மிக அவசரம் / தனி கவனம் / 
இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
கீழ்க்குறிப்பிட்டுள்ள  பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்கப்படவில்லை. எனவே சார்ந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள் 28-09-2016 அன்று மதியம் 12.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அ3 பிரிவு எழுத்தரிம் நேரில் ஒப்படைக்குமாறு  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள் ( அம்மூர், கெஜல்நாயக்கன்பட்டி, மேல்சானாங்குப்பம், சின்னகம்மியம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், கணியம்பாடி, கசிநாயக்கன்பட்டி, காட்பாடி (ஆ), கொரட்டி, கும்மினிப்பேட்டை, மாதனுர், மட்றப்பள்ளி , மிட்டுர். மோசூர், நாகவேடு., நெமிலி ஆ , பசுமாத்துர். பேர்ணாம்பட்டு (ம), சலவன்பேட்டை, சத்துவாச்சாரி, சுந்தரம்பள்ளி, தக்கோலம் (ஆ), தாமரைப்பாக்கம், திரியாளம்) 
 


  26.09.2016 முதல் 29.09.2016 முடிய நடைபெறுவதாக இருந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

  காலாண்டுத்தேர்வு விடுமுறையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் திட்டமிட்டு நடத்திட அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

         காலாண்டுத்தேர்வில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி ஆண்டுத்தேர்வில் தேர்ச்சிபெறும் வண்ணம் முறையான பயிற்சி அளித்திட அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

          இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இவ்வலுவலகத்திற்கு தகவல் அளிக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர பணியிடத்தில்பணிபுரியும் இசை மற்றும் ஓவிய ஆசிரியர்கள் (பகுதிநேர ஆசிரியர்கள் தவிர்த்து) நாளை (23.09.2016) பிற்பகல் 2.00க்கு காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கலா உத்சவ் சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விவரம் சரிபார்த்தல் தொடர்பாக பள்ளி அளவுகோல் பதிவேடு மற்றும் 2016-17ஆண்டிற்கான  அளவுகோல் பதிவேட்டின் நகலினை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 26.09.2016 அன்று காலை 10.00 மணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்  சரிபார்ப்பு கூட்டத்திற்கு தனி நபர்  மூலம் வருகை புரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
5 YEARS LAPTOP DETAILS முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

[object HTMLDivElement]


  • சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
     (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

            பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களை நாளை 16.09.2016 அன்று காலை 9.30 மணி அளவில் காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

        CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST  • அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

வினாத்தாள் கட்டணம் மற்றும் செய்முறை பயிற்சி ஏடு கட்டணம் ஆகியவற்றை செலுத்தாத தலைமையாசிரியர்கள் 20.09.2016 அன்று நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தின்போது வினாத்தாள் கட்டணத்தினை தேர்வுக்குழு அமைப்பாளரிடம் (Conveenor) தவறாமல் செலுத்தும்படியும், செய்முறை பயிற்சி ஏட்டிற்கான கட்டணத்தை வேலூர் கல்வி மாவட்டத்திற்கு வேலூர், ஊரிசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடமும், திருப்பத்தூர் கல்வி மாவட்ட தலைமையாசிரியர்கள் லத்தேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடமும் தவறாமல் செலுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

=============================================================================================================