*அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன, உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன. .
*உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
*ஆடம்பரமற்ற உடையில் சோம்பல் முறித்துக்
கொண்டு உன் அம்மாவிடம் பேசிக்
கொண்டிருப்பதை - உன் வீட்டு ஜன்னல்
கட்டியதெனக்கு.
*சோம்பல் முறிக்கையில் எவ்வளவு
அற்புதமாய் இருக்கிறாய் நீ. அம்மாவிடம்
பேசிக்கொண்டிருக்கையில் எவ்வளவு
அழகாய் இருக்கிறாய் நீ. அதைவிட
என்னிடம்பேசிக் கொண்டிருக்கையில்
இன்னும் எவ்வளவு அழகாய் இருப்பாய் நீ.
*அந்தக் காலையில் திரும்பிக்கூடப்
பார்க்காமல்தான் என் வாசலைக் கடந்து
போனாய் நீ. அதனாலென்ன... வாசலுக்குள்
வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனதே
உன் நிழல்
*நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயொ என்னை விட்டு விட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாயே
*எல்லோரையும் பர்க்க ஒரு பர்வையென்றும்
என்னை பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்.
*நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்
*என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை
*சூரியனை ஒரு முறைகூட முழுசாகப்
பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன்
என்பதில் எப்போதும் சந்தேகம்
வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.ஆனால் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீ தானா நீ
என்கிற சந்தேகம் மட்டும் வந்து
கொண்டேதான் இருக்கிறது
*''நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தை பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானெ உன்
கண்கள்
உன்னை இருட்டில் நிற்க வைத்து என்
சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள
வேண்டும்.வெளிச்சம் என்பது
உன்னிடமிருந்துதான் வீசிக்
கொண்டிருக்கிறதா. ஆனால் உன்னை
அருகில் வைத்துக்கொண்டு இருட்டை நான்
எங்கு தேடுவேன்
*
*என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது உன் மெளனம்.
ஆனால் உன்னைக் காதலிக்க
ஆரம்பித்தபோதே பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது மனசு. எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை.
**இந்தப் பரந்த புள்வெளியில் நடக்கவிட்டு
உன்னை வேடிக்கை பார்க்கலாம்.
பூக்களிடையே நிற்கவைத்து
அழகு பார்க்கலாம். வேறு என்ன
செய்யமுடியும் உன்னை!
**சும்மா ஒரு முறை தொட்டுப்
பார்க்கலாமென்றால் முதலில் உன்னை
நெருங்க முடியுமா என்பதே எனக்குத்
தெரியவில்லை. உன்னை வட்டமிட்டுக்
கொண்டிருக்கிற அழகில் ... பூக்களாலும்
குழந்தைகளாலும் மட்டுமே உன்னைத் தொட
முடிகிறது. அவற்றிற்கு மட்டுமே உன்னைத்
தொட்ட பிறகும் பழைய மாதிரியே இருக்கத்
தெரிகிறது. ஆனாலும் இவ்வளவு அழகாகவா
இருப்பாய் நீ?
*இவை இப்படித்தான் என்று நான்
நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி
விடுகிறாய். உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான் என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை பொய்யாக்கிவிடுகிறதே.
*Â*நீ தொடுகிற பூக்களையெல்லாம் என்னால்
தொட முடிந்ததே இல்லை. நீ தொட்டது
எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா. உன்
விரல்களைத்தான் பூக்கள் அப்படியே
வைத்திருக்கின்றனவே.
**நான் காதலிக்க ஆரம்பித்த பின்னும் மிகச்
சாதாரணமானவனாகவே இருக்கிறேன்.
கற்றுக்கொள்ளாமலேயே உனக்கொரு உடை
தைத்துக் கொடுக்கவாவது எனக்குத்
தெரிந்திருக்க வேண்டும். என் முத்தங்களைப்
பூக்களாக்கி உன் கூந்தலில் சூடிவிடவாவது
தெரிந்திருக்க வேண்டும்.
என்னைக் கிளறும் உன் விழிகளை
என் இமைகள் கொண்டு
மூடவாவது தெரிந்திருக்க வேண்டும். இதில்
எதுவுமே எனக்குத் தெரியாத போது காதலிக்க
ஆரம்பித்து என்ன பயன். நான்
காதலிக்கிறேன் என்பதை அதுவும்
உன்னைக் காதலிக்கிறேன் என்பதை எப்படி
நம்புவது.
