பேச்சிலே சுதந்திரம் மூச்சிலே சுதந்திரம் வீட்டிலே சுதந்திரம் நாட்டிலே சுதந்திரம் என்று-தந்து எம்மையே காத்த-அன்னை பாரதம் மோதவே முயன்றிடும் அண்டை நாட்டின் வெஞ்சினம் போல-நாட்டின் உள்ளுமே ஒன்றுமில்லை என்றிட உள்ள- பதவி பின்னிலும் சென்று-நாணம் ஒன்றிலா வண்ணம்-சிறிய மதியுடன் செய்யுகின்ற தந்திரம் என்று-உள்ள யாவையும் கிள்ளி-வீசும் உன்-திறம் சொல்லில் கூற ஆகுமோ பண்ணில் தான் அடங்குமோ பிள்ளை என்னைக் காத்திடும் அன்னை எந்தன் பாரதம் உன்னை என்றும் போற்றிடும் வண்ணம் என்னை வைத்திடும் கருணை வேண்டிக் கூவிடும் ஊனும் உயிரும் கூவிடும் இன்று வந்தே மாதரம் என்றும் வந்தே மாதரம் |
Announcements >