முகப்பு

 
வணக்கம்.

 

என்னுடைய ஆங்கில இணையதளம், என்னுடைய ஆங்கில வலைப்பூ, என்னுடைய தமிழ் வலைப்பூ என்னுடைய கவிதை தொகுப்பு பல நாட்களாகவே தமிழ் மொழியில் என் வலைதளத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கான வேளையும் ஞானமும் இப்போது தான் வந்திருக்கிறது. வேளை வந்தது எப்படியென்றால் உடல் நலம் சரியில்லாமல் நான்கு நாட்கள் வீட்டில் இருக்கும்படியானது. ஞானம் வந்தது என்றால் தமிழில் தட்டெழுத்து செய்யும் ஞானம். பல நாட்களுக்கு முன்பாகவே ஒரு சமயம் வெளிநாட்டில் இருந்தபோது அம்மாவுக்கு தமிழில் கடிதம் மின் அஞ்சல் மூலம் எழுதி அனுப்பவேண்டும் என்று இணையத்தில் தமிழ் மொழியில் தட்டெழுத்து படிப்பிக்கும் மென்பொருள் உள்ளதா என்று தேடினேன். தமிழ் ஸாப்ஃட் என்ற நிறுவனம் தமிழ் மொழியில் உரை பதிப்பி மென்பொருள் மற்றும் தட்டெழுத்து மென்பொருள் இலவசமாக வெளியிட்டு நம் போல் தமிழ் ஆவலர்களுக்கு பெரும் சேவை செய்திருந்தது. ஆனால் கடிதம் மட்டுமே எழதிவிட்டு விட்டு விட்டேன். நான் பல கதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதுவேன். எதையும் பதிப்புக்கு அனுப்ப முயன்றதில்லை. சில புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுக்கு அனுப்புவதற்காக என் கவிதைகளை உரை பதிப்பியில் ஏற்றினேன்.

அப்போதுதான் சரளமாக தமிழில் தட்டெழுத கற்றுக் கொண்டேன். பிறகு இந்த முழு தமிழ் வலைதள முயற்சி.

அதன் பிறகு தான் யூனிகோட் கற்றதும் தமிழ் மன்றங்களில் பங்களித்ததும் இந்த மம்போ தளம் துவக்கியதும். இதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ஒரு வரியில் எழுதி அனுப்பினால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.

நன்றி

இங்ஙணம்,

மோகன் கிருட்டிணமூர்த்தி