**உனக்குக் கடிதம் எழுதுவதற்கென்றே ஒரு
இடம் வைத்திருக்கிறேன். என்னைப் பார்க்க
நீ இங்கு வந்தபோது, முதல் முறையாய் என்
தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாயே அந்த
ஆற்றோர மணற்பரப்புதான் அது. இங்கிருந்து
நீ விடை பெறுகையில் பஸ் ஜன்னலில்
முகம் காட்டி, கை அசைத்துப் போனதையே
தினம் நினைவுபடுத்தி மறையும் சூரியன் ...
இதோ இன்றும் மறைந்துவிட்டது. ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது வெளிச்சம் ... என்
தோளில் மிச்சமிருக்கிற நீ சாய்ந்திருந்த
சுமை மாதிரி.
**ஐந்து மணிக்கு வருவதாய் நீ
சொன்னதிலிருந்து ஐந்து மணிக்காகக்
காத்திருந்தேன். ஐந்து மணி வந்ததும்
உனக்காகக் காத்திருந்தேன். நான் காதலிக்க
ஆரம்பித்திருக்கிறேனா ... காத்திருக்க
ஆரம்பித்திருக்கிறேனா.
*நீ என்னைக் காதலிக்கிறாயா என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் ... தெரியாத்தனமாக
நீ அணிந்திருந்த உடையின் வண்ணத்தில்
என் சட்டையின் வண்ணம் இருந்ததைக்
கவனித்த என் அயோக்கிய நண்பன் ஒருவன்
'டேய் என்ன இரண்டு பேரும் ஒரே கலரில்...'
கிண்டல் செய்துவிட அப்போதே அவனைத்
திட்டினேன் ... அவ்வளவு மகிழ்ச்சியாய்த்
திட்டமுடியுமா என்கிற ஆச்சர்யத்துடன்.
**அதன்பிறகு அந்தச் சட்டையைப் போடவே
கூச்சமாய்ப் போய் பெட்டியில் ஒளித்து
வைத்துவிட்டேன் ... என்று நான் இப்போது
சொல்லிக்கொண்டிருக்கையில் நீ முகத்தை
மூடிக்கொண்டாய். ஏன் என்று கேட்டதற்கு
நானும் அப்படித்தான் ஒளித்து வைத்துக்
கொண்டேன்' என்கிறாய்.
**நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது
நீதானா? தொடப் போனால்
சிணுங்குவதில்லையே ... நீயா? முத்தம்
கேட்டால் வெட்கம் தருவதில்லையே ...
நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில்
சாய்வதில்லையே ... நீயா? எவ்வளவு
அருகிலிருந்தும் அந்த வாசனையில்லையே ...
நீயா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்.
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது.
* *நீ முத்தமிட்டுவிட்ட கையை
வைத்துக்கொண்டு ரொம்பவும்
அவஸ்தைப்படுகிறேன். எதையுமே தொட
மறுக்கிறது கை. 'அப்படியே புதுசாக
வைத்துக்கொள்; சின்னக் குழந்தை தன்
கைக்குள் பத்திரமாய் பதுங்க வைத்துக்
கொள்கிற மிட்டாய் மாதிரி என்னையும்
வைத்துக்கொள் ..' என்கிறது அந்தக் கை.
*அழகான சின்னக் கோயில். வந்து நின்று
திரும்பிப் பார்க்கையில் ... அருகில் நீ.
இவ்வளவு அருகில் தனக்குப் பிடித்தவன்
தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்ட நீ, தாங்கிக்கொள்ள முடியாமல்
உன் வெட்கத்தையெல்லாம் என்மீது
வீசியெறிந்தாய். "அய்யோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற ... எட்டி நில்' என்று.
ஆனால் நான் நகர்ந்தால்" ஏய் பக்கத்திலேயே
இரு' என்று என் கையைப் பிடித்து
இழுக்கவும் செய்யும் உன் வெட்கம்.
*ஆனாலும் விதவிதமாய் வெட்கப்படுகிறாய் நீ.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உன்னைப்
பார்க்க வருகிறேன். "இப்போது எப்படி
வளர்ந்திருப்பாயோ' என்கிற ஆசையோடு
வந்து உன்னைப் பார்க்கையில் ... என்ன
அதிசயம் ... நீ அப்படியே இருந்தாய்! எப்படி
என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு 'நீ என்
அருகில் இல்லாதபோதும் உனக்காகக்
காத்திருக்கும்போதும் எனக்கேது வளர்ச்சி?'
என்கிறாய் புன்னகையோடு.
*நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே ... வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
*ஒரு கார்த்திகை இரவில்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ... உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.
