கவிதை‎ > ‎

கவிதை-15

இரு குழந்தைகள் - பாகம் இரண்டு

பாகம் இரண்டு:பள்ளியில் சேர்க்கை

இங்கோ குழந்தைக்கு வயது மூன்று நன்றாக வளரும் கன்று
தாய்குழந்தை பால் கேட்க காத்திருந்து குழந்தை வளர்ந்தது நன்று
தந்தை வேலை முடிந்துவந்ததும் என் குட்டிப்பையன் எங்கே என்று தேட
அந்த குழந்தையோ தந்தையின் வாசம்அறிந்து அவனைத்தேடி ஓட
அப்பா வந்தாச்சு பார்த்தியா என்று குழந்தை மழலையில் தாய்பேச
டேய் ஆபிஸ்லேர்ந்து வந்த உடனே குழந்தையை தொடாதே என்று பாட்டி ஏச
என்குழந்தைய பார்க்காமே வேலையே ஓடலைம்மா என்று பாசம் பொழிய
இல்லைன்னா மட்டும் வேலைபார்கிறீங்களா என்று மனைவி வழிய
நீங்கள் இருவர்தான் என் உலகம் என்று மனைவியிடம்கண்களால் உறுதியளிக்க
காப்பி காரம் இனிப்பு என்று குடும்பத்துடன் அவன்களிக்க
பள்ளிக்கூடம் எப்பபோது சேர்ப்பது என்று அனைவருடன் விவாதம் செய்ய
எங்ககாலத்தில் அஞ்சு வயசிலே பாடசாலை போனோம் என்று தாத்தா வைய்ய
உங்க காலம் வேறப்பாஇப்ப கம்ப்யூட்டர் காலம் பிறந்த குழந்தை ஸ்கூலுக்கும் போகும்
சரிப்பா அருகில்இருக்கும் பள்ளியில் போடு இல்லாவிட்டால் தாய் மனம் நோகும்
பிறகு அந்த இளம் தந்தைபள்ளிக்கு அனுமதி சீட்டு வாங்கும் வரிசையில் நின்று
கால்கடுக்கக வெயிலில் தந்தைமகனுக்கு ஆற்றும் உதவி என்று
பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு அளவுக்குபுத்தகம் வாங்கி
பள்ளி சீருடை கால் சட்டை மேல் சட்டை புத்தகப்பை வேறென்னமறந்தோம் என்று ஏங்கி
குட்டிக்கு மதிய சாப்பாட்டு டப்பா வாங்கவில்லை என்றுமனைவியிடம் குட்டுப்பட்டு
இது தான் நீயும் வரணும்னு சொன்னேன் இந்த பட்டியிலில்இருக்கா காட்டு
நான் வீட்டிலே எத்தனை வேலை செய்யறது உங்கம்மாக்கு கால்வலி
அப்பாவுக்கு ஓய்வூதியம் வாங்க உதவி செய்து மின்சார பில் கட்டி
இன்னும்எத்தனை வேலை பையன் வேண்டும் என்று கேட்டாயே அல்லல்படு
அவன் என் பையன் மட்டுமோஉனக்கும் பையன் தானே என்று செல்லமாக கடிந்துவிட்டு
காலையில் எழந்துகுளித்துவிட்டு பூஜை செய்து சீக்கரம் குட்டியை தயார் செய்
இல்லை நேற்றுப்போலதாமதம் செய்தால் நீயே அவனை அனுப்பி வை
நீங்க தயார் ஆகறத்துக்குள்ள எட்டு பசங்களைதயார் பண்ணுவேன் - இது தாயார்
இதற்குள் குழந்தையை குளிப்பாட்டு பொட்டு இட்டுகுழந்தையும் தயார்
கன்னதில் சிறிய திருஷ்டி பொட்டு முகத்தில் செல்லமாக ஒருமுத்தம்
இன்னிக்கு அம்மா சீக்கிரம் வந்துடுவேன் கண்ணா என்று செய்யும்ஆயுத்தம்
அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அனைத்து அம்மாக்கு டாட்டாசொல்லு
தாத்தாக்கு டாட்டா சொல்லு பாட்டிக்கு டாட்டா சொல்லு என்று அவன்கட்டிநிற்கும் மல்லு
குடும்பமே வந்து வழியனுப்ப இரண்டு சக்கிர வாகனத்தில் வாகாகநிற்கவைத்து
முன்னாடி பிடிச்சுக்கோ கண்ணா என்று அன்பாய் அறிவுரை அது நிற்கும்அழகில் லயித்து
மனைவிக்கு டாட்டா சொல்லி பள்ளிக்கு சென்று வாசலில் இறக்கிவிட்டு
வாத்தியாரம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் வகுப்புக்கு செல்லும் வரைநின்றுவிட்டு
மதியம் ஏதோ காரணம் சொல்லி அலுவலகத்திலிருந்து அனுமதிபெற்று
குழந்தையை அழைத்து வீட்டிற்கு கொண்டு விட்டு சாயங்காலம் வரேன்என்று
ஓடி வேலைக்குச் சென்று அவசரமாக வேலை முடித்து மீண்டும் குழந்தையைகாண
குழந்தையின் அப்பா வருவார்டா கண்ணா என்று தயார் செய்து இவ்வாறேபேண
குழந்தையை தெய்வமாய் எண்ணி ஒரு ஏற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறதாம் இந்தகுழந்தை!

