப்பு -  TTR  001,002,008,012,020,021,025,031,043,046,047,050,052,054,071,093,103,104,129,130,138,140,153,158,167,170,                                                                  408,416,423,427,429,430,431,479,485, 486,487,

                            12ம் வகுப்பு - TTR - 001,002,008,012,020,021,025,031,043,046,047,050,052,054,103,158,408,416,423,427,429,430,431