வல்லப கணபதி வீராஞ்சநேயர் பாமாலை

ஆனை ஆனை ஆனை ஆனை ஆ..னைமுகத்தா
ஆனை ஆனை ஆனை ஆனை ஆ..னைமுகத்தா (2)

வாயு குமாரனுமந்தா

ஹேகண-நாதா வீராஞ்சநேயா வேண்டும்வ..ரம்தா (2)

தந்தமுகத்தா பார்வதி-மைந்தா வேண்டும் வரம்-தா (2)

வாயு-குமாரனுமந்தா

ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா

ஆனை ஆனை ஆனை ஆனை ஆ..னைமுகத்தா

வாயு-குமாரனுமந்தா

ஹேகண நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா

விக்னவிநாசா மோதகப்ரிய வல்லப கணபதி ராயா

வாயு-குமாரனுமந்தா

ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா

ஆனை ஆனை ஆனை ஆனை ஆனைமுகத்தா (2)

வாயு குமாரனுமந்தா

ஹேகண-நாதா வீராஞ்சநேயா வே..ண்டும்வ..ரம்தா

ஜெய்ஜெய் கணேச ஜெய்ஜெய் ஸ்ரீராம(chorus) - Repeat

Different

ஹேவிக்..னநாசவி நாயகா ஹேராமசோகவி நாசகா (2)

காரியாதிசாதகா விக்னவிநாசா ராமதூதுவாஜெய் மாருதிராயா(2)

Different

ஹேவல்ல கணங்களின் நாயகனே  அனுமனே ராகவ தூதுவா(2)

அனுமனே ராகவ தூதுவா

தும்பி கணேசா மாருதி ராயா (chorus) – Repeat

ஹேவிக்..னநாசவி நாயகா ஹேராமசோகவி நாசகா (2)

ஆனை ஆனை ஆனை ஆனை ஆனைமுகத்தா

வாயு குமாரனுமந்தா

ஹேகண நாதா வீராஞ்சநேயா வேண்டும் வரம்தா

-------------------------------------------------------------------------------------------------------

வல்லப கணபதி வீரத்தின் மாருதி அருள்தரும் சந்நிதி இதோ இதோ

வல்லப கணபதி வீரத்தின் மாருதி

அருள்தரும் சந்நிதி இதோ இதோ

முத்துடை லட்சுமி நகரினில் ஓர்ஒளி

தந்திடும் அருள்நிதி இதோ இதோ

வல்லப கணபதி வீரத்தின் மாருதி

அருள்தரும் சந்நிதி இதோ இதோ

சீதா மாதா சோக விநாசா

மோதக-ப்ரியபவ விக்னவி..நாசா
எனப்பார் பணிந்திடும் அழகாய்அருள்தரும்

கலியுக வரதர்கள் இதோ இதோ

-------------------------------------------------------------------------------------------------------

வீரத்தின் மாருதி நமோநமோ வல்லப கணபதி நமோநமோ

வீரத்தின் மாருதி நமோநமோ வல்லப கணபதி நமோநமோ

பக்தியின்குணநிதி நமோநமோ புத்தியின்ப்ரதிநிதி நமோநமோ

சீதாசோக விநாசாநமோ விக்னவிநாசா நமோநமோ

ஸ்ரீராமதூதனின் பாதம்நமோ  மெய்ஞான யானையின் ரூபன்நமோ

ஔஷதமாருதி நமோநமோ கைவல்ய-கணபதி நமோநமோ

சூடாமணியே நமோநமோ தும்பிகணபதி நமோநமோ

வீரத்தின் மாருதி நமோநமோ வல்லப கணபதி நமோநமோ

-------------------------------------------------------------------------------------------------------

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்

வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்

சீர்மிகுந்த முத்துலக்ஷ்மி நகரில்நல்ல கோயில்

அவனியிலே புகழேந்தி வீதிதிகழ் கோயில்

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்

வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில் + (Music)

வந்ததுயரம் தனைப்போக்கிட கும்பிடவோர் கோயில்

சிந்தையிலே தினம்கொண்டிட அழகுதிகழும் கோயில்

ஓய்ந்தமனத்தில் உற்சாகம் தனைக்கொடுத்திடும் கோயில்

சாய்ந்தமுகத்தை நிமிர்த்திச்சிரிக்க அருள்தந்திடும் கோயில்+ (Music)

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்

வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்

ஆனைமுகன் தரிசனத்தைத் தந்தருளும் கோயில்

மாருதியின் அருள்மனத்தைப் பெற்றுத்தரும் கோயில்

குலம்கோத்ரம் பார்க்காது அருள்புரியும் கோயில்

பாதகத்தைப் போக்கிடுமே பக்தர்திரளும் கோயில் +  (Music)

கணபதியும் மாருதியும் குடியிருக்கும் கோயில்

வல்லமையும் வீரத்தையும் தந்திடுமே பாரில்

சீர்மிகுந்த முத்துலக்ஷ்மி நகரில்நல்ல கோயில்

அவனியிலே புகழேந்தி வீதிதிகழ் கோயில்

Comments