மலேசிய தமிழ்


  வருக வருக ....!!

மலேசிய தமிழ் பத்திரிக்கைகள்

- மலேசிய நண்பன்
- தமிழ் நேசன்
- தமிழ் மலர்
- மக்கள் குரல்

இங்கிலாந்து ஆட்சி காலத்தில் இந்தியாவின் தெற்கு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மலேசிய ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும், இரயில் பாதை அமைப்பதற்காகவும் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர்.  1870ம் ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையில் இந்த சரித்திரப்பூர்வமான நிகழ்வு நடந்தது. தமிழர்கள் தவிர்த்து, தெலுங்கர்களும் மலையாளிகளும், பஞ்சாபியர்களும் சீக்கியர்களும் மலேசியாவிற்கு தொழில் நிமித்தம் கொண்டுவரப்பட்டனர்.

மலேசிய சுத்தந்திரத்திற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட பற்பல மாற்ற்ங்களினாலும், வளர்ச்சியினாலும் தமிரழ் மக்களின் வாழ்க்கைத் தரமும் சமுதாயத்தரமும் உயர்ந்துள்ளது.  மலேசியாவில் தமிழ் பள்ளிகள் இன்றளவும் இயங்கி வருகின்றன. ஆரம்பக்கல்வியை தமிழில் ஆரம்பிக்க இத்தகைய பள்ளிகள் வழிவகுக்கின்றன.

மலேசியாவில் இந்தியர்கள் வழிபாட்டிற்க்காக நாடு முழுவதும் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் தைப்பூசம் என்பது மிகவும் விமரிசையாக நடைபெறும் ஒரு விழா. அரசாங்க விடுமுறையோடு இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயனிகளும் கண்டு களிக்கும் தேசிய விழாவாக தைப்பூசம் அமைந்துள்ளது.

Sign in  |  Recent Site Activity  |  Terms  |  Report Abuse  |  Print page  |  Powered by Google Sites