புதிய கட்டுரைகள் - 2008

December 2008:

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் - Messiah the PeaceMaker

சொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise

இருளை ஒளியாக்குதல் - Lighting Up The Darkness  

ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? (What Does Christ Offer to a Muslim?)

தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்? (How does God reveal Himself?)

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)

 
 
 
 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையேயான 133 ஒற்றுமைகள் 
 
 
November 2008
 
 
 
 

 

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம் (An open letter to Muslims in the U.S.)

 
 
 
 
 
Date:09/10/2008

 
 
 
 
 

எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில் : பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா? - new date: 15th Sept 2008

 
முன்னுரை:இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், கீழ் கண்ட ஒரு விவரத்தை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்று ஒரு கட்டுரையை நம் தமிழ் முஸ்லீம்கள் வெளியிட்டு இருந்தார்கள். அதாவது பைபிள் என்ற பெயர் பைபிளில் இல்லை என்று இவர் சொல்லியுள்ளார். ஆனால், இது சரியான தகவலா? அல்லது இது ஒரு பொய்யா? இதை அலசுகிறது இந்தக் கட்டுரை. அதுமட்டுமல்ல, பைபிள் என்ற வார்த்தை குர்‍ஆனில் இருக்குமானால் எப்படி இருக்கும்? மேலும் அறிய படியுங்கள்.

 
 
 

பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN) - new date: 4th Sept 2008

 
தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:
 
முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
 
பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
 
கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.

 

முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess) - new date: 2nd Sep 2008

 
பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.
...
...
முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன் வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது" என்பதெல்லாம் ஒரு புத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா! உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா?

 
 
 
 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7) - new date: 26th July 2008

 
 
குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2க்கு இஸ்லாம் கல்வியின் மறுப்பு மற்றும் ஈசா குர்‍ஆனின் பதில் - 9th Aug 2008
குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்

 
 
 
 
 
 
 
 
 

நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)

 
முன்னுரை: நான் "சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! " என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். இக்கட்டுரைக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரர் RAJ பதில் அளித்து இருந்தார், அதாவது, இவர் தன்னை கிறிஸ்தவர் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் அளித்து இருந்தார். ஆனால், இவரது வரிகள் இவர் ஒரு முஸ்லீம் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. இனி இவரது பின்னூட்டத்தையும், அதற்கு என்னுடைய பதிலையும் காணலாம்.

 
 
அல்லாவின் வேதங்களை மண்ணுக்கு சமமான மனிதர்கள் திருத்தவேண்டுமானால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும்.
 
முதலாவதாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாவை விட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் அல்லாவே இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்தமுடியும். ஒரு பலவானை கட்டி அவனை செயலிழக்க செய்யாமல் எப்படி ஒரு பலவினமானவன் அந்த பலவானுடைய வீட்டில் உள்ள பொருளை திருடமுடியும்?
 
இரண்டாவதாக‌, மனிதர்கள் தன் வேதத்தை திருத்த தானே அனுமதி அளித்து இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், குர்‍ஆனை எப்படி அல்லா பாதுகாத்தாரோ அப்படி முந்தைய வேதங்களை அல்லா பாதுகாக்கவில்லை.
 

அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs)

 
இன்று கிறிஸ்தவம் என்ற வார்த்தை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களில் சிந்திக்கப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் வேறுபட்ட பல வண்ணமான எண்ணங்களையும் சிந்தனைகளையும் உருவாக்குகிறது. சிலருக்கு இது சிலுவைப்போர் (Crusades, the Spanish Inquisition) அல்லது சலிம் விட்ச் ட்ரையல் (Salem Witch trials) என்ற "மந்திரவாதிகளின் மிது வழக்கு" போன்ற சரித்திர நிகழ்வுகளை நினைவு படுத்துகின்றது. சிலருக்கு தேவாலயம், ஆராதனை மற்றும் பரலோகம் செல்லுதல் போன்ற காரியங்களை நினைவு படுத்துகின்றது. மேலும் சிலருக்கு தாங்கள் தொலைக் காட்சியில் காணும் தேவ ஊழியர்களைப் பற்றிய பரபரப்பான அவதூறு செய்திகள் நினைவுக்கு வரலாம். எவ்வாறாயினும், கிறிஸ்த்துவம் பற்றிய நமது கருத்து, நமது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவாகும்.