*நீ விளக்கேற்றினாய். விளக்கு உன் முகத்தை
ஏற்றியது.
*உன் கண்களின் பார்வையிலிருந்து ...
விரல்களின் அசைவிலிருந்து ... கொலுசின்
ஓசையிலிருந்து தான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்.
*நீ என் கைகளுக்குள் இருக்கையில்
எனக்கொரு அழகான சந்தேகம் வந்தது.
எவ்வளவு பெரிய பெண் நீ ... இப்படி எடை
இல்லாமல் இருக்கிறாயே! பார் ...
காதலுக்குள்ளும் காதலிக்குள்ளும்
என்னவெல்லாம் புதைந்து கிடக்கின்றன!
*கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது.
*முதல் முறையாக ஒரு முறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது ... ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
*நீ தூங்குகிறாய் ... எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில்
கூட எனக்காக விழித்திருக்கிறது உன்
அழகிய காதல்.
*சொல்லாமல் வந்துவிடுகிற மழையில்
நனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்
சாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு
அலம்பிய என் கையை உன்
சிணுங்கலுக்கிடையே துடைத்துக்
கொள்ளவும்தான் இந்தச் சேலைத் தலைப்பு
இவ்வளவு நீளமாய் இருக்கிறதா?
*உன் மார்புகளுக்கு நடுவே படுத்துக்கொள்கிற
மாதிரி என்னை எப்படியாவது சின்னவனாய்
ஆக்கிவிடேன்.
*நீ அழு ... சோகம் தாங்காமலோ
வலியினாலோ அல்ல. சந்தோஷம் தாங்க
முடியாமல். ஆனால் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர்த்துளியும் என் மேல்தான் விழ
வேண்டும்.
*செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்.
*உன்மேல் கோபப்படுகிறபோதெல்லாம் ...
கொஞ்ச நேரங்கழித்து ... ஏன் கோபித்தோம்
என்றிருக்கும். அப்போதெல்லாம் உன்
மேலிருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும்.
ஆனால் நீயோ ... இனிமே கோபம் வருகிற
மாதிரி எந்தத் தப்பும் செய்யமாட்டேன்
என்பாய். இல்லையில்லை ... தவறுகள்
செய்துகொண்டே இரு. அன்பு
அதிகரித்துக்கொண்டே இருக்கட்டும்.
அழகாய் நீ சிரிக்கிற முகத்தை விட ...
கண்ணீர் மிதக்கும் உன் முகத்தை ஒரு முறை
பார்த்தது மறக்கவே இல்லை எனக்கு.
அதைவிட அழகாய் நீ எப்போதும்
இருந்ததில்லை. ஆனால் இப்போது
இருக்கிறாய். என் விரலில் ஏற்பட்ட
காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டு.
*ஒரு நாளாவது கதவைத் தட்டிவிட்டு
உனக்காக காத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். ஆனால் நீயோ நான்
தெருவில் வரும்போதே வாசலில் நின்று
எனக்காக உன் கண்களை நீட்டுகிறாய்.
*ஒரு நாளாவது யார் என்று கேள்விக்குறியுடன்
கதவு திறந்து எட்டிப் பார்க்கும் உன்
முகத்தினைப் பார்த்துவிடவேண்டும் என்கிற
ஆசையை நீ நிறைவேற்றி வைக்கப்
போவதில்லை போல ... என்ன காதல்
மனைவி நீ?
*உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும்
நான் தொட்டுவிடாமல் இருக்க ஒரு
வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறாய் நீ.
*நான்உன்னைத் தொடுகையில், எப்படியோ
என் விரல்களில் உன் அங்கங்களை ஒட்ட
விடுகிறாய்.
*வேறு பெண்கள்பற்றிய எண்ணம் எதுவும்
எனக்கு இல்லையெனினும் உன்
மார்ப்புகளைச் சுமந்திருக்கும் என் கைகளால்
எப்படித் தொட முடியும் இன்னொரு
பெண்ணை!
*உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது. வாழ்க்கையையும் கூட.
நாம் இருவரும் பார்வையில் பழக ஆரம்பித்த
நாட்களில் ... என்னையே பார்த்துக்
கொண்டிருப்பதை நான் பார்த்துவிட்டால் ...
நான் ஒன்றும் உன்னைப் பா¡க்கவில்லையே
... என்று கலங்கரை விளக்கு மாதிரி
முகத்தைத் திருப்பிக் கொள்வாய். ஆனால்
உன்னையே நான் பார்த்துக்கொண்டிருப்பதை
நீ பார்த்துவிட்டால் ... ஐயோ பாத்துட்டானே ...
