இயேசுக் கிறிஸ்து
1) குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா?
2) இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?
"இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. முகமதுவும் "இயேசுவிற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்கிறார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வீர்கள், இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல. இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முகமது போதித்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். இக்கட்டுரையில் இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு முகமதுவின் வாழ்க்கையை ஆசிரியர் ஒப்பிடவில்லை, மாறாக இவர்கள் இருவரின் போதனைகள் ஒன்றல்ல என்பதை மட்டும் காட்டுகிறார். இதை படித்தபிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம், அது என்ன? இயேசு ஒரு இஸ்லாமிய நபியோ (அ) தீர்க்கதரிசியோ அல்ல. இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் வெவ்வேறானவை ஒன்றல்ல. இரண்டும் இருபெரும் துருவங்கள், என்றும் ஒன்றாக கலக்காத இரயில் தண்டவாளங்கள். எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பது தான் கேள்வி. |