 

கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது? (அமெரிக்கர்=கிறிஸ்தவர்?)

 
உங்கள் மனதின் சிந்தனையை கிளறி, சிந்திக்க‌த் தூண்டும் சில‌ வரிக‌ளை நான் சொல்ல‌ட்டும்.
 
எல்லா யூதர்களும் பணக்காரர்கள்
 
எல்லா கருப்பின மக்களும் நல்ல விளையாட்டு வீரர்கள்
 
எல்லா பிரன்சுக்காரர்களும் க‌ரடுமுரடானவர்கள்
 
எல்லா மெக்ஸிக்கோகாரர்களும் சோம்பலானவர்கள்
 
எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள்

 

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!
முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

 

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌ (கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்) முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

 
கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)
 
பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் “Radiallah tala anho” (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.
 
இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

 
 
தமிழ் கிறிஸ்தவர்களின் முன்னுரை: தமிழ் முஸ்லீம்கள் கடந்த சில மாதங்களாக பைபிளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் முக்கியமானது:
 
பைபிள் நபிகளை(தீர்க்கதரிசிகளை)ப் பற்றி தரம் குறைவாக விவரிக்கிறது என்ற குற்றச்சாட்டாகும்.
 
முக்கியமாக தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்ட நிகழ்ச்சி தவறானது, இப்படி அவர் செய்யவில்லை. பைபிள் தவறாக இப்படிச் சொல்கிறது. அல்லாவின் நபிகள் இப்படி அநியாயமாக ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு கொலை எல்லாம் செய்யமாட்டார்கள் என்று பலவாறு குற்றம் சாட்டுகிறார்கள்.
 
உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.
 
ஆனால்:
 
1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,
2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,
3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,
4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்
 
குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
 

நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
 
"Does Goodness Lives In You" By Roy Oksnevad
 
ந‌ற்ப‌ண்புமிக்க வாழ்வினை வாழ முய‌ல்வ‌து ஓர் முடிவ‌ற்ற சோர்வுமிக்க பணியாகும். இப்பணியில் ந‌ம‌து த‌வ‌றான போக்குக‌ளை க‌ட்டுக்குள் வைத்திருக்க மிக‌வும் பாடுப‌ட‌ வேண்டியுள்ள‌து.அதே ச‌மயத்தில் நற்செய‌ல்களைச் செய்யவும் வேண்டியுள்ளது. இது நம் முழு கவனத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிற‌து. மேலும் நாம் ஒரு நடுநிலையான உலகில் வசிக்கவில்லை. இவ்வுலகில் நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களும்,தேவைகளும், பரபரப்புகளும் உண்டு. இவை நம்மில் மிஞ்சும் சக்தியையும் உறிஞ்சி நாம் அறிந்தவரை உள்ள நல்வாழ்க்கையினையும் வாழ முடியாதபடி செய்து விடுகின்றன‌. நமது இப்போராட்டத்தினை தேவன் அறிவாரா? நமது பலவீனத்தை அவர் கவனியாமல் இருப்பாரா? அல்லது அவர் நாம் நல்லது என‌க்கருதும் செயல்களைச் செய்யும் ஆற்றலுடன் கூடிய ஒரு வித்தியாசனமான‌ வாழ்க்கையினை வாழும் அனுபவத்தை பெற வேண்டும் என விரும்புகிறாரா?

 

 

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1 - New 13/05/2008
 
இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான்! இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்‍ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும். அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்‍ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.
 
இது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்‍ஆனில் இருப்பதால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

 

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம் - New 11/05/2008
 
 
 
 
கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

 

Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி? - New 22/04/2008
 
இந்த நிலையில் "இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே"! நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்?
 