என்கிற பதைப்பில் சட்டென்று திரும்புகிற
போதே கொட்டிவிடுகிறது காதலெல்லாம்.
*சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன். ஆனால். அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை. வேறு
ஏதாவது இருக்கும் என்பது கூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை.
*இன்று மாலை ... பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ என் கையைப் பிடித்துவிட்ட
போது ... உன் கைக்குள் இருக்கும் என்
பெண்மையிலும் ... வேண்டாம் இருக்கட்டும் ...
என்கிற காதலிலும் மாறி மாறித் தவித்த
தவிப்பில் ... அப்பா! வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.
*அதைப் பற்றி இந்த இரவில் இப்படித்
தனிமையில் அசைபோடுகிறபோது ... எனக்கு
எதற்காக மார்புகள் வளர்ந்திருக்கின்றன
என்பது புரிந்துவிட்டது. நீ மட்டும் இப்போது
என் அருகில் இருந்திருந்தால், நீ என்
கையைப் பிடித்ததற்கும் உன் கையை
விட்டுவிட்டு நான் ஓடிவந்ததற்கும் சேர்த்து,
உன்னை இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ...
'களுக்' என்கிற வெட்கச் சிரிப்புடன் உன்
மார்பில் புதைந்துகொண்டிருப்பேன்.
*உன்னிடம் எந்தக் கெட்டப் பழக்கமும்
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது. நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட
இல்லையே உன்னிடம்.
*சின்ன வயதில் ... தோல்வியை
விரும்பியதில்லை. போட்டிகளை
விரும்பினேன். இப்போது போட்டிகளை
விரும்புவதில்லை. ஆனால் தோல்விகளை
விரும்புகிறேன். அதுவும் உன்னிடம் மட்டும்
தோற்பதில் இவ்வளவு ஆனந்தம் இருக்கிறது
என்பதை உணர்த்தியவன் நீதான்.
*என் தோல்வியை விட என்னைத்
தோற்கடித்தவன்தான் என்னை நேசிப்பவன்
என்பதை நினைக்கையில் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கிறது.
*நாம் இருவரும் தனியாய் இருக்கையில் ...
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்துவிடுகின்றன!
*அன்றொரு நாள் நீ என் கையைப்
பிடித்தபோது உடைந்த வளையலை உடைந்த
மாதிரியே இன்னும் வைத்திருக்கிறேன்.
ஆனால் சற்றுமுன் நீ என்னைக்
கட்டிப்பிடித்தபோது கசங்கிய சேலையைக்
கசங்கியபடியே வைத்திருக்க முடியவில்லை.
உன் காதல் பற்றி எதுவும் தெரியாத இந்தச்
சேலையை வைத்துக்கொண்டு என்ன
செய்வது?
*என்ன வேதனை ... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது.
*உனக்கேன் இந்த மாதிரிஆசையெல்லாம்
வருகிறது? என் வளையலை உடைப்பது ...
கொலுசத் திருகாணியைக் கழற்றி விடுவது ...
கூந்தலில் இருக்கும் பூவைப் பறித்து உன்
கன்னத்தில் உரசிக் கொள்வது ... காதில்
தொங்கும் ஜிமிக்கியை ஆடவிட்டு
வேடிக்கை பார்ப்பது ...
*ஆனால் ஒன்று ... சின்ன வயதிலிருந்து ...
இந்தத் தோடு ... வளையல் ... பூ ... கொலுசு ...
இதெல்லாம் எதற்காக அணிந்துகொள்ள
வேண்டும் ... என்று யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறது எனக்கு.
*உன் காதலியாய் இருந்தவரையில் ... நான்
உடலால் ஆனவளாகத்தான் இருந்தேன். உன்
மனைவியாக ஆனபின்னே ... உன்
விரல்களால் ஆனவளாக ஆகிவிட்டேன்.
Âஇன்று நான் தரையில் படுக்கப் போகிறேன்.
வெறும் தரையிலா?
அப்போ ... உன் சேலையைக் கொடு.
கட்டியிருக்கேனே.
கொடுத்துட்டு ... என்னைக்கட்டிக்க.
ம் ... சேலை மாதிரி நீயும் சும்மா இருந்தா
தினம் கட்டிப்பேன். சேலை மாதிரி நானும் சும்மா இருக்கணுமா?
வேண்டாம்.
*உனக்கு நான் விளையாட்டுப் பொருளாகி
விட்டேன். ஒரு விடுமுறை நாளில் ... நான்
குளித்து முடித்து சேலை மாற்றுகையில் ...
