போலீஸ்

போலீஸ் - இது ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற ரவுடி கும்பல். (அனைத்து விதமான கழிசடைத்தனங்களும் தொழில்முறை ரீதியாக செய்து தரப்படும்)

உச்சிக்கு ஏறிய போதை; உடைகளை களைந்து
விட்டு ஆடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்


ஜூன்
 07, 2007  

சென்னை: குடித்த மது மண்டையைத் தாக்க, கோர்ட் வளாகத்தில் தாறுமாறாக டான்ஸ் ஆடி, ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அமர்க்களம் செய்த ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராஜகோபால். பணிக்கு வந்த அவர் கடும் குடிபோதையில் இருந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தவர்களைத் தாறுமாறாக திட்டினார். ஆபாசமாக பேசியபடி அங்கும் இங்கும் அலைந்தார். அவரின் போக்கை கோர்ட் ஊழியர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் கடுப்பான அவர் தாறுமாறாக டான்ஸ் ஆடியபடி ஆடைகளை அவிழ்த்து எறிந்தார். இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. விரைந்து வந்த போலீஸார், அவரை அங்கிருந்து அள்ளிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயினர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ராஜகோபால் மது போதையில் இருப்பதாக சான்றிதழ் கொடுத்தனர். பின்னர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.

ராஜகோபால் 'ஸ்டிரிப்-டீஸ்' ஆடுவது புதிதல்லவாம். இதற்கு முன்பும் இப்படி ஒரு ஆட்டம் போட்டு வார்னிங் பெற்றவர்தானாம்.