1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா? அல்லது
 
2. இவனுக்கு இஸ்லாமைப்பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா? அல்லது
 
3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகியா?
 
இந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன்.

 
 

மாற்கு 16ன் சவால் - The Challenge of Mark 16 - New 14/04/2008
 
இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.
 
தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.
 
இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

 

ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌ (ஒரே கட்டுரையில் கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் சூட்டிய புகழாரங்கள்:) - New 14/04/2008
 
இந்த மேலே உள்ள எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும், நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம், உங்களை திட்டுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? எங்களுக்கு வழி காட்டியவர் சென்று வந்த பாதையில் தான் நாங்களும் செல்கிறோம். நீங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரை பின்பற்றுகிறீர்கள். இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்பது உண்மையாக இருக்குமானால் , இப்படி எல்லாம் நீங்கள் எழுதமாட்டீர்கள்.

 

19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை (19 Reasons why many Honorable People Don’t Want to Be Muslims) - New 08/04/2008
 
மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

 

உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood ) - New 01/04/2008
 
முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.

 
 
 

 
 

கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? - New 24/03/2008 முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:
 
இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
 
பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....

 

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா? - New 24/03/2008
 
இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.
 
இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?
 
1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்
 
2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்.
 
[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]
 
நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.
 
 

 

Answering IslamKalvi: இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும் - New 17/03/2008
 
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:
 
நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

 

ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? - New 10/03/2008 "இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் (எனக்கு தெரிந்த மட்டில்) புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.
 
சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக "கிறிஸ்தவர்களிலிருந்தே" பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.

 

Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?
 
இஸ்லாம் கல்விக்கு(எம்.எம். அக்பர் அவர்களுக்கு) ஈஸா குர்‍ஆன் மறுப்பு
- New 06/03/2008 என்ன கேள்வி இது? மக்காவில் உள்ள காபாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாட்டிலும் சரி, கள்ள வியாபாரம், அநியாய வியாபாரத்தை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது உண்மை தான் இதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

 
காபாவில் ஹஜ் சமயத்தில் கீழ் கண்டவாறு கள்ள(அநியாய) வியாபாரம் நடந்தால்?

 

சுவர்னதென்றலுக்கு பதில்: பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை - New 3/03/2008 "சுவர்ன தென்றல்" என்ற தளம் "சத்தியத் தொடர் -‍ 1" என்ற கட்டுரையில் "பைபிளில் முகமது பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்" உள்ளன, அவைகளை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பார்க்க தவறுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. பைபிளிலிருந்து சில வசனங்களை குறிப்பிட்டு இந்த வசனங்களில் குறிப்பிட்டு இருப்பது "முகமதுவைத் தான்" என்று சுவர்ன தென்றல் தளம் சொல்கிறது. ஏற்கனவே, ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதைப் பற்றி நான் சில பதில்களை கொடுத்துள்ளேன், அவைகளை "சுவர்ன தென்றலுக்கு" என் பதிலாக முன்வைக்கின்றேன்.

 

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா? - New 20/02/2008 ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.
 
இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.

 

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"- Part 2 - New 15/02/2008 இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

 

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) - New 01/02/2008
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)

 
 
முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?
 
இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

 

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - New 28/01/2008 பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

 

 

Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ? - New 23/01/2008
இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள்.

 
 
 
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும், ஆசிரியர்: சாமுவேல் கிரீன்
 
முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.

 

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - New 09/01/2008
பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (Samuel Green)

 
ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2 - New 28-12-2007
 
அற்புதம் நிகழ்த்தியது எப்படி?
 
பிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.
 
மத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி கீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.
 
1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.
 
2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.

138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி - New 26-12-2007
 
கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், "முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்".
 
In my very early response to this “Document”, I requested these 138 Muslim scholars to “Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the “Common Words”.