வந்து வம்பு செய்து ... நான் கட்டிவிடுகிறேன்...
என்றாய் ... உன்னிடமா தப்ப முடியும். ம் ம் ...
என்றேன். கற்றுக்கொடு என்றாய்.
இவ்வளவு ஆர்வமாகவும் ... இவ்வளவு
மெதுவாகவும் நீ கற்றுக்கொண்டது
இதுவாகத்தான் இருக்கும். நீ
கட்டி முடிப்பதற்குள் ... ஏய் உதைக்கணும்
உன்னை; சேலையைக்
கண்டுபிடித்தவனையும்.
*உறக்கத்திலிருந்து சட்டென்று விழிப்பு வந்து
பார்த்தபோது ... அருகில் அமர்ந்து
என்னையே பார்த்துக்கெண்டிருந்தாய் நீ.
அப்புறம் விழிப்பு வராதா என்ன.
*இரவில் நீ து¡ங்கிக்கொண்டிருப்பதை பார்க்க
வேண்டும் என்பதற்காகவே ஒரு விளக்கு
வாங்கி வந்திருக்கிறேன் ... என்று ஒரு நாள்
விளக்கொன்றை என் கையில் கொடுத்தாய்.
ச்சீ .. அதைப் பிடித்துக்கொண்டிருக்கவே
வெட்கமாய் இருந்ததெனக்கு.
*நீ இல்லாத பகல் நேரங்களில் ... அந்த
விளக்கை எடுத்து வைத்துக்கொண்டு தினம்
என் புடவைத் தலைப்பால் துடைத்துக்
கொண்டிருப்பேன் ... இந்த அறையின்
சுவர்களில் கூட து¡சு படிந்துவிடாத போது
இந்த விளக்கில் மட்டும் எப்படி து¡சு படியும் ...
என்கிற கேள்வியுடன்.
*நான் உன் மடியில் படுத்துக்கொள்கிற
நேரங்களை விட ... உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காகவே நான் வாழ்கிறேன். நீ
இருக்கும்போது சுமைகளற்று இருக்கும் என்
மடியும் மார்பும் நீ எழுந்து போனபின்
கனமாகிப் போகிறது.
*"என் உதடுகளைக் காணவில்லை. உனக்கு
முத்தமிடுகையில்தான் தொலைந்திருக்க
வேண்டும். தேடிப் பிடித்துத் திருப்பிக்
கொடுத்துவிடு" என்கிறாய். உன்னிடம்
திருப்பிக் கொடுத்தால் மட்டும் என்ன ...
மீண்டும் என்னில் எங்காவது
தொலைக்கக்தானே போகிறாய்.
*ஒரு நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்து
பின் வாசல் திறந்து தோட்டத்தில்
புல்தரையில் அமர்ந்தாய். பனி கொட்டியது.
ஓடிப் போய் ஒரு போர்வை எடுத்து வந்து
உள் அருகில் அமர்ந்தேன். ஈரம் ஏந்திய
நிலா வெளிச்சம். ரொம்ப குளிர்.
*போர்வையை உன் தலையில் போர்த்த
முயல்கையில் அதை வாங்கி து¡ர வைத்தாய்.
உன் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி ...
இப்படி பனியில் நனைந்தால் உடம்பு என்ன
ஆகும் ... என்றேன். அதற்குத்தான் நீ
இருக்கிறாயே ... என்றாய். உனக்கொரு
முத்தம் கொடுத்துவிட்டு உன் மடியில்
படுத்துக் கொண்டேன்.
*உடம்புக்கு ஆகாது ... என்று
அம்மா சொல்லிய நேரங்களையெல்லாம்
நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
மீண்டும் உன் தலையில் கை வைத்துப்
பார்த்தேன். ஈரம் போர்வை எடுத்த நீண்ட
என் கையைத் தடுத்தாய். ரொம்ப
ஈரமாயிடுச்சு ... என்ற என்னிடம் எதுவும்
பேசாமல் உன் மடியில் கிடக்கும் என்
நெஞ்சில் விரல் நீட்டினாய். அய்யோ ...
இப்படித்தான் சுளீர் சுளீ¡ என்று அடிக்கிறாய்
இந்த சில நாட்களாய். உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன். வெட்கத்துடன் என்
மார்புச் சேலையை எடுத்து உன் தலையில்
போர்த்திவிட்டேன். அப்படியே என்னை
இழுத்து அனைத்துக் கொள்கிறாய். என்ன
செய்வேன் நான். அதிகமாய்ப் போனால்
அழலாம். அவ்வளவுதான்.
*என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.