இங்கோ பள்ளி எது என்று அறியாத ஒரு அம்மா அப்பா குடும்பஅவலம்
குழந்தை தானாகவே எப்படி வளர்ந்தது என்று இங்கு கண்டு அறியஇயலும்
குப்பத்தின் அழுக்கில் வாழ்ந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துவாழ்ந்து
இந்த தேசத்திற்கு ரிக்ஷா ஓட்டுனரையும் முடிதிருத்துவோரையும்ஈன்று
வேலைக்காரகிளையும் துணிவெளுப்பபோரையும் உருவாக்கி
எலும்பும் சதையுமாய்உயிரே உயிரைவிடும் வாழ்க்கையில் உயிரை கலக்கி
பீடி சாராயம் சகதியில் வாழ்க்கைவெந்ததை தின்போம் விதி வந்தால் சாவோம்
ஓட்டு போட காசு வாங்கி மீதி ஐந்துவருடங்கள் வறுமையில் வாடுவோம்
வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர்நடத்தும் மாநாடு
அண்டா குண்டா சேலை வேட்டி என்று ஜனநாயகம் நடத்தும் இலவசகேடு
கல்யாணம் என்பதே இந்த கூட்டத்தில் சில பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு
பலதிருமணம் பல மனைவிகள் பலர் செய்யும் சமூக ஏய்ப்பு
பல குழந்தைகள் இதில் பலஏதற்காக பிறந்தன என்று அறிவதற்கு முன்னே
ஆட்டுக்கறி சமையலுக்கு பதிலாக மனிதர்களைபோடலாமா பின்னே
இதன் நடுவில் அறிவொளி இயக்கம் போல சில நல்லஇயக்கங்கள்
ஆனாலும் இதிலும் சிலருக்கு குப்பங்களில் செல்லதயக்கங்கள்
அப்படியும் சிலர் இதுபோல இடங்களுக்கு செல்ல சிக்கியதுஇக்குழந்தை
முகம் ஒட்டி ஆடையில்லாமல் கொசு கடித்து தடித்த முகம் அழுது சிவந்தகண்ணம்
மூக்கில் சளி ஒழுகி ஒழுகி காய்ந்து இதற்கும் மேல் ஒழுகு சளியில்லைஇன்னும்
குழந்தையின் அப்பாவிடம் சென்ற இந்த சமூக சேவகி கல்வியின்முக்கியத்துவத்தை அறிவுறுத்த
பீடி பிடித்துக்கொண்டே லுங்கியைஏற்றிக்கட்டிக்கொண்டு தந்தை வெக்கமில்லாமல் கேட்டு
அம்மா சமூக சேவகியின்உதவிக்கு வந்து சாப்பாடு போடுவாங்களாங்க
பொஸ்தகம் வாங்கி கொடுத்து மத்தியானம்முட்டை போடுவாங்களாங்க
துணிமணியும் உண்டுன்னு இந்த அம்மா சொல்லுறாக வேணாம்னுசொல்லாதீங்க
இந்த கெஞ்சலை கேட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரியாத அந்த ஜந்துஎன்னங்க
எனக்கு என்ன கொடுப்பீங்க என்று அதிலும் காசு தேட
இத பாருங்கஅரசாங்கம் உங்களுக்கு உதவி செய்யுது காசு கேக்காதீங்க இதுக்கு கூட
எத்தையாவதுசெய்து தொலைங்க நான் கூலிக்கு போவனும் என்று அங்கிருந்து விலக
இதப்பாரும்மா வரபத்தாம் தேதி பள்ளிக்கூடம் திறக்குது அவசியம் வாங்க
பல முயற்சிகளுக்கு பிறகுஅந்த குழந்தைக்காக பேச ஒரு ஜீவன்
ஆன்டிக்கு டாட்டா சொல்லு என்று அம்மாவுக்குதெரிந்த ஆங்கிலத்தில் ஒரு முயற்சி
குழந்தையை தொட்ட கையோடு கிறுமிநாசினையை போட்டுகழவவேண்டிய இகழ்ச்சி
ஆனாலும் இந்த சுயலமுள்ள பொது நலத்திலும் சிலர் பெறும்வெற்றி
பல பிள்ளைகளை உணவிற்கு ஆசை காட்டி பள்ளியில் சேர்க்க சுற்றி
அப்படியாகபள்ளியில் சேர கிடைத்தது இந்த குழந்தைக்கு ஒரு வாய்ப்பு
மீண்டும் பள்ளி திறப்புநாளன்று அந்த சமூக சேவகி வந்து நினைவுறுத்த
குழந்தையின் முதல் பிறந்த நாளுக்குமுதலாளியம்மா கொடுத்த துணி துவைத்து
காயவைத்து சற்று பெருத்த குழந்தைக்குகஷ்டப்பட்டு அதைப்போட்டு
இந்தாங்க கொழந்தைய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வாங்கஎன்று கோரிக்கை வைத்து
தா இந்த சனியன் படிக்க போகுதா வேற வேலையில்ல நீயே போ சாவுகிராக்கி
இனி பேசிப் பிரயோஜனம் இல்லை என்று அவளே அந்த குழந்தையைதூக்கி
பள்ளிக்கூடம் போறோம்டா கண்ணா என்று ஏதோ நம்பிக்கை ஊட்டி
வருவதைஅறியாமல் குழந்தையை சுமையாக நினைக்கும் ஒரு இடத்தில் பிறந்து
அரசாங்கம் தரும்இலவச கல்வி உடை உணவை நம்பி வாழ்ந்ததாம் அந்த குழந்தை!!