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1 - New 18-12-2007
பன்மை (Plural) எப்படி பிஜே அவர்களுக்கு ஒருமையாக (Singular) தென்பட்டது?
 
1. பிஜே அவர்களே சரியாகச் சொல்லுங்கள் "இயேசு ஒரு அற்புதம் மட்டும் தான் செய்தார் " என்று எழுதுகிறீரே? அதை நீங்கள் எந்த வசனத்திலிருந்து எடுத்தீர்கள்?
 
2. மாற்கு 6:2ம் வசனத்தில் அவரது பலத்த செய்கைகளை(அற்புதங்களை) கண்டு மக்கள் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதே போல, மாற்கு 6:5ம் வசனத்தில், "சில நோயாளிகளை சுகமாக்கினார்" என்று சொல்லப்பட்டுள்ளது. "பலத்த செய்கைகள்" என்று பன்மையிலும், "சில" என்று இரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சொல்லப்பட்டு இருந்தால், உங்களுக்கு "ஒன்றே ஒன்று மட்டும்" என்று எப்படி இவைகளில் தெரிந்தது?
 
3. எப்படி இப்படி பைபிள் வசனம் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? கற்பனை அதிகமாக இருந்தால், அதை உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை விவரிக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதை ஏன் பைபிளில் பயன்படுத்துகிறீர்கள்?

இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு) - New 11-12-2007
யூதர்களின் வீணான சடங்குகளினால், அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறுகிறார்கள் என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். இப்படிப்பட்டவர்களின் தொழுகை வீண் என்றுச் சொல்கிறார். இதை தவறாக புரிந்துக்கொண்டார், இஸ்லாம் கல்வி தள கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள். அதைப் பற்றி மேலும் விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் - New 06-12-2007
இஸ்லாம் கல்வி தள கட்டுரை, சில பைபிள் வசனங்களுக்கு புதுப் புது அர்த்தங்களைச் சொல்லியுள்ளது. அவைகள் தவறான புரிந்துக்கொள்ளுதல் என்று இக்கட்டுரை பதில் அளிக்கிறது.

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில் - New 27-11-2007
பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்:
 
1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.
3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்?
4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது.
5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில் - New 12-11-2007
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்: தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். திரித்துவ கொள்கையை உருவாக்கி, கிறிஸ்துவத்திற்குள் பவுல் நிழைந்தார் என்ற பி.ஜேயின் குற்றச்சாட்டிற்கு பதில் இக்கட்டுரையில் காணலாம்.

நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் - பாகம் 1 - New 09-11-2007
இது ஒரு கற்பனை நாடகம். முகமதுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஒரு முஸ்லீம் நாட்டில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா, மற்றும் பவுல் நற்செய்தி சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள். முதல் நாள் அரச சபையில் இஸ்லாமிய அரசருக்கு முன்பாக பேதுரு கொண்டுவரப்படுகிறார். அரசருக்கும், பேதுருவிற்கும் இடையே நடக்கும் கற்பனை உரையாடல் தான் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.

தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் - New 29-10-2007
கிறிஸ்தவ எபிரேய சொல்லாகிய "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு தமிழ் முஸ்லீம் தளம் சொல்லும் பொருள் எவ்வளவு வேடிக்கையானது என்பதை அறிய இங்கு சொடுக்கவும்.

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி - New 25-10-2007
"இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. முகமதுவும் "இயேசுவிற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்கிறார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வீர்கள், இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம் தளங்களின் கட்டுரைகளும் எங்கள் பதில்களும்
1. இயேசுவின் வரலாறு தொடர் 1 லிருந்து 5 வரை
2. இஸ்மவேலை புகழும் பைபிள்
3. யூதா, தாமார் நிகழ்ச்சி
4. பைபிளில் முகமது?

இது தான் இஸ்லாம் "பாரான் அக்னி பிரமானம்" கட்டுரைக்கு பதில்
 
 

1. சகோ. மைகோவை அவர்களின் பதில் - 1